Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கதிர்காமர் கொலையும், சந்திரிகா நிலையும். பகுதி - 5
#1
கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது….

ஜேவிபியினர் கதிர்காமரை போடவேண்டியதன் அவசியம் யாதென சென்ற கட்டுரையில் பார்த்தோம். அவர்கள் கட்டாயமாக செய்திருக்க வேண்டியதன் அவசியத்தை பார்ப்போமாகின் கதிர்காமர் கூடுதலாக இந்தியாவை ஆதரித்ததும், ஜேவிபியினரை இப்போ உதாசீனம் செய்தமையுமே. அத்துடன் ஜேவிபியினர் அமெரிக்க ஆதரவாளர்கள். கதிர்காமர் அமெரிக்க எதிர்ப்பாளர். அவர் அமெரிக்காவை நேரடியாக எதிர்க்காவிடினும் சில காரியங்கள் மூலம் எதிர்த்தவர். உதாரணமாக முல்லைத்தீவில் சிறீலங்கா விமானப்படையின் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று பல அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது ஐக்கியநாடுகள் சபை அதைக்கண்டிக்கும் போது கதிர்காமர் “ஐக்கிய நாடுகள் சபை எமது விடயத்தில் மூக்கை நுழைப்பதை நாம் விரும்பவில்லை. அவர்கள் நுளம்பிற்கு மருந்து விசுறுவதுடன் அவர்கள் வேலை நிற்கட்டும்” என்று சிறுபிள்ளைத்தனமான விளக்கம் கொடுத்திருந்தார். இக்கூற்றே அமெரிக்காவை பொறுத்தமட்டில் இலங்கை விடயத்தில் மூக்கை நுழைக்காதிருக்க போதுமான செயற்பாடானது. அதன் பின்னரே கூடுதல் அழுத்தங்களை இலங்கை அரசு மீது போடத்தொடங்கியது. அவ்விடயம் ஜேவிபியினரை கதிர்காமரின் மேல் கோபம் கொள்ளவைத்திருக்கும். அதனடிப்படையில் கதிர்காமரை மண்டையில் போடவேண்டிய தேவை ஜேவிபியினருக்கு எழுந்திருக்கும். அவரை மண்டையில் போடுவதால் அப்பழியை புலிகள் மேல் சாதாரணமாகவே போடலாம் என்கின்ற வகையில் அதை செய்து பழியை புலிகள் மேல் போட்டிருக்கலாம். ஆகவே கதிர்காமரின் கொலையை ஜேவிபியினரும் செய்திருக்க வாய்ப்பிருக்கின்றதல்லவா வாசகர்களே! இனவெறி கொண்ட ஜேவிபியினரால் தன்னையும் சிங்கள விசுவாசியாக காட்டிய கதிர்மாமரின் உயிரையே குடிக்கக்கூடிய சூழல் எழுந்திருப்பதை பார்த்தீர்கள் அல்லவா?.

நாம் அடுத்துப் பார்க்கப்போவது இந்திய அரசின் "றோ' எனப்படும் உளவுத்துறையைப்பற்றி. இவர்கள் கூடுதல் கவனம் இலங்கையில் தற்சமயம் எடுப்பதற்கான காரணங்கள் பல. அவற்றில் வருபவை சில.
அணுவாயுத உற்பத்தியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஈடுபட்டதன் பின் அவ்விரு நாடுகளையும் தனது கண்காணிப்பில் வைத்திருக்க அமெரிக்கா எண்ணுகின்றது. அதனடிப்படையில் தொடுக்கப்பட்ட முதற்போரே ஆப்கானிஸ்தான் போர். அதற்கான காரணத்தை செப்ரம்பர் 11 என அமெரிக்கா கூறினாலும் அக்காரணம் வலுவானதாக இல்லை. ஆப்கானிஸ்தானை அமெரிக்கா கையகப்படுத்தியபின் இலங்கையில் ஒரு முகாம் அமைக்க எண்ணி மன்னார் கரையில் வானொலிக்கோபுரம் அமைக்க முயற்சித்தது. ஆனால் தமிழ்மக்களின் தீவிர எதிர்ப்பால் இதுவரை அது கைகூடாத நிலையிலேயே இருக்கின்றது. இந்தநிலையில் அமெரிக்கா எங்கே இலங்கை அரசியலில் மூக்கை நுழைத்து தாம் எங்கே வாசலுக்கு வெளியில் நிற்கவேண்டி வந்திடுமோ என்கின்ற பயமும், இதையே சாட்டாக வைத்து அமெரிக்கா தம்மை இலங்கையில் இருந்து கண்காணிக்க ஏதுவாகலாம் என்கின்ற பயத்திலும், கதிர்காமரின் இராஜதந்திர நகர்வுகள் அத்துபடியாக இந்தியாவுக்கு தெரிந்தமையால் (எது தேவையோ அதைக்கருதி அப்பக்கம் சாயக்கூடிய தன்மை கதிர்காமருக்கு இருந்தமையைக்கருதி) அவரை போட எண்ணியிருக்கலாம். அத்துடன் விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் படை நடவடிக்கையின் போது ஜனாதிபதியாகிய சந்திரிகா இலண்டனிலும், வெளிநாட்டமைச்சர் கதிர்காமர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக போய் இந்தியாவிலும் இருந்தனர். அப்போ புலிகள் யாழ்நகர் மீட்பில் ஈடுபட்டிருந்தவேளை இன்றோ, நாளையோ யாழ்நகர் புலிகள் வசம் வீழ்ந்து விடும் என்கின்ற நிலையில் உடனடியாக கதிர்காமர் இந்தியாவில் இருந்தவண்ணம் முதன்முதலில் அனைத்து வெளிநாட்டுத்து}துவராலயங்களுடன் இதுவிடயமாக கதைத்தபின்தான் இந்திய அரசுடன் பேச்சில் ஈடுபட்டார். அவ்விடயம் இந்தியாவிற்கும் தெரியும். நாற்பதாயிரம் இராணுவத்தின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருந்தவேளையிலும் தம்முடன் உடனும் தொடர்புகொள்ளாது அனைத்து து}தராலயங்களுடனும் கதைத்த பின்தான் கதிர்காமர் தங்களுடன் கதைத்தார் என்பதை கருத்தில் கொண்டே, இனியும் அவ்வாறானதொரு நிலை ஏற்படுமிடத்து கதிர்காமர் தம்மை கைவிட்டுவிடுவார் என்கின்றநோக்கிலும் அப்படி ஏற்படுமிடத்து அமெரிக்கா தம்மை இலங்கையில் இருந்து கண்காணித்து, தம்மை நேரடிக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சூழலை ஏற்படுத்திவிடும் என்கின்ற நோக்கிலும் போட்டுத்தள்ளியிருக்கலாம் அல்லவா? அப்படியாயின் எப்படி அவரை கொலை செய்திருக்கலாம் அதை அடுத்த தொடரில் பார்ப்போம்.
தொடரும்....

மலரவன் மலரினி
www.tamilkural.com

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)