Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈ.பி.டி.பி உறுப்பினர் மாணவர்கள், பொதுமக்களால் வெளியேற்றம்!
#1
<b>இந்து மாநாட்டுக்கு சென்ற ஈ.பி.டி.பி உறுப்பினர் மாணவர்கள், பொதுமக்களால் வெளியேற்றம்!</b>
[சனிக்கிழமை, 16 யூலை 2005, 13:56 ஈழம்] [தாயக செய்தியாளர்]
யாழ். தேசிய கல்வியற் கல்லூயில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்து மாநாட்டுக்கு ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும் பாதுகாவலர்களுடன் சென்ற ஈ.பி.டி.பி அமைப்பாளர் மதனராஜா அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களால் வெளியேற்றப்பட்டார்.


இது தொடர்பாக தெரியவருவதாவது:-

அகில இலங்கை இந்து மாமன்றம் பொன்விழாவை முன்னிட்டு யாழ். தேசிய கல்வியற் கல்லூரியுடன் இணைந்து நடத்தும் இந்து மாநாடு நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் அழையா விருந்தாளியாக ஈ.பி.டி.பி அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதனராஜாவும் கலந்து கொள்வதற்காக வந்தார். இவருடன் பொலிசாரும் ஆயுதபாணிகளான ஈ.பி.டி.பி மெய்ப்பாதுகாவலரென சுமார் 25 இற்கும் மேற்பட்டோர் விழா மண்டபத்துக்குள் நுழைந்தனர்.

இதனையடுத்து விழாவில் கலந்து கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அத்துடன் ஆயுதபாணிகள் எவரும் மண்டபத்துக்குள் வரக்கூடாதென விழாவில் பங்கேற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து விழா ஏற்பாட்டாளர்கள் ஈ.பி.டி.பி அமைப்பாளர் மதனராஜாவிடம் ஆயுதம் தாங்கியோர் மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்தனர்.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தரப்பின் இக்கோரிக்கையால் சற்று நேரம் ஈ.பி.டி.பியினர் வாக்குவாதப்பட்டனர். எனினும் ஏற்பாட்டாளர்கள் ஆயுதபாணிகளை அனைவரும் மண்டபத்திலிருந்து வெளியேறக் கோரியதையடுத்து மதனராஜாவும் அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.

ஈ.பி.டி.பி அமைப்பாளர் மதனராஜாவுக்கு தாம் இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழை அனுப்பவில்லை என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

puthinam
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
±ýÉ ±Æ×ìÌ ¦¾Ã¢ÔÉõ Á¡½õ ¦¸ð¼¡ ¦ÂýÁ¡õ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)