08-13-2005, 01:38 PM
<img src='http://img347.imageshack.us/img347/2773/sneha4qr.jpg' border='0' alt='user posted image'>
உன்னைக் கண்டதும் என்னை
தொலைத்ததாக நினைவில்லை
உன்னை நினைத்ததும் தான்
என்னை நினைக்க மறந்துவிட்டேன்
உன் அழகு கண்ணில் கண்டதும்
சிறகை விரித்தது
இந்தப் பறவை...
உன் அன்பு உள்ளே கொண்டதும்
உன் சொந்தம் எண்ணி
பறக்கத்தொடங்கியது...
வருடத்தில் அத்தனை நாட்களும்
உன்னை நினைக்கிறேன்
உன்னை எதிரில் காணும் அந்த நாட்களைத்தவிர..
அந்த நாட்களில் தான் ஏனோ
எனக்கு என் ஞாபகம் வரும்....
உன் பார்வையில் தான்
என் அழகும் எனக்கு தெரியும்...
அன்பு சிந்தும் உன் முகம் கண்டால்
ஏனோ ....
உள்ளத்தில் அன்பும் கூடும்...
மழையில் நனைந்தால்
காய்ச்சல் வருதே
உன் காதல் மழையில்
சொட்டச் சொட்ட நனைந்தும்
தும்மல் கூட வரலையே...
அன்பாய் பேசி அழகாய் சிரிக்கையில்
ஏனோ எங்கோ பறந்து விடுகிறேன்
கண்டிப்போடு அறிவுரை சொல்கயில்
அடக்கமாய் கேட்கிறேன்
தொலைவில் நின்றாலும்
பார்வைகள் தொடுகையில்
அழகு பெண்ணாய் உணர்கிறேன்....
அன்பே.....
காதலை நீ சொன்னதாய் நினைவில்லை
சொல்லி இருந்து
அந்த நாளை மறக்கும் அள்வுக்கு
என் காதல் ஒன்றும்...குறைந்ததில்லை.....
நான் சொல்ல நினைத்த நினைவு தான்....
சொன்னதாய் உனக்கு நினைவு ஏதும்........??
மகளாய் வாழ்ந்திருக்கேன்
தங்கையாய் ..நண்பியாய் வாழ்ந்திருக்கேன்
எத்தனை உறவாய் வாழ்ந்திருக்கேன்
காதலியாய்..தாயாய்...நண்பியாய்..
நான் வாழ்ந்த காலம் ஏனோ..
உன்னாலே தான்....
நம் இருவர் சம்மதம் வேண்டாம்மா...
நம்மை பெற்றவர் சம்மதமே வேண்டும்..
நல் வார்த்தை சொன்னாய்...
நிலையாக நெஞ்சிலே நிலைத்தும் விட்டாய்..
நினைவுகளோடு..
நானும்..உன்னோடு
காத்திருக்கிறேன்..............
உன்னைக் கண்டதும் என்னை
தொலைத்ததாக நினைவில்லை
உன்னை நினைத்ததும் தான்
என்னை நினைக்க மறந்துவிட்டேன்
உன் அழகு கண்ணில் கண்டதும்
சிறகை விரித்தது
இந்தப் பறவை...
உன் அன்பு உள்ளே கொண்டதும்
உன் சொந்தம் எண்ணி
பறக்கத்தொடங்கியது...
வருடத்தில் அத்தனை நாட்களும்
உன்னை நினைக்கிறேன்
உன்னை எதிரில் காணும் அந்த நாட்களைத்தவிர..
அந்த நாட்களில் தான் ஏனோ
எனக்கு என் ஞாபகம் வரும்....
உன் பார்வையில் தான்
என் அழகும் எனக்கு தெரியும்...
அன்பு சிந்தும் உன் முகம் கண்டால்
ஏனோ ....
உள்ளத்தில் அன்பும் கூடும்...
மழையில் நனைந்தால்
காய்ச்சல் வருதே
உன் காதல் மழையில்
சொட்டச் சொட்ட நனைந்தும்
தும்மல் கூட வரலையே...
அன்பாய் பேசி அழகாய் சிரிக்கையில்
ஏனோ எங்கோ பறந்து விடுகிறேன்
கண்டிப்போடு அறிவுரை சொல்கயில்
அடக்கமாய் கேட்கிறேன்
தொலைவில் நின்றாலும்
பார்வைகள் தொடுகையில்
அழகு பெண்ணாய் உணர்கிறேன்....
அன்பே.....
காதலை நீ சொன்னதாய் நினைவில்லை
சொல்லி இருந்து
அந்த நாளை மறக்கும் அள்வுக்கு
என் காதல் ஒன்றும்...குறைந்ததில்லை.....
நான் சொல்ல நினைத்த நினைவு தான்....
சொன்னதாய் உனக்கு நினைவு ஏதும்........??
மகளாய் வாழ்ந்திருக்கேன்
தங்கையாய் ..நண்பியாய் வாழ்ந்திருக்கேன்
எத்தனை உறவாய் வாழ்ந்திருக்கேன்
காதலியாய்..தாயாய்...நண்பியாய்..
நான் வாழ்ந்த காலம் ஏனோ..
உன்னாலே தான்....
நம் இருவர் சம்மதம் வேண்டாம்மா...
நம்மை பெற்றவர் சம்மதமே வேண்டும்..
நல் வார்த்தை சொன்னாய்...
நிலையாக நெஞ்சிலே நிலைத்தும் விட்டாய்..
நினைவுகளோடு..
நானும்..உன்னோடு
காத்திருக்கிறேன்..............
..
....
..!
....
..!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->