Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பகைவர்களாலும் போற்றப்படுகின்ற ஊடகவியலாளராக திகழ்ந்த சிவராம்
#1
இலங்கையிலுள்ள சகல இனங்களையும் சார்ந்த பத்திரிகையாளர்கள் சிவராமின் இழப்பை தமது இழப்பாகவே கருதினர்

அண்மையில்ஹதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்' கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்

நடத்திய 3 ஆவது மாத நினைவு தினத்தில் பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆற்றிய உரை.

சிவராமைப் பற்றிய நினைவு இது. உண்மையில் அவர் மிக முக்கியமான அல்லது ஈடு இணையற்ற முன்னுதாரணமில்லாத ஊடகவியலாளராக தொழிற்பட்டார். அந்தத் தொழிற்பாடுகளிலே வெற்றியை ஈட்டினார் என்பதற்காகவே நாங்கள் அவரை நினைவு கூரவேண்டியிருக்கிறது.

ஏனெனில் அந்த வெற்றி காரணமாகத்தான் அந்த மறைவும் வந்தது என்பது உலகறிந்த விசயமாகும்.

ஒரு இதழியலாளன் அல்லது பத்திரிகையாளன் என்கின்ற வகையில் சிவராம் இலங்கை மட்டத்திலும் தமிழர்கள் மட்டத்திலும் குறிப்பாக இந்தப் பிராந்திய மட்டத்திலும் மிக முக்கியமான ஒரு இடத்தை வகித்து வந்தவர்.

அது மாத்திரமல்லாமல் இங்கு வகித்து வந்த இடம் காரணமாக ஒரு சர்வதேச கணிப்பினைப் பெற்றிருந்தவர். இந்த விடயங்களை, இவை எவ்வாறு நிகழ்ந்தன என்பதனை நினைவு கூருவது மிக அவசியமென்று கருதுகிறேன்.

இலங்கையில் உள்ள சகல இனங்களையும் சார்ந்த பத்திரிகையாளர்கள் சிவராமின் இழப்பை தங்களுக்கு ஏற்பட்ட சொந்த இழப்பாக் கருதி எழுதியிருந்தார்கள். அவருடைய கருத்துகளை மிக வன்மையாக எதிர்த்தவர்கள், சிவராம் யார் யாருடைய கருத்துகளை மிக வண்மையாக எதிர்த்தாரோ அவர்கள்; அவர்கள் எல்லோருமே சிவராமின் மறைவு இலங்கையின் பத்திரிகையியலுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு என்று கூறினார்கள்.

சிவராமினால் இந்தச் சாதனையை எவ்வாறு ஈட்ட முடிந்தது. அதாவது, பகைவர்களாலும் போற்றப்படுகிற எதிர்க் கருத்தாளர்களாலும் போற்றப்படுகிற அந்தச் சிறப்பு சிவராமுக்கு எங்கிருந்து வந்தது; என்று பார்க்கிற பொழுது நாங்கள் இரண்டு விடயங்களை முக்கியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஒன்றுஇ இலங்கையின் இனக் குழுமப் போர் தலைமையில் தீவிரவாத இளைஞர் இயக்கங்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு ஒரு யுத்தமாக மாறிக் கொண்டிருந்த வேளையில், அந்த இயக்க இளைஞர்களைப் பற்றி சரியான தெரிவிப்பு இலங்கை மட்டத்திலோ மற்றையோர் மட்டத்திலோ இல்லாத அந்த வேளையில் இந்தப் போராட்டத்தின் ஆழத்தையும் தமிழ் மக்களுடைய இந்த இளைஞர் இயக்கங்களுடைய போராட்டத்தின் ஆழத்தையும் போராட்டம் எவ்வெவற்றை சுட்டி நிற்கின்றது என்பதனையும், அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தையும் அவற்றின் இன்றியமையாமையும் முதன் முதலில் மற்றைய இனத்தவர்களுக்கு குறிப்பாக, இலங்கையில் உள்ள சிங்கள, முஸ்லிம் மக்கள் அறிந்து கொள்ளத்தக்க வகையில் ஆங்கிலத்தில் எழுதிய பெருமை சிவராமையே சாரும்.

எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது காலஞ்சென்ற நண்பர் மேர்வின் டிசில்வா ("லங்கா கார்டியன்"," டெயிலி நியூஸ்") அவர் ஒரு முறை சொன்னார். ஹதராகி' யுடைய எழுத்துகளின் பின்னர்தான் இந்தப் பிரச்சினை எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பது மாத்திரமல்ல எத்தனை பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது என்பதனையும் உணர்ந்து கொண்டோம். இது முக்கியமானதாகும்.

இப்படியான முறையிலே எழுதுகின்ற பொழுது, சிவராமின் முக்கியமான அம்சம் என்னவென்றால், தான் எடுத்துக் கூறுபவற்றை தான் தெரிவிப்பதை அவர்கள் (மக்கள்) விளங்கக் கூடிய மொழியில் அவர்கள் (மக்கள்) விளங்கக் கூடிய பாணியில் எடுத்துக் கூறுவது.

இந்த தொடர்புறுத்தும் திறன் பத்திரிகைத்துறைக்கு உள்ள மொழியினுடைய பண்புகளுக்கு ஏற்ற முறையில் எடுத்து கூறியமைதான் சிவராமிக்கிருந்த முக்கியமான பண்பு.

அதனை (செய்திகளைஇ தகவல்களை) அவர் எடுத்துக் கூறிய முறைமையில் வெறுமனே ஒரு நடக்கின்ற விசயத்தை தெரிவிப்பதாக இல்லாமல், தன்னுடைய வாசகனுக்கு வேண்டிய பகுப்பாய்வைச் செய்தார். இதன் காரணமாக, சிவராமின் எழுத்தை வாசித்தவர்கள் ஈழத்துப் போராட்டம் பற்றி மேலும் அறிவதற்கு சிவராமை நாடினார்கள்.

அது அமெரிக்க தூதராலயமாக இருக்கலாம், இந்திய தூதராலயமாக இருக்கலாம், பிரித்தானிய தூதரலாயமாக இருக்கலாம், ஐரோப்பிய யூனியனாக இருக்கலாம், ஜப்பானாக இருக்கலாம்; இவர்கள் எல்லோரும் சிவராமிடம் மேலும் தகவல்கள் உள்ளன, சிவராம் பார்க்கின்ற முறைமையில் இன்னும் பல விசயங்கள் (ஈழப் போராட்டத்தில்) ஆழமாக உள்ளன என்பதன் காரணமாக, சிவராம் ஏறத்தாழ இலங்கையில் இருந்த வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் ஒவ்வொன்றினதும் மதிப்பு மிக்க விருந்தினர் ஆனார்.

தெளிவான முறையில் அவர் (இலங்கைப் பிரச்சினையை) எடுத்துக் கூறியதன் காரணமாகத்தான், இலங்கையில் முன்னர் இருந்த அமெரிக்கத் தூதுவர் ஒருவர், சிவராம் இறந்த பொழுது சொன்னார்இ "குணூடிடூச்ணடுச்ண கூச்ட்டிடூண் ‡ஞுஞுஞீ ட்ணிணூஞு கூச்ட்டிடூண் ஃடிடுஞு ஏடிட்". இது ஒரு முக்கியமான விடயம் .

அமெரிக்கா எவ்வாறு இயக்கங்களை, இலங்கை விடயங்களை பார்க்கின்றது என்பது எமக்குத் தெரியும்.

அப்படி இருந்தும் கூட, அமெரிக்காவின் முன்னாள் தூதுவராக இருந்த ஒருவர் அவ்வாறு கூறினார்.

சிவராமிடமிருந்த இன்னுமொரு மிக முக்கிய பண்பு என்ன வென்றால், முகஸ்துதிக்காகவோ நண்பர்களுக்காகவோ அல்லது சொல்லுகின்றவர்கள் முக்கியமானவர்கள் என்பதற்காகவோ, தான் சொல்லவிரும்பியதில் எந்த விதமான விட்டுக்கொடுப்பும் வைத்துக் கொள்வதில்லை.

அவர்களுக்காக ஒரு விடயத்தை சற்று குறைத்துக் கூறுவதில்லை. அந்த விடயத்தின் தாத்பரியத்தை மிக ஆழமாக, வன்மையாக எடுத்துக் கூறுவார்.

இது (இந்தப் பண்பு) இலங்கைப் போராட்டத்தில் தமிழ் நிலைப்பாட்டை வற்புறுத்திக் கூறுவதற்கு உதவுவதாக அமைந்தது.

சிவராம் நமக்கு சாதாரணமாக தெரிந்த பத்திரிகையாளர் அல்லது இதழியலாளர் என்கின்ற முறையில் அவர் விளங்கவில்லை.

சிவராமினுடைய இந்த ஈடுபாடு வெறுமனே பத்திரிகைக்கு எழுத வேண்டுமென்பதோ அல்லது அதனை ஒரு தொழிலாகக் கொண்டதாலேயோ ஏற்பட்டதல்ல. இது மிக மிக முக்கியமானது. சிவராம் அடிப்படையில் இந்த விடயங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்.

இலங்கையில் உள்ள தமிழ்ப் பிரச்சினை மாத்திரமல்ல, பாலஸ்தீனத்தில் உள்ள பிரச்சினைஇ இந்தியாவிலே உள்ள பல்வேறு இனக் குழுமங்களுடைய பிரச்சினை. குறிப்பாக திராவிட இயக்கத்தின் பிரச்சினை. இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இவ்வாறு போராடுவதற்கான காரணங்கள் யாது? இவ்வாறு இவர்கள் முந்திப் போராடுவதில்லையே என்கின்ற குரல் எழும்பிய பொழுது, இராணுவப் போக்கு 0 தமிழ் தன்மையிலே காணப்படுகிறது என்பதற்காக உண்மையில் புறநானூறு முதல் எல்லா வரலாற்று நூல்களையும் பார்த்து மிக அற்புதமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர் சிவராம்.

இவற்றை எழுதிய பொழுதெல்லாம் அவர் சம காலத்தில் வரலாறு எழுதியவர்களால் எந்த முறையில் எழுதப்படுகிறதோ அந்த முறையில் நின்று எழுதியதால்தான் சிவராமுக்கு இந்த முக்கியத்துவம் உண்டு. ஆராய்ச்சி மாத்திரமல்ல, எழுதுகிற முறை அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

இலங்கையில் உள்ள தமிழ்இ சிங்கள வரலாறு பற்றிய குறிப்பாகஇ பௌத்த வரலாறு பற்றிய தமிழ், சிங்கள ஊடாட்டங்கள் எங்கெங்கு உண்டோ அந்த விடயங்களை அறிய வேண்டும் என்ற அவாவோடு சிவராம் நிறைய வாசித்தார்.

உண்மையில்இ இலங்கைத் தமிழர்களின் வரலாறு பற்றிய பல விடயங்களைஇ அண்மைக் கால அரசியல் வரலாறு பற்றிய பல விடயங்களின் உண்மைகளை தன்னுடைய எழுத்துகளின் மூலம் வெளிக் கொணர்ந்தவர் சிவராம்.

சிவராம் பலமுறை என்னிடம் பல கேள்விகளை கேட்டிருக்கிறார். அவர் என்னிடம் கேட்ட கடைசிக் கேள்விகளில் இதுவுமொன்று.

ஹபாளி மொழி இலங்கையில் எப்படி, திபெத்தில் எப்படி எழுதப்படுகிறது" என்று கேட்டார்.

ஏனெனில், பாளி மொழி அந்த அந்த பிரதேசத்தில் பாவிக்கப்படும் எழுத்துகளால் எழுதப்படுகிறது. இதனைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்டார். இலங்கையில சிங்களத்தில் எழுதப்படுகிறது.

இந்த மாதிரியான விடயங்களை என்னால் மறக்க முடியவில்லை.

சிவராம் வாழ்ந்த காலத்தில் மிகவும் தப்பாக விளங்கப்பட்டவர். சிவராமினுடைய நேர்மை, அவரது உண்மைத் தன்மை, அவரது புகழ் பலருக்கு அவர் இறந்ததன் பின்னர்தான் நிரூபணமாயிற்று.

இலங்கை தமிழ் மக்கள் மீது அவர் செலுத்திய கவனம், சிரத்தை இதற்கொரு காரணமாக இருந்தது. அவர் மட்டக்களப்புப் பிரதேசம் பற்றிய மிக முக்கியான சிரத்தையைக் காட்டினார்.

குறிப்பாக, அந்தப் பிரதேசத்தின் வரலாறு அந்தப் பிரதேசத்தின் சமூக, பொருளாதார நிலைமைகள் போன்றவற்றில் மிக ஆழமான அக்கறையைக் காட்டினார்.

இன்று கூட மட்டக்களப்பு வரலாறு பற்றிய கணிக்கப்படத்தக்க எழுத்தாக உள்ளது. சிவராம் அது பற்றி எழுதியுள்ள இரண்டு, மூன்று கட்டுரைகள் தான்.

சிவராமுக்கு மட்டக்களப்பு பிரதேசம் பற்றிய விருப்புக்கள் ஆர்வங்கள் நிறைய இருந்தன. அவை இலங்கைத் தமிழ் ஆர்வத்துக்குள் அமைவனவாக, இணைவனவாக இருந்தன. இலங்கைத் தமிழ் என்று வரும் பொழுது அதனை பிராந்திய ரீதியிலும் இறுதியில் சர்வதேச ரீதியிலும் பார்க்கின்ற ஒரு தன்மை இருந்தது அவரிடம் (சிவராமிடம்).

இதனாலேதான் தமிழ் பிரதேசங்களின் நிலை, இலங்கை தமிழ் மக்களின் நிலைஇ சிங்களஇ முஸ்லிம் மக்களின் நிலை போன்றவற்றை தெளிவாக பார்க்கும் பார்வை அவரிடம் இருந்தது. அதனால் தான் அவரின்மீது எல்லோரின் கவனமும் திரும்பியது.

ஆங்கிலத்திலே எழுதும்போது ஒரு பரிமாணத்தையும் தமிழிலே எழுதும் போது வேறு ஒரு பரிமாணத்தையும் கொண்டிருந்தார்.

தமிழ் மக்களை சிந்திக்க வைப்பவராக, மக்களுடைய அறிவை தூண்டுபவராக இருந்தார்.

"தமிழ் தேசியம்" பற்றி எழுதும்போது கூட மற்றவர்களை திருப்திப் படுத்துவதற்காக அல்லாமல் "தமிழ் தேசியம்' எவ்வாறு சமூக, பொருளாதார சமத்துவத்தை கொண்டுவர வேண்டும் என்ற கருத்தையே முன் வைத்தார்.

மொழி பற்றி அவர் காட்டிய சிரத்தை, மொழியை கையாளுகை பற்றி சிவராமுக்கு இருந்த சிரத்தை, ஒரு சொல்லை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய அக்கறை இவற்றில் அவர் மிக மிக கவனமாக இருந்தார்.

அதனால் தான் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் மிக முக்கியமான சாதனைகளைச் செய்தார் சிவராம்.

நன்றி தினக்குரல்
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)