Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆசிரியை தாக்கி மாணவி வையித்திய சாலையில்
#1
ஞாயிறு 02-04-2006 17:45 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]

ஆசிரியை தாக்கி மாணவி வையித்திய சாலையில்.
பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டு இருந்த மாணவி ஏனைய மாணவிகளைப் போன்று பரீட்சையெழுதவில்லையெனக் கூறி மாணவியை ஆசிரியை தாக்கியதில் மாணவி யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையின் 15ம் விடுதியில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் கல்விகச் கோட்டத்தில் அமைந்துள்ள ஏழாலை சைவசன்மார்க்க வித்தியாலயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை இடம் பெற்றுள்ளது.

ஏழாலை மத்தியைச் சேர்ந்த ஆண்டு இரண்டில் கல்வி கற்கும் தெய்வேந்திரம் குமுதினி வயது 07 என்பவரே ஆசிரியையினால் தலையை வாங்கில் பிடித்து மோதியதில் கண்களில் பாதிப்பேற்பட்ட நிலையில் வையித்திய சாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

குறிப்பிட்ட மாணவியின் குடும்பம் கஸ்டமான நிலமையில் உள்ள குடும்பம் என்பதும் இத் துடன் குறிப்பிட்ட மாணவியின் இருண்டு கண்களும் வீக்கம் அடைந்து பார்க்க முடியாத நிலமையில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

வையித்திய சாலை வட்டாரங்கள் குறிப்பிட்ட மாணவியின் கண்கள் பாதிப்படைந்துள்ளனவா அல்லது நிரந்தரமாக பாதிப்படைந்துள்ளனவா என்பதனை இன்னும் தெளிவாக குறிப்பிடவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்மாவட்டத்தில் பல சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகள் இடம் பெறுகின்ற போதிலும் சிறுவர் அமைப்புக்கள் என்று கூறிக் கொள்கின்ற பல அரச உத்தியோகத்தர்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் அமைப்புக்கள இருக்கின்ற போதிலும் இவைகள் எல்லாம் பெயரவிளவில் தமது சொந்த நன்மையை மையப்படுத்தி செயல்படுகின்றனவே தவிர உண்மையான விழிப்புணர்வுடன் செயல்படுவதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்கள் குறிப்பாக பல விடயங்கள் வெளியில் வரவிடாமலே மறைத்து வருகின்றமை சம்பந்தமாக கூறுகின்ற கருத்து பாதிக்கப்படவரின் எதிர்காலம் எனக்கூறி பாதிக்கப்பட்டவர் பாதிக்கப்படவராகவே இருக்க காரணமாக இருந்தவரை பாதுகாப்பதற்காகவே இத்தகைய போலி காரணங்களை கூறிவருகின்றார்கள் எனவும் பாதிக்கப்பட்ட பலர் கூறியுள்ளமையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/teacher-attack-1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
காட்டுமிராண்டி ஆசிரியர்,,, இலங்கையில படிப்பிக்கிற பல தமிழ் வாத்திமாரை வெளி உலகத்துக்கு கூட்டிக்கொண்டு காட்டனும்,, இப்படி இப்படி படிப்பிக்கனும் எண்டு,,,

மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு காட்டிமிராண்டி செயல்.... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
என்ன டன் தலையில் வாத்தியாரிடம் டங் டங் என்று கொட்டனால் தட்டு வாங்கிய கடுப்பா?
.

.
Reply
#5
<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->என்ன டன் தலையில் வாத்தியாரிடம் டங் டங் என்று கொட்டனால் தட்டு வாங்கிய கடுப்பா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதெயேனப்பு சொல்லுவான்,,, சுமார் 30 வருடங்களுக்கு முன்னால (டொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்க்ங் அட பிளஸ்பாக்கப்பா...)

ஆசிரிய: டன் மேசையில ஏறி நில்,, கையை தூக்கு,,, கண்ணை மூடு,, டமார் டமார்,, எண்டு வுழுந்த அடியை மறக்கமுடியுமா?

சாச்ச்சா... என்ன அடி, என்ன அடி,,,, டன்னிண்ட கண்ணில இருந்து ஒரு கண்ணீர் துளி கூட வரல்லை தெரியுமா? ஏன் தெரியுமா, அடிச்சுக்கொண்டே வாத்தியார் சொன்னார் டன்னு ரொம்ப நல்லவன் அப்படி எண்டு சொல்லிப்புட்டரப்பா..... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
அடிச்சால் தான் பிள்ளை படிக்கும் என்ற என்ணம் எப்போதுதான் எமது வாத்திமாருக்கு விளங்கபோகுதோ தொரியவில்லை. எனக்கும் கனபோரில் அத்திரம் இருக்குது இருபாளை எக்ஸ்பிரஸ் வரதன் மாஸ்டர், மத்திய கல்லுரி வாலா மாஸ்டர். எப்படி என்றாலும் அந்த சிறுமி குணமாக வேண்டும் என்று கடவுளை பிராத்திப்போமக!!!
!!!
Reply
#7
அட நீங்களும் வரதன் வாத்தியாருட்ட அடி வாங்கின் ஆளா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நானும்தான் :oops:
.
Reply
#8
அடிக்கிறதுக்காகவேண்டியே சிலதுகள் ஆசிரியராகுதுகள் போல. மிகவும் வேதனையைத்தரும் விடயம். பெரியவர்கள் சிறார்கள் மீது தங்கள் பலத்தினை பிரையோகிக்கும் காட்டுமிராண்டித்தனமே இது. பண்பாய் அறிவூட்டும் ஆற்றல் வேண்டுமே அன்றி பயமுறித்தி புத்தி புகட்டும் பழக்கம் வேண்டவே வேண்டான். இச்செயலினை வன்மையாக கண்டிக்கின்றோம். :evil: :evil: :evil: :evil: :evil:
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#9
நடு வீதியில் நிற்க வைத்து சுட வேண்டும்....ஆசிரியராக வேலை பார்ப்பவர்களில் அனைவருக்கும் ஆசிரியராகும் தகுதி இருப்பாதில்லை...கண்டிக்கப்பட வேண்டிய செயல்.ஆசிரியரின் பிள்ளைக்கு இப்படி செய்தால் தாங்குவாரா?
[b][size=15]
..


Reply
#10
அதில்லை அப்பு பிரச்சனை...உந்த வாத்திமார் ரீச்சர்மார்..வீட்டிலை மனுசன் மனிசை யோடை ஏற்படற பிரச்சனை பக்கத்து வீட்டுக்காரனோடை ஏற்படற பிரச்சனை எல்லா கோபத்தையும் அவையாட்ட காட்ட முடியாமால்...பள்ளிக்கூடம் வந்து படிக்கிற பொடியளிட்டை தான் காட்டுறவை...
Reply
#11
செய்திக்கு நண்றிகள்
நாங்களும் நிறைய வாங்கினோம் ஆனால் ஊருக்கு தெரியதது.
ம்ம்ம்.........
தொழில் நுட்ப முன்னேற்றமா,, மநிதவக்கிரங்களா,,,
எதை நோவது....எதை பாராட்டுவது.........
Reply
#12
இலங்கையில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க முடியாது என்று சட்டம் உள்ளது. பாடசாலை அதிபர் மட்டுமே தண்டிக்க முடியும். இதனைப் பெரும்பாலான ஆசிரியர்கள் கடைப்பிடிப்பதில்லை; மக்களும் ஆசிரியர் தண்டிப்பதனால் தம் பிள்ளை படிப்பதாக நினைத்து ஒன்றும் பெரிதுபடுத்துதில்லை. அது அவர்களிற்கு சாதகமாக அமைந்து விடுகிறது. மாணவர்களை அடித்தனால் எனக்குத் தெரிந்து இரண்டு ஆசிரியர்களிற்கெதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.Idea

இப்படி எல்லாம் சொல்லுற நான் அடிவாங்கவில்லையா என்று நீங்கள் நினைக்கலாம். இவ்வளவும் பாடசாலையை விட்டு விலகும் காலத்தில் தான் தெரியவந்தது. சிறிது முதல் தெரிந்திருந்தால் எத்தனை பேரை உள்ளே போட்டிருக்கலாம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b>
...</b>
Reply
#13
அந்த ஆசிரியர் கண்டிக்கப்படவேண்டியவர்.

சில ஆசிரியர்கள் வீட்டில மனிசியின் கோபத்தினைப்பிறகு வகுப்பு மாணவர்களிடம் காண்பிப்பதுண்டு. சிலர் பெற்றோர்களில் உள்ள கோபத்தினைப்பிள்ளைகளிடமும் காண்பிப்பதுண்டு. ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு குணம். ஒரு ஆசிரியர் சொல்லும் உதாரணத்தினை, இன்னொரு ஆசிரியருக்குச் சொன்னால் கோபம் வரும்.

சில இடங்களில் மாணவர்களினாலும் ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவார்கள். தெல்லிப்பளை பாடசாலை ஒன்றில் படித்த ஒரு ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒருவர் 88,89 களில் இந்தியராணுவக்காலப்பகுதிகளில் மருதனார்மடம் முகாமில் இருந்து கொண்டு துப்பாக்கியுடன் அவ்வீதியால் போகிறவார தான் படித்த பாடசாலை ஆசிரியர்களுக்கு துவக்கினைக்காட்டி வெறுட்டுவாராம். இந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் மாணவர் வகுப்பில் ஒழுங்காப்படிப்பதில்லை. சரியான குழப்படி. அனாலும் ஆசிரியர்கள் அவருக்கு அடிப்பதில்லை. நன்றாகப் படிக்கப்புத்திமதி கூறுவார்கள். இது அவருக்குப்பிடிப்பதில்லை. எட வகுப்பில் புத்திமதி கூடச் சொல்லக்கூடாதோ என்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கவலைப்பட்டார்கள்.
! ?
'' .. ?
! ?.
Reply
#14
மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு காட்டிமிராண்டித்தனமான செயல், அவர் யாரென அடையாளம் காட்டப்படவேண்டும்;
HAVA A NICE DAY
Reply
#15
மாணவனுக்கு நட்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு
[புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 15:00 ஈழம்] [கொழும்பு நிருபர்]
கொழும்பில் பாடசாலை மாணவன் ஒருவனை கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட மாணவனுக்கு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று ஆசிரியருக்கு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மாணவனை கன்னத்தில் அறைந்து காயம் ஏற்படுத்தியதாக 2000 ஆம் ஆண்டு ஜுலை 19 ஆம் நாள் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி ஆசிரியர் லலித் பண்டார தென்னக்கோன் மீது குற்றம்சாட்டப்பட்டது.

சம்பவம் நடந்தபோது 17 வயது பாடசாலை மாணவன் தேர்வெழுத தாமதமாக வந்துள்ளார். இதனால் மாணவனை ஆசிரியர் தென்னக்கோன் அறைந்துள்ளார். இதில் மாணவனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மாலினி ரணதுங்க, மாணவர் தனது கல்வியைத் தொடருவதற்காக மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை நட்ட ஈடாக ஆசிரியர் தென்னக்கோன் அளிக்க உத்தரவிட்டார்.


Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
இதே போல் ஒரு பிறர்துன்பத்தில் இன்பம் கொள்ளும் கொடூரமான செயல் ஆசிரியர் ஒருவரால் என்னிலும் நிகழ்த்தப்பட்டது. நான் 2ம் வகுப்பு படித்துகொண்டிருந்த நேரம்.... இடைவேளைக்கு பின்னர் இவரது பாடம் தொடங்கும். மாமரத்துக்கு கீழே சீமேந்தினால் வட்டமாக கட்டு(குளக்கட்டு போன்றது) அதிலே பெண் பிள்ளைகளை இருக்கவைப்பார். ஆண் பிள்ளைகள் சிலருக்குதான் கட்டில் இடம் இருக்கும் மீதிப்பேர் மண்ணில் இருக்க வேண்டும். பெண் பிள்ளைகள் பாடத்தில் ஏதும் பிழை விட்டால் அடிக்க மாட்டார் ஆண்கள் பிழை விட்டால் தாறுமாறாக அடி விழும்.
இந்த இம்சைகள் தாங்க முடியாமல் ஒரு நாள் இடைவேளை முடிந்த பின்னர் பாட்சாலையின் பின் பக்கதில் ஒழிந்துகொண்டேன். நான் இப்படி பதுங்கி இருக்கும் விடயத்தை எப்படியோ கேள்விப்பட்ட ஆசிரியர் இரண்டு பேரை அனுப்பினார் என்னை கூட்டி வரும் படி. நானும் போனேன். என்ன ஏது என்று கேட்கவில்லை. அடித்தான் எனக்கு. நானும் வாங்கிகொண்டு நின்றேன். பல அடிகள் விழுந்த பின்னர் என்னை கேட்டான் <span style='color:darkred'>நான் இவ்வளவு அடிக்கிறேன் நீ இன்னும் அழவில்லையா என்று. நானும் இந்த நாய் எவ்வளவு அடித்தாலும் அழக்கூடாது என்று மரம் மாதிரி நின்றேன். முடிவில் வென்றது அவன் தான். நான் முதலிலேயே அழுதிருந்தால் நான் வாங்கிய அடியில் ஐந்தில் ஒரு பங்குகூட வாங்கியிருக்க தேவையில்லை. அவன் அடித்தது நான் செய்த பிழைக்காக இல்லை நான் அழவேண்டும் என்பதற்காவே.

இந்த ஆசிரியரின் பெயர்..ம்ம்ம் இல்லை அரக்கனின் பெயர் நவரத்தினம் எலும்புக்கூட்டிற்கு தோல் போர்த்த மாதிரி முகம். மண்டையில் ஒரு முடி கிடையாது. யாழ்ப்பாணம் பாண்டியந்தாழ்வு அல்லது ஈச்சமோட்டையை சேர்ந்தவர். நான் வளர்ந்து பெரியவன் ஆன பிறகு இந்த அரக்கனுக்கு நல்ல பாடம் புகட்ட வேணும் என்று இருந்தேன் ஆனால் இச்சம்பவம் நடந்து ஐந்தாறு வருடங்களிலே நாய் செத்துபோட்டுது.

இன்று 25 வருடங்கள் கழிந்த பின்னரும் மனம் எவ்வளவோ பக்குவப்பட்டபின்னரும் இவனை யாராவது உயிர்பித்து தந்தால் இவனை நான் அடித்தே கொல்லுவேன். அந்த பிஞ்சு நெஞ்சில் எவ்வளவு விசத்தை ஊற்றிவிட்டு சென்றிருக்கிறான்.</span>
Reply
#17
வகுப்பு
தாயகம் நண்பரே இதிலிருந்து நீங்கள் 2ம் வகுப்பு வரை படித்துள்ளீர்கள்
எண்று அறிய முடிகிறது
சும்மா விளையாட்டுக்கு கூறினேன்

ம்ம்ம்
அவரை அடித்து கொண்டால் உங்களுக்கும்
அவருக்கும் என்ன வித்தியாசம்
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)