Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இந்தக் கேள்விகளுக்கு...
குறந்தது 3 பரிமானங்கள் உண்டு...
1. இக்கேள்விகள் மூலம் இன்னென்ன வடிவத்தில் புலி எதிர்ப்பைக் காட்ட சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை இனங்காட்டல்...!
2. இக்கேள்விகளுக்கு யதார்த்தச் சூழலை வைத்து விடை தேட அனுமதிப்பது என்ற போர்வையில் நடைமுறை புலி எதிர்ப்பை இனங்காட்டலும் அதன் மீதி ஆர்வத்தைத் தூண்டலும்..!
3. (அ) இக்கேள்விகளுக்கு தகுந்த விடைகள் அளிக்கப்பட முடியாது என்று நிரூபிக்க முயற்சி எடுக்கப்பட்டாதாக இனங்காட்ட முற்படல்... அதன் மூலம் புலி எதிர்ப்பு எந்தளவுக்கு வெற்றிச் சாத்தியமற்றது எனக் காட்ட முற்படல்.... (ஆ) அல்லது புலி எதிர்ப்பை வெற்றியாக்க எப்படி அதைச் செய்ய வேண்டும் என்பதை சாதுரியமாக ஒப்பீட்டு ரீதியாக இனங்காட்டல்...!
(இதை நிரூப்பிக்க வேண்டின் கேட்டவரே கேள்விகளுக்கு தன்னாலான ஒரு விளக்கத்தையும் கொடுத்து மறுதலிப்பையும் கொடுத்திருக்கலாம்...ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் விட்டது கருத்தியல் மயக்கதைக் கொடுத்து மேலே சொன்ன 1ம் 2ம் 3 (ஆ) பரிமானங்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பதையே பெரிதும் விரும்புவதாகக் இனங்காட்டுகிறது...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
அப்படி வேறு இருக்கா :? :roll:
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
ஊமையவர்களே சற்று தப்பாக எனது கருத்தை விளங்கியிருக்கிறீங்கள் போலுள்ளது. மீண்டும் முயற்சிக்கிறேன்.
இந்த விவாத தலைப்பு புலிகள் மீது விசமப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததாக நான் எண்ணவில்லை அதைத்தான் கூற முனைந்தேன். புலிகளின் தியாகம் கட்டுப்பாடுää வீரம் கொள்கைப்பற்றுறுதி போன்றவற் விளங்கியவர்கள் உணர்ந்தவர்களிற்கு நீங்கள் சொல்லாமலேயே புலிகளை விமர்சிக்கவோ தமிழ்தேசியத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்ளையோ கூற மாட்டார்கள்.
புலியெதிர்ப்பு அரசியலில் ஏமாற்றுப்படக்கூடியவர்கள் உங்களை மாதிரி அங்கிருந்து அழிவுகளை நேரில் கண்டு அனுபவித்து உறவுகளை இழந்து உண்மைநிலையை உணர்ந்தவர்கள் அல்ல. ஆனால் இந்த அவலங்களில் ஒரு சிறுபகுதியை தன்னும் அனுபவிக்காது புலத்தில் வழர்ந்துவருவோரின் பார்வை வித்தியாசமாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் நேரில் அனுபவிக்காத ஒன்றை சரியாக பலத்த பிரச்சாரயுத்திகளின் மத்தியில் விளங்கிக்கொள்ளுவது கடினமென்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
புலத்தில் இருக்கும் எதிர்கால சந்ததியின்முன் "மானமுள்ள தமிழனிற்கு கோவம் வரும்---" "அகதிக்காசில் வயிறுவளர்த்துகொண்டு..." என்று செந்தமிழ் பாசத்தை பொழிந்தீர்கள் எண்டால் நீங்கள் புலிகளிற்கும் தமிழ்தேசியத்திற் எதிராக பிரச்சாரம் செய்வேர்பக்கம் தான் புலத்திலுள்ள எதிர்கால சந்ததியை தள்ளிவிடுவீர்கள்.
தூங்குபவனை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்பமுடியாது எனவே புலி எதிர்பரசியல் நடத்துவோரோடும் தமிழ்தேசியத்தை கொச்சைப்படுத்துவோரோடும் விவாதம் செய்து கருத்தாடி திருத்தமுடியாதொன்பதை நானும் நம்புகிறேன். எமது முயற்சி இவர்களை திருத்துவதல்ல. கருத்துச்சுதந்திரம் உள்ள மேலத்தேயத்தில் எவ்வளவு நியாயமான உண்மையையோ நிதானமாக முன்வைத்தால்தான் அது வெற்றியளிக்கும்.
உங்கள் உறவினர்கள் நண்பர்கள் போரளிகளாக இருப்பார்கள் பலரிற்கு மாவீரர்களையும் தனிப்பட்டரீதியில் தெரிந்திருக்கும்ää உங்களிற்கு தெரிந்தவர்கள் அங்கவீனமுற்று இருப்பார்கள். போரினால் எமக்கு இவ்வாறு கிடைத்த நேரடி அனுபவங்களை போராட்டத்தின் நியாயத்தன்மையை ஆளமாக களங்கம் இன்றி உணரும் வகையில் பக்குவப்படுத்தியுள்ளது.
இந்த பக்குவத்தை புலத்தில் வழர்ந்துவரும் எமது எதிர்கால உறவுகளிடம் எதிர்பார்ப்பது நியாயமென்று நான் நினைக்கவில்லை. அவர்களை மூளைச்சலவை செய்வதில் எதிரி அக்கறை காட்டுகிறான்.
அதை எமது பக்கம் நியாயம் இருப்பினும் நிதானமாக கூறித்தான் வெற்றிகொள்ளமுடியும்.
புலியெதிர்ப்பு அரசியல் நடத்துவோரின் வாதங்களிற்கு எவ்வாறு பிரதிவாதம் நிதானமாக வைக்கப்படவேண்டு என்று கூறுங்கள் அது ஆக்கபூர்வமாக இருக்கும்.
இத்தோடு இன்னுமொன்றை கூற விரும்புகிறேன். எமது மக்கள் மத மூடநம்பிக்கைகளிற்கு எவ்வாறு அடிமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழ் தேசியத்திற்கு ஆதரவுக்கருத்தெழுதுவோர் சிலரில் காணலாம். இந்த ஆதரவுக்கருத்து கூறுவேரின் கண்மூடித்தனமான வர்ணனை எவ்வாறு எதிரியின் கொச்சைப்படுத்தலுக்கு துணைபோகிறது என்பதை உணர்வார்களா?
எம்மில் சிலர் தலைவராக தளபதியாக பிரபாகரனை பார்க்காது கடவுளாக வர்ணித்து எதிரியின் ஏளனத்திற்கு உதாரணங்களாக தம்மை பிரகடனப்படுத்துகிறார்கள்? எமது சமுதாயாத்தால் நேர்மையான நீதியான கடமையுணர்வுள்ள தலைவராகவும் இராணுவ அரசியல் இராஜதந்திர யுக்திகள் தெரிந்த இயற்கை அறிவுள்ள ஒரு சிறந்த தளபதியாக ஏன்பார்காது கடவுள்நிலைக்கு அவரை உயர்த்தி அவரை சங்கடத்திற்கு உள்ளாக்குறீர்கள்?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உண்மையான தமிழன் புலிகளின் பெயரை தனது தேவைக்காக ஒருபோதும் பயன்படுத்தமாட்டான்...புலிகள் ஒரு அரசியல் சமூக விடுதலை வேண்டிப் போராடும் போராளிகள்...அவர்களின் கொள்கையும் கொள்கைப்பற்றும் எம்மைக் கவர்ந்திருக்கிறது...அவர்களுடன் ஒத்துப்போகக் கூடிய எமது கருத்து நிலையை வெளிப்படுத்தல் என்பது புலிகள் சார்ந்து வாழ்வதாக ஆகாது...! நிச்சயமாக புலிகள் பெயராலோ... அல்லது அவர்கள் நடத்தும் போராட்டத்தினைப் பயன்படுத்தியோ...தாயகத்தில் அல்லது புலத்தில் வாழ வேண்டிய எந்தத் தேவையும் இல்லாத தமிழர்களுள் நாங்களும் அடக்கம்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
<b>தனிப்பட்ட கருத்துமோதல்களைத் தவிர்க்கவும்.</b> ஒருவர் இட்ட கருத்துக்கு உங்களிடம் பதில் கருத்து இல்லாவிட்டால், அல்லது அந்தக் கருத்தை புறக்கணிக்க நினைப்பின் கருத்து எழுதாமல் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதைவிடுத்து தனிப்பட்ட மோதல்களை தொடர்வதை களம் அனுமதிக்காது.
<b>தற்காலிகமாக இத்தலைப்பு மூடப்படுகிறது.</b> யாரவது தனிப்பட்ட தாக்குதல் அல்லாத கருத்தினை எழுதவிரும்பினால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.