Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
[size=24]மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் தியாகி திலீபன்
<img src='http://img336.imageshack.us/img336/8963/04080532dy.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img336.imageshack.us/img336/800/040805j013px.jpg' border='0' alt='user posted image'>
1986 இல் கிளிநொச்சியில் சிறீலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலில் எமது அயலவரான வீரவேங்கை தீசன் ( சின்னத்துரை மனோகரன்) வீரமரணமடைந்தார். இவரே எமது கிராமத்தில் வீரமரணமடைந்த முதல் மாவீரருமாவார். இவருடைய 31 ம் நாளன்று சுண்ணாகம் ஐயனார் கோவிலடியில் பிரம்மாண்டமான அஞ்சலிக்கூட்டமும் அத்தோடு கருத்தரங்கும் நடைபெற்றது. அதிலே அன்றைய யாழ் மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் மாவீரன் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதிலே அவர் உரத்து கூறியதாவது. [size=18]என்று மக்கள் புரட்சி வெடிக்கிறதோ அப்போது தான் சுதந்திர தமிழீழம் மலரும் இது எனது அவா இதை நீங்கள் உங்கள் மனதில் வையுங்கள் என்று சொன்னார். அன்று அவர் கூறியது இன்று நடைபெறுகிறது. இன்று திலீபன் அவர்கள் இதனை பார்த்திருந்தால் எவ்வளவாக மகிழ்ந்திருப்பார்.
இணுவிலிலே சிறீலங்கா காடையரினால் கொல்லப்பட்ட உறவுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<b>யாழ். மாவட்டத்தில் 32 மணிநேர ஊடரங்கு உத்தரவு ஸ்ரீலங்கா காவற்துறையால் பிறப்பிப்பு! </b>
இணுவில் இராணுவத்தினரால் அப்பாவி இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டது மற்றும் ஆத்திரம் கொண்ட இளைஞர்களால் காவல்துறை அத்தியட்சகர் கடத்தப்பட்டு கொல்லப் பட்டது ஆகியவற்றால் எழுத்துள்ள பதற்ற சூழலையடுத்து ஸ்ரீலங்கா காவல்துறையால் 32 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8.00மணி முதல் சனிக்கிழமை காலை 5.00 மணிவரை யாழ். மாவட்டத்தில் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
ஐயா சூரியகுமார் இந்த சம்பவத்துக்கு உங்கள் கருத்தையும் சொல்லலாமே?
Posts: 128
Threads: 10
Joined: Jul 2005
Reputation:
0
காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டதை நினைச்சு அவர் அழுது கொண்டிருக்கும் அவர் எப்படி இப்ப கருத்துச் சொல்லுறது. இரண்டு மூண்டு நாளைக்குப் பிறகு கொஞ்சம் கவலை முடிந்த பிறகு தனது கருத்தை தெரிவிப்பார் எண்டு நீ நக்கிறன்.
- Cloud - Lighting - Thander - Rain -
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
நேற்றைய சம்பவத்தில் 8 பொலிஸ்காரர்களை இளைஞர்களால் கடத்தப்பட்டு அதில் இருவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் ஏனனய 6 பேரை தேடும்பணி தொடர்வதாக ஜபிசி செய்தி தெரிவிக்கின்றது...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<b>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறையில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் கொலை</b>
யாழ் காங்கேசன்துறை வீதி இணுவில் சந்தியில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றில் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் இடம்பெற்ற இராணுவத்தினரின் துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டு, இன்னுமொருவர் காயமடைந்த சம்பவத்தையடுத்து, சம்பவ இடத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்ற
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050804160235ssp203.jpg' border='0' alt='user posted image'>
யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தன ஆத்திரமுற்ற கும்பலினால் கடத்திக் கொலை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதனை இலங்கையின் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.
இணுவிலுக்கும் சுதுமலைக்கும் இடையில் உள்ள பாலாவோடை என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட இவருடைய சடலத்தைக் கொழும்புக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இணுவில் சந்தியில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு சிகை அலங்காரம் நடைபெற்றதாகவும், அப்போது வாயிலில் காவலுக்கு நின்றிருந்த இன்னுமொரு சிப்பாயின் கையில் இருந்த துப்பாக்கியிலிருந்தே வேட்டுக்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050804162728inuvil1203aa.jpg' border='0' alt='user posted image'>
சிகையலங்கார நிலையச் சம்பவத்தை அடுத்து இணுவில்லில் வன்முறைகள்
இச்சம்பவத்தில் சிகை அலங்கார நிலையத்தினுள் இருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் சிகையலங்கார நிலைய ஊழியராகிய ஜெயசீலன் சாந்தரூபன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காயமடைந்தவராகிய லோகதாஸ் என்ற மற்றவர் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, வாயிலில் நின்றிருந்த இராணுவச் சிப்பாய் தப்பியோடியதாகவும், இவரை அங்கு குழுமியவர்கள் துரத்திச் சென்றபோது அவர் இணுவில் இராணுவ முகாமுக்குள் ஓடிச் சென்றதையடுத்து துரத்திச் சென்றவர்கள் கல்வீச்சு நடத்தியதுடன் வீதி மறியலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
தற்செயலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் எனக் கூறப்படுகின்ற இந்தச் சம்பவத்தையடுத்து, காங்கேசன்துறை வீதியில் சென்ற இரண்டு இராணுவ வாகனங்கள் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிசாரும் இராணுவத்தினரும் அனுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீதி மறியலில் ஈடுபட்டு டயர்களைக் கொளுத்தியவர்களைக் கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசியதுடன், தடியடிப் பிரயோகமும் செய்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகல்வகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவ இடத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்றபோதே யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தன வழியில் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையில் இணுவில் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி இளங்கோவன் அங்கு நேரடியாகச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இணுவில் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posts: 125
Threads: 70
Joined: Dec 2004
Reputation:
0
யாழில் ஊரடங்குச் சட்டம் நீக்கம்
யாழ். குடநாட்டில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை 6.00 மணிமுதல் நாளை காலை 6.00 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச்சட்டம் இன்று நண்பகல் 12.30 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதையடுத்து யாழ். குடாநாட்டின் சகல பாகங்களிலும் நிலமை வழமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
puthinam
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<b>திலீபன் கனவு நனவாகுமா? </b>
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மக்கள முதன் முதலாகக் கிளர்ந்தெழுந்து சிங்களப் படையினருக்கு எதிராக பதிலுக்கு பதில் நீதி கேட்க ஆரம்பித்துள்ளனர். திலீபன் கூறியது போன்று 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" அதை நான் வானிலிருந்து பார்ப்பேன் என்று கூறியிருந்தார். அவருடைய விரும்பம் நிறைவேறம் காலம் வந்துள்ளது போன்று நேற்றைய யாழ் நிகழ்வு எடுத்து காட்டியுள்ளது. முதன் முதல் மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் தமிழ் மக்களுக்கு அடக்குமுறை பயன்படுத்தப்படும் போது அவற்றிற்கு நியாயம் கற்பித்த பொலிஸ் அதிகாரி அடக்கு முறைக்கு உள்ளாவோரால் கடத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளார். இது ஒரு தவறுதலான வெடிவிபத்து என்று இலங்கை அரசு வளமையான புலுடாக்களை விட்டுக் கொண்டு இருக்கிறது. வழமையாக இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்படும் போது மக்கள் ரயர் எரிப்பார்கள் என்றும் அத்துடன் அவர்கள் சத்தமின்றிப் போவார்கள் என்றும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்றைய மக்களின் பதில் நடவடிக்கை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் ஒரு விழிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல உலகத்தின் பல வெளிநாட்டு ஊடகங்களின் பார்வைக்கும் உட்பட்டுள்ளது. மக்கள் திரண்டு ஆவேசத்துடன் நீதி கேட்டுப் போராட்டம். பொதுமகனைக் கொன்றதற்குப் பொலிஸ் அதிகாரி பதில் கொலையென்று ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது. நிலமை விபரீதமானதால் இராணுவப் பேச்சாளரும் இராணுவம் செய்த தவறை ஒத்துக்கொண்டுள்ளார். அதற்கு அப்பால் சந்திரிகா அம்மையாரும் பொதுமக்கள் மேற்கொண்ட பதிலடியில் அதிர்ந்து போய் இருக்கிறார். பொதுமகனின் கொலையைக் கண்டிக்கும் அளவிற்கு அம்மையாருக்கு பொதுமக்களின் பதிலடி உறைத்திருக்கிறது. பொதுக்கள் இவ்வாறு இலங்கை அரசிற்குப் பதில் கொடுப்பார்களாக இருந்தால் திலீபன் கனவு மிகவிரைவில் நினைவாகுவதுடன் தமிழ் ஈழம் மிகவிரைவில் கிடைத்துவிடும்.
இலங்கை அரச படைகளின் எச்சில் பாத்திரத்தில் உண்ணும் தமிழ் விரோத அமைப்புகள் சிலவும் அவர்களின் ஊடகங்களும் தமது வளமையான பாணியில் இது புலிகள் செய்த கொலை என்று எசமானார்களுக்கு வக்காளத்து வாங்கியுள்ளது.
இனுவிலூரான் உருத்திரன்.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<b>இணுவில் பகுதியில் ஊரடங்கு நீக்கம்</b>
நேற்று வன்செயல்களின் போது
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் வன்முறைகளையடுத்து நேற்றிரவு அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று பகல் நீக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று காலை முதல் தடைபட்டிருந்த முகமாலை இராணுவச் சோதனைச்சாவடி ஊடான பொது போக்குவரத்து இன்று பிற்பகலில் வழமைக்குத் திரும்பியதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்றைய வன்முறையின்போது கலகத்தில் ஈடுபட்டவர்களினால் கொல்லப்பட்ட யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தனவின் சடலம் அவரது சொந்த ஊராகிய குருநாகலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று ஊரடங்கு அமுலில் இருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் அமைதி நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இணுவில் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் சம்பந்தப்பட்டதற்காகக் கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவச் சிப்பாய்களையும் வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி இளங்கோவன் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இணுவில் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-BBC
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'><b>பதற்றத்தை தணித்து அமைதிபேண படை அதிகாரிகளுக்கு பணிப்பு
திருமலையிலிருந்து படையினர் அனுப்பிவைப்பு; ஊரடங்கு நீக்கம் </b>
(கிருஷ்ணி கந்தசாமி)
யாழ்ப்பாணம் இணுவில் சம்பவத்தையடுத்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணித்து நாட்டில் தொடர்ந்து அமைதியைப் பேண நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
மேற்படி, சம்பவத்தையடுத்து முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் உயரதிகாரிகளை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த அவசர பணிப்பை விடுத்துள்ளார்.
நாட்டில் இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக் கூடாது என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, தற்பொழுது யுத்தநிறுத்தம் அமுலிலுள்ளபோது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது இரு தரப்பினருக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இணுவில் சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டவர்களையும் அதனோடு தொடர்புடையவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேற்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இணுவில் சம்பவத்தையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இணுவில் பிரதேசத்தின் பாதுகாப்புக் கருதி, திருகோணமலையிலிருந்து மேலதிக துருப்புகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் மா அதிபர் கருத்து
மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ குறிப்பிடுகையில்,இணுவில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு தற்பொழுது இணுவில் பகுதிக்கு விரைந்துள்ளது.பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் சேவையாற்றிய சிரேஷ்ட அதிகாரி சார்ள்ஸ் விஜயவர்த்தன கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை பொலிஸ் திணைக்களத்துக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.இத்தகைய சம்பவங்களில் பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுத்தமை தவறான செயலாகும். சட்டத்தை கையில் எடுக்க மக்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.இணுவில் சென்றுள்ள விசேட பொலிஸ் குழு பூரண விசாரணைகளை நடத்தும். இணுவில் பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர் என்றார்.
இதேவேளை, மேற்படி சம்பவத்தையடுத்து நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் அமைதியை நிலைநாட்டும் வகையில், தேடுதல் வேட்டைகளும் நடத்தப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரையான பிரதான வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</span>
-Veerakesari
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
இணுவில் சம்பவத்திற்கு சிறிலங்கா அரசுத் தலைவர் கண்டனம்!
[கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
யாழ். இணுவில் பகுதியில் நேற்று காவல்துறை அத்தியட்சகர் ஒருவரும் பொதுமகன் ஒருவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.
முடிதிருத்தும் நிலையத்திற்கு சென்றிருந்த இராணுவ வீரர்களில் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றுமொரு பொதுமகன் காயமடைந்திருந்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் நிலவிய பதற்ற நிலையைக் கட்டுப்படுத்தச் சென்ற காவல்துறை அத்தியட்சகர் ஆத்திரமடைந்த மக்களினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசுத் தலைவர் உயிரிழந்த பொதுமகனின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 5 இராணுவ வீரர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தயா ரட்நாயக்க தெரிவித்தார்.
முடிதிருத்தும் நிலையத்திற்கு சில இராணுவ வீரர்கள் சென்றதாகவும் அதன்போது இராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இராணுவ வாகனங்களின்மீது கற்களை வீசி சேதமாக்கியுள்ளதாகவும் கூறினார்.
காவல்துறை அத்தியட்சகர் நிலைமையைக் கட்டுப்படுத்தவே சம்பவ இடத்திற்கு சென்றார் என்றும் எனினும் மக்களின் ஆத்திரம் அவர்மீது திரும்பியிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஆத்திரமடைந்த மக்கள் அவரது வாகனத்தை செல்லவிடாது தடுத்து நிறுத்தியதோடு வாகனத்திலிருந்து இறங்கியதும் அவரின் வாகனத்தை கடத்தியுள்ளனர் என்று காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ தெரிவித்தார்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் ஊடாக அவரைக் காப்பாற்ற முயற்சிக்கப்பட்ட போதிலும் அவரின் சடலத்தையே கண்டுபிடிக்க முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.
அனைவரையும் அமைதியைக் கடைபிடிக்குமாறு அரசுத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 5 இராணுவத்தினரும் காவல்துறை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் உதவியின்றி யாழ்ப்பாணத்தில் இவ்வாறானதொரு செயற்பாடு இடம்பெற்றிருக்க முடியாதென தெரிவித்த இராணுவப் பேச்சாளர் தயா ரட்நாயக்க வன்முறையைத் தூண்டுவதாக விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டியுள்ளார்.
புதினம்
<b> .. .. !!</b>