Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது
#1
போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது - தமிழ்ச்செல்வன்
17/07/2005

போர் நிறுத்த ஒப்பந்தம் ஓர் இறுதிக்கட்டத்திற்கு வந்து விட்டதாகவே நாம் உணர்கிறோம். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி விடுதலைப் புலிகளின் பயணங்களிற்கான பாதுகாப்பினை வழங்க சிறிலங்கா அரசு உறுதியான பதில்களை தரவில்லை. அவர்களின் உறுதியான பதில் கிடைக்காவிட்டால் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்னதான எமது பயண வழிமுறைகளையே நாம் கையாள்வோம். இராணுவம் அதனைத் தடுக்க முற்பட்டால், எம்மீது தாக்குதல் நடாத்த முற்பட்டால் நாம் எம்மைத் தற்காக்கும் நடவடிக்கைகளில் இறங்கவேண்டி வரும் அப்போது போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விடும் என தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தங்களது பயணங்களை போர் நிறுத்தத்தின் முன்பான காலங்களில் அறிவித்து விட்டு மேற்கொள்வதில்லை. எனவே இனிமேல் மேற்கொள்ளப்படும் பயணங்களும் அவ்வாறே அமையலாம் அச்சந்தர்ப்பத்தில் தான் என்ன நடக்கப்போகின்றது என்பது தெரியவரும் எனவும் அவர் கூறினார்.

பொதுக்கட்டமைப்பின் முக்கியமான அடிப்படையான நான்கு அம்சங்களுக்கு சிறிலங்காவின் உயர் நீதி மன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தமை துரதிஸ்ட வசமானது. இப்படி நடக்கும் என்பது நாம் முன்னரே எதிர்பார்த்ததுதான். சிங்கள அரசும் சிங்கள அரசின் நீதித்துறையும் தமிழ் மக்களுக்கு எவ்வித நீதியையும் வழங்காது என்பது வரலாறு எமக்கு சொல்லிய பாடம். எனவே பொதுக்கட்டமைப்பு முடக்கப்பட்டதாகவே நாம் உணர்கிறோம.; இனி இவற்றைப் பற்றியெல்லாம் அரசுடன் பேசுவது சாத்தியமற்ற விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.சம்பந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய அரசியல் சூழல் தமிழ் மக்களிற்கு ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை குறித்து பொதுமக்களிற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவு படுத்தும் பணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனி ஈடுபட உள்ளது எனத் தெரிவித்தார்.

திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் காலம்களில் சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவது காலவிரையமான ஒரு செயல் நாம் எமது சொந்த அரசை நிறுவுவதற்கான பணிகளையே இனிமேல் முன்னெடுக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
Reply
#2
[quote=narathar]
திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் காலம்களில் சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவது காலவிரையமான ஒரு செயல் நாம் எமது சொந்த அரசை நிறுவுவதற்கான பணிகளையே இனிமேல் முன்னெடுக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.


அப்படிப்போடு போடு போடு.. எனி என்ன வெலிக்கந்தை கும்பல், பொலனறுவை நரிகள், இலங்கை புலுனாய்வு ஓனாய்கள், இந்திய புலுனாய்வு குரங்குகள், வவுனியா வரதர் அணி பிச்சைக்காரர்கள், புங்குடுதீவு நாய்பிடிபி தோழர்கள் எல்லோரும் ஒருக்கா ஜோரா கையத்தட்டீட்டு பக் அப் பண்ணுங்கப்பா.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry

ஆ அப்படியே சுவிஸ் லண்டன் டென்மார்க்கில இருந்துகொண்டு றோ போடுற எலும்புத்துண்டுக்காக செய்திகளைபோடுற நேர்மை மிகு இனையத்தளங்களில எக்ஸ்ரா பக்கங்களை திறந்து வைத்துக்கொண்டு இருங்கப்பா... (எனெண்டால் உங்கட இனையத்தளங்களை பார்க்கிறதுகெண்டே (இலங்கையில நடக்கிற உண்மை நிலைகளை அறிறதுக்கெண்டு) ஜோர்ஜ்புஸ் தொடக்கம் ஒசாம பின்லேடன் வரை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கினெமாம்...) Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)