Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Three soldiers killed in suspected rebel ambush in eastern
#1
Suspected Tamil rebels ambushed a motorized rickshaw in eastern Sri Lanka Thursday, killing three Sri Lankan army intelligence officers riding in the vehicle, the defense ministry said.

No details were immediately available, but an officer who responded to a phone call at the Military Media Unit said the Liberation Tigers of Tamileelam were suspected in the attack. Media unit members are not authorized to give their names.

The area has seen an increase in killing since the Tamil Tigers split into two opposing factions last year.

Since then, there has been sporadic fighting among the two rebel groups and government troops. But the three soldiers killed Thursday would represent the worst attack against Sri Lankan troops in months.

The 2002 cease-fire, brokered by Norway, halted fighting in the two-decade civil war between the Tigers and the government that had killed about 65,000 people. Subsequent peace talks have been deadlocked over rebel demands for wide autonomy. The government and the rebels signed a deal Friday to share international tsunami aid
Reply
#2
தகவலுக்கு நன்றி வீணானவன்
. .
.
Reply
#3
மட்டக்களப்பில் 3 இராணுவத்தினர் உட்பட 4 பேர் கொலை

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/10/20041012184518srilanka_army_soldiersafp.jpg' border='0' alt='user posted image'>
<b>இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இலக்கு வைக்கப்படுகின்றனர்</b>

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது 3 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு சிவிலியன் உட்பட மொத்தம் 4 பேர் அடையாளந் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இன்று முற்பகல் 10.45 மணியளவில் மட்டக்களப்பு நகருக்கு வெளியே ஊறணி என்னுமிடத்தில ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் உட்பட 3 இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன் ஆர்.எம்.எஸ். குலரத்ன, லான்ஸ் கோப்ரல் கே.டபிள்யு சமன்குமார மற்றும் இராணுவ சாரதியான சமிந்த குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

233வது இராணுவ தலைமையகத்திலிருந்து ஊறணி இராணுவ முகாமிற்கு சென்று கொண்டிருந்த சமயம், இவர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

கொலைக்கு பயன் படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ரி 56 ரக துப்பாக்கியொன்று அந்த பகுதியில் புதரொன்றிற்குள் இருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/11/20041123172243sla_spokesman.jpg' border='0' alt='user posted image'>
<b>விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டுகிறார் பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா</b>

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் தான் பொறுப்பு என இலங்கை இராணுவ தரப்பு பேச்சாளர் பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ள போதிலும் புலிகள் இதுவரை எதனையும் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறை அதனை மறுத்துள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்பு இந்த மாவட்டத்தில் இராணுவ புலனாய்வுத் துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது துப்பாக்கித் தாக்குதல் இதுவாகும்.

கடந்த வருடம் மே மாதம் 8 ம் திகதி மட்டக்களப்பு நகரில் தனியார் பஸ்சில் பயணம் செய்த இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த படை வீரரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இதேவேளை மற்றுமோர் சம்பவத்தில் மட்டக்களப்பு மாவடிவேம்பில் 29 வயதுடைய நடராஜா பரமேஸ்வரன் என்பவர் நேற்றிரவு அடையாளந் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது வீட்டிற்குச் சென்ற இரண்டு நபர்களினால் இவர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார் என்றும், சடலம் இன்று காலை வீதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.

இதற்கிடையில் நேற்றிரவு வவுணதீவிலுள்ள தமது முன்னனி காவல் நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலொன்று தங்களால் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறை அறிவித்துள்ளது.

நன்றி - பிபிசி தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா குற்றஞ்சாட்ட Ţ𼡠¦Åà ±ýÉ §Å¨Ä
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)