Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"தியாகிகள் தினம், வீரமக்கள் தினம், .." ????????????
#1
கடந்த சில ஆண்டுகளாக தம்மை மாற்றுக்கருத்தாளர்கள் என்று கூறித்திரியும் ஓரிரு துரோகக் கும்பல்கள் "தியாகிகள் தினம், வீரமக்கள் தினம், .." எனும் பெயர்களில் இறந்த தமது சகாக்களுக்கு நினைவு தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.

நல்ல செயல்! பாராட்டத்தக்கது!!

தேசிய விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்டங்களில் எல்லா தமிழ் இளையர்களும் இலக்கு "தமிழீழம்" என்பதற்காகவே பல்வேறுபட்ட ஆயுதப் போராட்ட இயக்கங்களோடு தம்மை இணைத்து போராடப் புறப்பட்டார்கள். ஆனால் பிழையான தலைமைகள், சொந்த நலன்களுக்காக போராட்டத்தை காட்டிக் கொடுத்த தலைமைகள், ஏகாதிபத்தியங்களுக்கு விலை போன தலைமைகள், ... என்று பலதரப்பட்ட காரணங்களினால் அவர்களின் கனவுகள், கொள்கைகள், அற்பணிப்புக்கள் எல்லாம் சிதைக்கப்பட்டன.

ஆரம்பத்திலேயே "மக்கள் இயக்கம்" "மக்கள் போராட்டம்" என்ற கூச்சலுடன் ஏறக்குறைய பத்தாயிரம் இந்திய ஆயுதப் பயிற்சி பெற்ற இளையர்கள், யுவதிகளைக் கொண்ட "புளொட்" எனும் கும்பலானது, பாதை தவறி அக்கும்பலுக்குள்ளேயே சித்திரவதை முகாம்கள் அமைக்கப்பட்டு ஏறக்குறைய இரண்டாயிரம் அப்பாவி இளையர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இப்படுகொலைகளை அவ்வியக்க முக்கிய தளபதிகளான "சங்கிலி, வாமதேவா, மாணிக்கதாசன், ..." போன்றவர்களாலேயே நடாத்தப்பட்டது. அது மாத்திரமல்ல அக்கும்பலிணைந்த பல யுவதிகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் ஒரு தொகுதியினரின் உடல்கள் பருத்தித்துறை வல்லிபுரம் பகுதிகளில் சவுக்கு காடுகளிலிருந்து 85/86 பகுதிகளில் மீட்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட கும்பலின் அச்சுப்பிரதிகளாகவே "ஈ.பி.ஆர்.எல்.எப்" கும்பலின் செயற்பாடுகளும் இருந்தது. இவர்களின் முகாம்கள் என்று சொல்லப்பட்ட இடங்கள் விபச்சார விடுதிகளாகவே இருந்தது. இளையர்கள், யுவதிகள் ஒரே முகாம்களில் தங்கியிருந்து அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டார்கள். பிற்காலங்களில் அவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

இப்படியிருக்க மேற்குறிப்பிட்ட பெயர்களில் நினைவு தினங்களை கொண்டாட முற்படும் எஞ்சியுள்ள கும்பல்கலைச் சேர்ந்தவர்களுக்கும், அவர்களளோடிருந்து தப்பி புலம் பெயர்ந்த ஆதரவாளர்களிடம் என்முன்னே எழுந்த ஓரிரு கேள்விகளை கேட்க விரும்புகிறேன். முடிந்தால் யாழ்களத்தினூடே பதிலளியுங்கள்.....

1) உங்கள் இறந்த முந்நாள் தலைவர்களாகிய "உமா மகேஸ்வரனோ, பத்மநாபாவோ" இறந்த பிந்தான், உங்களுக்கு உங்கள் கும்பல்களில் இறந்தவர்கள் நினைவுகள் ஞாபகம் வந்ததா? அதன் முன் இறந்தவர்களெல்லாம் தியாகிகளோ அல்லது வீரமக்களோ இல்லையா?

2) உங்கள் கும்பல்களில் இதுவரை எத்தனை போராளிகள் இறந்துள்ளார்கள்? இவை சம்பந்தமான ஏதாவது விபரங்களா அல்லது குறிப்புக்களா வைத்துள்ளீர்களா?

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில் உங்களிடம் இல்லையென்பது யாவருமறிந்ததே! போராட்டத்திற்குப் புறப்பட்ட ஒவ்வொரு தமிழ் இளையர்களினதோ யுவதிகளினதோ தியாகங்கள் நினைவு கூரப்படவேண்டும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை. நீங்கள் செய்வதெல்லாம் அதற்கு மாறாக அவர்களின் தியாகங்கள், அற்பணிப்புகள் எல்லாவற்றையும் கொச்சைப் படுத்துகிறீர்கள், இழிவு படுத்துகிறீர்கள்.

உங்கள் களத்திலிருக்கும் கும்பல்களின் இன்றைய தலைமையினாலேயே, உங்கள் முன்னால் தலைமை படுகொலை செய்யப்பட்டது மறுக்கப்படவோ அல்லது மறைக்கப்பட முடியாத உண்மையாகும். அப்படியிருக்க
ஏனிந்த நாடகங்கள்???????????...........................
"
"
Reply
#2
அப்பு நெல்லையன் எனக்கே வெட்கமாக இருக்குது. தாங்களே குழி தோண்டிப்போட்டு தாங்களே வீரமக்கள் தினம் கொண்டாடுகினம். இறந்தவர்கள் பாவம். அவர்களை பழிக்க கூடாது. அவையள் விடுதலைக்காக போனவர்கள் அவர்களுக்காக ஒருகணம் தலையை குனிந்து அஞ்சலி செலுத்தலாம். இப்ப இருக்கிறவையள் ஒரு காலத்திலை தங்களுடைய உயிரைக்காப்பாற்ற உமாவின்ரை படம் போட்ட டாலரை கழுத்திலை போட்டுக்கொண்டு திரிஞ்சவை. எனக்கு அவையளை பார்க்க வெட்கமாக இருந்தது அந்தக் காலத்திலை.
Reply
#3
[quote="Nellaiyan"]கடந்த சில ஆண்டுகளாக தம்மை மாற்றுக்கருத்தாளர்கள் என்று கூறித்திரியும் ஓரிரு துரோகக் கும்பல்கள் "தியாகிகள் தினம், வீரமக்கள் தினம், .." எனும் பெயர்களில் இறந்த தமது சகாக்களுக்கு நினைவு தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.

நல்ல செயல்! பாராட்டத்தக்கது!!

quote]

நங்கள் எங்கட அம்மாவ கூட கூட்டி குடுதாலும் குடுபமே தவிர விடுதலைப் புலிகள்ளுகும் தமிழ்ழர்கும் எதிர எதும் செய்யாட்டி தூக்கம் வராது
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)