Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எது கவிதை
#1
எது கவிதை என்று எழுந்திட்ட கேள்விக்கு
எதுகவிதை எனச் சொல்வேன் இப்போ எது கவிதை
வதைபடும் மானுடத்தின் வழிசொல்லும் வரிவடிவம்
இதைச்சொல்வேன் கவிதையென என்றும்

பொதிகை மலைபிறந்த புதுமைத் தமிழணங்கின்
கதைகள் பலவுண்டு காண்போம் இதிலெல்லாம்
கவிதை சொல்கருத்து கணையாய் துளைத்திடுமே
கவிதை சிறப்பிதுவே காண்..................

நிலத்தில் ஓளிர்வடிவ இயல்தந்த வகைக்குள்ளே
பலத்தில் சிறந்ததுபார் கவிதை - மலை முகட்டில்
இலங்குகின்ற தீபமென எந்நாளும் வழிகாட்டி
இலங்குகின்றார் கவிதைமகள் எங்கும்

குன்றாச் சுவையுடையாள் குளிர்விக்கும் குணமுடையாள்
நன்றே இரசித்திடவும் ஆவாள் - வென்று
வழிகாட்டும் வடிவத்துள் வடித்திடவும் வேண்டுமிது
ஒளிகாட்டும் அப்போது உயிர்

வாழும் கவிதையதன் வண்ணம் எதுவென்று
சூழும் கவியுலகைப்பார் - நாளும்
பிறக்கின்ற கவிதைகள் பித்தலாட்டம் அழிய
சிறப்புள்ளது வாழும் செம்மை.
எழுத்துருவாக்கம்
கோகுலன்

http://www.erimalai.info/2005/march/poems/gokulan.htm
Reply
#2
உன்ன நீன்கீ என்னலும் எந்தான் அன்பே வாழ்வதன்ன :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)