03-26-2006, 08:43 PM
பிரான்ஸ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இனவெறி கொண்டவர்கள் என்பது கடந்தாண்டு நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள் ளது.
பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைக் கழக அமைப்பின் தேசிய ஆலோசனைக் குழுவினர் (சி.எஸ்.ஏ.,) கடந்தாண்டு கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டனர். ஆயிரத்து 11 பேரை நேருக்கு நேர் சந்தித்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தினர். இதில், 33 சதவீத பிரான்ஸ் மக்கள் இனவெறியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது கடந்தாண்டை விட இனவெறியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையே காட்டுகிறது என இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
சி.எஸ்.ஏ., அமைப்பினர் கருத்துக்கணிப்பின் போது பிரான்ஸ் நாட்டு மக்களிடம் பின்வருமாறு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
"உங்களால் சொல்ல முடியுமா? உங்களுக்கு............' இவ்வாறு கேள்வி கேட்கப்பட்டு பதிலைத் தேர்ந்தெடுக்குமாறு விருப்பங்களின் பட்டியல் பின்வருமாறு தரப்பட்டுள்ளது. அவை, 1)கொஞ்சம் இன வெறி உண்டு, 2)
சிறிதே இனவெறி உண்டு, 3)இனவெறி இல்லை, 4)எப்பொழுதுமே இனவெறி எண்ணம் கிடையாது, 5)
கருத்துச் சொல்ல விரும்பவில்லை.
இந்த ஆய்வு குறித்து சி.எஸ்.ஏ., வின் தலைவர் ஜோயல் தோரவல் கூறுகையில், "" இனவெறி தொடர் பான இந்த ஆய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதியிலிருந்து 22ம் தேதிவரை நடத்தப்பட்டது. மக்களிடையே உள்ள இனவெறியை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளை நேற்றுமுன்தினம் பிரதமர் டொமினிக் டி விலேபின்னிடம் ஒப்படைத்து விட்டேன். மூன்றில் ஒரு பகுதி மக்கள் இனவெறி எண்ணத்தோடு இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது கடந்த முறை எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் அளவை விட அதிகம்,'' என்றார்.
ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 33 சதவீதத்தினர் இனவெறி உண்டு என்றே பதிலளித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் பிரான்சில்தான் யூத இனத்தவர்கள் ஆறு லட்சம் பேர் வசிக்கின்றனர். அதே போல் முஸ்லிம் மக்கள் ஐந்து லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த இரு பிரிவுகளுக்கிடையே அடிக்கடி இனக் கலவரங்கள் வெடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Thnaks;Dinamalar..

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............