Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போராட்டத்தில் இணைவோம்-எம்.சி. அகமட்
#1
<b>தம்பி பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செல்லத் தயாராகவுள்ளோம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி. அகமட் </b>

தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களையும், தமிழ் மக்களையும் சுனாமி ஏற்படுத்திய பாதிப்பிற்கு அவர்களின் அபிவிருத்தியை பேரினவாத அரசியல்வாதிகள் முன் எடுக்கவில்லை. இந்நிலையில் முஸ்லிம் மக்களுக்கும் அபிவிருத்தியிலும், நலன்களிலும், தமிழீழ விடுதலைப் புலிகளே அக்கறை செலுத்தினர் என இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி. அகமட் தெரிவித்தார்.

பட்டிருப்புக் கோட்ட அரசியல் பணிமனையில் கடந்த வியாழக்கிழமை முஸ்லிம் பிரமுகர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பட்டிருப்புக் கோட்ட அரசியல் பொறுப்பாளர் செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அகமட் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்:-

முஸ்லிம் காங்கிரசோ மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளோ இழந்த நிலங்களை பெற்றுத்தரவில்லை.

ஜே.வி.பி.யும் சிங்கள பௌத்த, பேரினவாதிகளும், புத்தர் சிலைகளை நிறுவி பௌத்த நாடாக மாற்றும் முயற்சியிலீடுபட்டுள்ளனர். உல்லையிலும், பொத்துவில்லிலும், திருமலையிலும் வைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலைகளே உதாரணமாக அமைகின்றன. இதை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்கள் தான் முஸ்லிம் காங்கிரசும், ஆட்சியிலிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும். இப்படியான பச்சோந்திகள் இஸ்லாமியத் தலைவர்களாக இருப்பது வெட்கக்கேடானது.

இனியும் வடகிழக்கு முஸ்லிம் பிரதிநிதிகளை நம்பத்தயாரில்லை. ஆகவேதான் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்த போராட்டத்தில் தமிழீழத்தை மீட்டு எடுக்கலாம். இதய சுத்தியுமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை நம்புங்கள். துலாம்பரமாகக் காண்கின்றோம். தம்பி பிரபாகரனுடைய போராட்டத்தை முன் எடுத்துச் செல்வதற்கு தயாராக உள்ளோம்.

கண்டியிலிருந்தும் பேருவளையிலிருந்தும் உருவாகும் தலைமைப்பீடம் மாறவேண்டும். வடக்கு கிழக்கிலிருந்து தலைமைத்துவம் உருவாக வேண்டும். அந்தந்த தலைமைத்துவம் தேசியத் தலைவர் பிரபாகரனோடு இணைந்து முஸ்லிம் உரிமைகளை வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.

தேசியத்தலைவரின் போராட்டம் வட - கிழக்கு தமிழர்களுக்கு மட்டுமின்றி முஸ்லிம்களுக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று தங்கள் பணிகளை செய்வதற்கு உறவுகளைப் பலப்படுத்தி ஒன்றிணைவோம் எனக்கூறினார்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)