03-28-2006, 09:05 AM
வவுனியாவில் சிறிலங்காவின் விமானப்படைக்குச் சொந்தமான ஆளில்லா வேவு விமானம் இன்று செவ்வாய்கிழமை வீழ்ந்துள்ளது.
வவுனியா சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியான மகாரம்பைக்குளத்தில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.
வவுனியாவின் வடகிழக்குத் திசையில் 4 கிலோ மீற்றர் தொலைவில் மகாரம்பைக்குளம் உள்ளது.
<img src='http://img479.imageshack.us/img479/1373/200603280020jh.jpg' border='0' alt='user posted image'>
சிறிலங்கா விமானப் படையின் தயாரிப்பான N226 LK சுப்பர் ஸ்டார் என்ற இந்த ஆளில்லா வேவு விமானம், தனியார் வீட்டு தொலைக்காட்சி அன்டெனாவில் மோதி வீட்டின் வெளிப்புறத்தில் விழுந்துள்ளது.
இயந்திரக் கோளாறினால் தலைமையகத்தின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட கிராம மக்கள் சிறிலங்கா காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானப் படையினர் மற்றும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ பகுதியிலிருந்து விமானத்தை மீட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் நாளன்று வவுனியாவின் கனகராயன்குளத்துக்கு கிழக்காக விஞ்ஞானகுளத்துக்கும் 9 ஆம் கட்டைக்கும் இடையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிறிலங்கா விமானப்படையின் ஆளில்லா வேவு விமானம் விழுந்து நொறுங்கியது.
http://www.eelampage.com/?cn=25112

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->