Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
<b>இது யூலை மாதம்....!
நீறு பூத்த இனவாதம்-தம்
சுயத்தை காட்டிய நேரம்-ஆமாம்
83 ல் எங்கள் உறவுகளை
எரித்த அதே யூலை மாதம்...
கொழும்பு நகர் தொடங்கி
கொடி காமம் வரைக்கும்
கொலைவேறியாடிய
அதெ யூலை மாதம்..-ஈழ
தமிழன் தவிர்க்கும் மாதம்
சிறைதனிலே குட்டி மணியுடன்
தங்கத்துரை இன்னும் பலர்...
வெளி தனிலே அப்பாவிகள்
அனைவரும் சரி....
ஆடியது சிங்களம்
நர பலியாட்டம்...
வாடியது தமிழன் உள்ளம்
நாடியது அவன் கரம்
ஆயுதத்தை.......
கொண்டது நெஞ்சது உறுதி
தமிழீழம் தான் உறுதியாச்சு
தாங்கி தாங்கி...
சலித்தவர்கள்....-அடி
வாங்கி வாங்கி
வலியை உணர மறுத்தவர்கள்
அடங்கி அடங்கி
அடிமையாக வாழ்ந்தவர்கள்..
எழுந்தனர்...எல்லோரும்
எழுந்தனர்...-ஏன்
நாம் அடிமைகளானோம் என்று
அழுதனர்..
அழுத விழிகளின் கண்ணீர்
காயுமுன்னே...
கரிகாலனின் தலைமையேற்று
தடைகளை வென்றனர்...-இது
அநீதிக்கெதிரான யுத்தம்
அகிம்சையால் வெல்ல மடியாத
தேசத்தை...
ஆயுதம் கொண்டு அழிக்க நினைத்த
அரசை எதிர்த்து -ஈழ
தமிழன் நடாத்தும் உரிமை
போரிது -இன்று
சமாதானங்கள் வரலாம்
சகஜமான வாழ்வு வரலாம்-ஆனால்
எண்பத்து மூன்று கடந்து
இருபத்து இரண்டு வருடங்கள்...-ஆனாலும்
எங்கள் நெஞ்சத்து தீ இன்னும்
அனையவில்லை.......-</b>
இளைஞனின் கருத்தை ஏற்று திருத்தப்படுகிறது....(நி+ன்)
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
நண்றி நிதர்சன்
கருப்பு யூலை அண்று பாக்கப்படவர்களில் எனது குடும்பமும் ஒன்று.......
::
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<img src='http://www.yarl.com/forum/files/july23_kodumai.jpg' border='0' alt='user posted image'>
ஜுலை.. இது கறுப்பு ஜுலை...
தமிழரின் ரத்தம் குடிக்க வந்த ஜுலை
சொத்திழந்து சொந்தமிழந்து...
தமிழனை அனாதையாக்கிய ஜுலை
தாரோடு உருகியும்...
நெருப்பில் கருகியும்...
நெஞ்சமெல்லாம் ஆசைகளுடன்...
நிறைவேறாத ஆசைகளுடன்...
பல்லாயிரம் தமிழரை பரலோகம் அனுப்பிய ஜுலை...
காடையரிடம் இருந்து கற்பை காக்க முடியாது....
கன்னிகள் கண்ணீருடன் கருகவைத்த ஜுலை இது.....
கண்முன்னே தாயை கற்கழிக்க....
மகனை குற்றூயிராய் கிடக்க வைத்த ஜுலை இது....
கால்களும் கைகளும் வெட்டப்பட்ட நிலையில்.....
தம்பிள்ளைகளை பிழைக்க வைக்க முடியாது...
பெற்றோரை ரத்த கண்ணீர் வடிக்க வைத்த ஜுலை இது...
தமிழனை அழிப்பதாக இறுமாப்புடன் சிங்களம்...
தமிழனுக்கு கேட்க நாதியில்லை என்று
கனவு கான வைத்த ஜுலை இது.....!
நீ யார்...? எப்படி வாழ்கிறாய் ...? என்று
ஒவ்வொரு தழிழனையும் தட்டிக்கேட்ட ஜுலை இது.....
பற்பல வீர சாதனைகளின் பின்னே...
அழியாத காவியமாய் தமிழரின்
நெஞ்கங்களில் ஓவியமான ஜுலை இது....!
அழிவிலேயே உணர்வை கிளப்பிய ஜுலை இது
சுதந்திர தீயை ஏற்றிய ஜுலை இது.......!
தமிழர்களுக்கு தம்மை உணர்த்திய ஜுலை இது...
தாயக உதயத்திற்கு... தமிழரின் ரத்தத்தால்...
சிங்களம் செய்த அர்ச்சனை இது....
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்....
நெஞ்சங்களில் அழிக்க முடியாத வடு இது........!
மீழ்பதிவு
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நன்றி கவிதைகள் காரமாக இருக்கின்றன.
[b][size=18]
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
நன்றி நிதர்சன் அண்ணா மற்றும் மீள்பதிவு செய்த அக்காக்கும் நன்றி
----------
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
Thala Wrote:நண்றி நிதர்சன்
கருப்பு யூலை அண்று பாக்கப்படவர்களில் எனது குடும்பமும் ஒன்று.......
ஓ.. அதைப்பற்றி சொல்லாமே!
உண்மையில் கருப்பு ஜீலை நடாந்த சமயத்தில் நான் பிறக்க வில்லை.......... அதனால் எல்லாம் வாய் மொழி மூலம் கேட்டு அறிந்தவை தான்...யாராவது பாதிக்கப்பட்டவர்கள் சொன்னால் இலகுவில் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கும்...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Nitharsan Wrote:உண்மையில் கருப்பு ஜீலை நடாந்த சமயத்தில் நான் பிறக்க வில்லை.......... அதனால் எல்லாம் வாய் மொழி மூலம் கேட்டு அறிந்தவை தான்...யாராவது பாதிக்கப்பட்டவர்கள் சொன்னால் இலகுவில் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கும்...
<b>
நாம மட்டும் பிறந்திட்டமாக்கும் :evil: நமக்கும் வாய்மூல அனுபவம்தான். 8) </b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
ஜீலை = ஜுலை = யூலை
பழிவாங்கும் படலம்...
அநீதிக்கெதிரான யுத்தம்
அகிம்சையால் வெல்ல மடியாத
தேசத்தை...
ஆயுதம் கொண்டு அழிக்க நினைத்த
அரசை பழிவாங்கும்...
படலமிது......
கவிதைகளில் பல இடங்களில் மயக்கநிலை உள்ளது. கருத்துக்களிலும் சில முரண்கள் உள்ளன. போராட்டம் பழிவாங்குவதற்கானது அல்லஇ நமது உரிமைகளையும்இ விடுதலையையும் உறுதிசெய்வதற்கானதும்இ அங்கீகரிப்பதற்கானதும். அப் போராட்டத்தை வெறும் "பழிவாங்குதல்" என்கிற பதத்தோடு விளக்க நினைப்பது சரியானதாக இருக்காது நிதர்சன்.
மற்றும்படி உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள். தொடருங்கள்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://img330.imageshack.us/img330/1449/83july2ch.jpg' border='0' alt='user posted image'>
<b>Sinhala mob dancing around a Tamil youth, stripped naked, before pouring petrol and burning him to death, Colombo, 23 July 1983.
1983 யூலையில் சிங்களத் தீவில் இனக்கலவரத்தின் போது கொழும்பு நகரில் ஒரு இளந்தமிழரை நிர்வாணப்படுத்திய சிங்களக் காடையர் கூட்டம் அவரின் மீது பெற்றோல் எரிபொருள் ஊற்றி எரியூட்ட முதல் நரபலி நடனம் ஆடும் காட்சி.</b>
<b>கடந்த காலங்கள்
58ம் 61ம்
71ம் 77ம்
ஈழத்தமிழர் கண்களில்
கார்காலம் நல்க
கதியோடு விதி பேசி
கழித்த காலங்கள் விலக்கி
கரிகாலன் தலைமையில்
கடும் படை கிளர்ந்தது
கடந்த 83 யூலையில்
கருந்தார் பலாலி வீதியில்
கடுமிடியோடு
கரும்புகை கிளர்ந்தது
கடும்பகை சிங்களம் சிதறிட...!
வெடியோசை அடங்க முதல்
வெறியோசை கிளர்ந்தது
வெட்டிச் சிங்கள
வெறியாட்டம் தொடர்ந்தது
வெலிக்கடை முதல்
வெள்ளவத்தை வரை
வெள்ளமெனக் குருதியில்
வெற்றுடலாய் அப்பாவித் தமிழர்கள்
வெறுமைகளாய் ஏதிலியாய்
வெருண்டே ஓடினர்...!
வீறு கொண்ட மக்கள்
வீரத்துடன் எழுந்தனர்
வீர வேங்கைகள் பக்கம்
விரைந்தே போயினர்
விரைவாய் ஒரு
விடுதலை வாங்கிட...!
விதியங்கும் விளையாட
விட்டுக் கொடுப்புகளும்
விளைவற்றுப் போக
விபரீதங்கள் விளைவாக
விண்ணரென அந்நியரும்
விவேகம் காட்டிட
விடுதலையின் விளைநிலம்
வில்லங்கத்தில் வீழ்ந்தது....!
சினங்கொள் புலிப்படை
சீறத் தயங்குமோ..???!
சீரிய தாய் மண்ணில்
சிக்கிய சிங்களத்தானைகள்
சிதறியடித்தே
சின்னாபின்னம் ஆக்கினர்..!
சிங்களத்தான் சீமையில்
சீறிப்பாய்ந்து கட்டுநாயகாவில்
சிதைத்தே போட்டனர்
சீனன் போர் விமானங்கள்...
சினங்கொள் தமிழன்
சித்தம் மகிழ...!
சிந்தித்துமிராள்
சிங்காரி சந்திரிக்கா
சீக்கிரமாய் சீறும் புலி என்று..!
சிந்தை கலங்கி
சீக்கிரமாய் அழைத்தாள்
சிங்கள தேசத்துடன்
சிறகடிக்கட்டும் வெண்புறா என்று..!
சிந்தித்தே வேங்கைகளும்
சிங்கள தேசத்துடன்
சிறப்புடன் போட்டனர் ஒப்பந்தம்
சிறப்பாம் அமைதி வழி நாடி
சீக்கிரம் முடிவது காண...!
சீறிய வேங்கைகள்
சீருடன் இருக்க
சீண்டல்கள் மட்டும் மலியுது
சீறும் நிலை மீண்டும் அங்கே....
சிங்கள தேசம்
சிந்திக்க மறுத்தால்
சிரசில் விழும் அடி
சீக்கிரம் ஒரு யூலையில்
சிறப்புற மலரும் தங்கத் தமிழீழம்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
இளைஞன் Wrote:ஜீலை = ஜுலை = யூலை
பழிவாங்கும் படலம்...
அநீதிக்கெதிரான யுத்தம்
அகிம்சையால் வெல்ல மடியாத
தேசத்தை...
ஆயுதம் கொண்டு அழிக்க நினைத்த
அரசை பழிவாங்கும்...
படலமிது......
கவிதைகளில் பல இடங்களில் மயக்கநிலை உள்ளது. கருத்துக்களிலும் சில முரண்கள் உள்ளன. போராட்டம் பழிவாங்குவதற்கானது அல்லஇ நமது உரிமைகளையும்இ விடுதலையையும் உறுதிசெய்வதற்கானதும்இ அங்கீகரிப்பதற்கானதும். அப் போராட்டத்தை வெறும் "பழிவாங்குதல்" என்கிற பதத்தோடு விளக்க நினைப்பது சரியானதாக இருக்காது நிதர்சன்.
மற்றும்படி உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள். தொடருங்கள்.
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி இளைஞன்... ஆனாலும்.. 83 ற்க்கு பிறகு நான் அறிந்த வரை சிங்கள தேசத்தை....இனவாதத்தை பழிக்கு பழி வாங்குதல் என்ற நிலையில் தான் இளைஞர் ஆயுதம் ஏந்தினார்கள்... அப்போது அவர்களிடம் உரிமையை பெறுவதை விட எம்மைக் கொன்றவனை கொல்ல வேண்டும் என்ற வெறி தான் இருந்தது......இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது என்பது உண்மையே!.... எது எப்படியோ!? உங்கள் கருத்துக்களை ஏற்று கவிதையில் சிறு மாற்றம் செய்கிறேன்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>