Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கஜினி வியாதி கலகல பீதி!
#1
இப்போதைய ஹாட்டஸ்ட் நோய் கஜினியின் "ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்'. அதை விட புதிய நோய் ஒன்று நம் கற்பனையூரில் இறங்கியுள்ளது. அதன் பெயர் "வெரி ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்'. விளக்கம்: இரண்டு நிமிடங்களுக்கு மேல் எதுவும் நியாபகத்தில் இருக்காது. ஏவிஎம் ஸ்டுடியோவுல "பப்பரப்பெ'ன்னு நடந்து வந்துகிட்டிருக்கிற வடிவேலு, கல் தட்டி கீழே விழ "சொட்டீர்'னு மண்டை தரையில மோதுது! (ஆங்... நோய் வந்துடுச்சி!) பத்து நிமிஷம் கழிச்சு மயக்கம் தெளியுது. கண் விழிக்கிறப்போ எதிர்த்தாப்ல விவேக்! முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் எழுந்திரிக்காரு வடிவேலு.

விவேக் : ஹேய் மேன்! என்ன குட்டித் தூக்கமா, ஷூட்டிங் கேப்ல டைரக்டர்கிட்ட சொல்லிட்டு ஓரமாப் போய் தூங்க வேண்டியதுதான! அதுக்கு ஏன் மேன் கீழே விழுந்து மயங்குனாப்ல ஓவர் ஆக்டிங் குடுக்குற!

வடிவேலு : நில்லு! நீ யாரு? என்ன விஷயம்? நீ பாட்டுக்கு ஒப்பாரி வைக்குற மாதிரி ஒரு மைலுக்கு பேசிக்கிட்டே போற!

விவேக் : அடப்பாவிகளா! ரஜினி சார், உன் கால்ஷீட்டை முதல்ல வாங்கச் சொன்னேன்னு ஸ்டேஜ்ல சொன்ன உடனே உனக்கு கெத்து ஏறிப் போச்சா!

வடிவேலு : ஆமா, ரஜினின்னா யாரு?

விவேக் : (அதிர்ச்சியுடன் இது உனக்கே ரொம்ப ஓவராத் தெரியல! சூப்பர் ஸ்டாரை யாருன்னு உன்னோட ரப்பர் வாயால கேக்குற அளவுக்கு உனக்கு மண்டையில ஏறிப்போச்சா! இதெல்லாம் எங்க போயி முடியப் போகுதோ? ஏய் வடிவேலு...

வடிவேலு : யாரது வடிவேலு?

விவேக் : ஆஹா... கௌம்பிட்டான்யா! ரொம்பவே ஓவராத்தான் போறான்! இவனை என்ன செய்யலாம்?

(விவேக் கண்களை மூடி யோசித்துக் கொண்டிருக்கும் போதே வடிவேலு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். கண்களைத் திறக்கும் விவேக், அங்கே வடிவேலு இல்லாததைப் பார்த்து)

விவேக் : அடங்கொப்புரானே! இங்கத்தான் நின்னுக்கிட்டிருந்தான். அதுக்குள்ள வண்டியைக் கௌப்பிட்டானே!

(தூரத்தில் வடிவேலு விவேக்கின் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப, விவேக் ஓடிச் சென்று காருக்குள் தாவுகிறார்.)

வடிவேலு : யார் நீ?

விவேக் : எப்பா, இப்பத்தான வெளியே நின்னு நாம ரெண்டு பேரும் அளவளாவிட்டுருந்தோமே!

வடிவேலு : எப்ப? நான் ஏன் உன்கூடப் பேசணும்?

விவேக் : ஆஹா... இப்ப புரிஞ்சிடிச்சி! கஜினி வியாதி உனக்கு வந்துடுச்சா!ஹஹ்ஹஹா! இந்தியாவின் தலைநகரம் எது?

வடிவேலு : தெரியாது.

விவேக் : சந்திரமுகி யாரு?

வடிவேலு : தெரியாது.

விவேக் : ஐஸ்வர்யா ராயோட லவ்வர் யாரு?

வடிவேலு : தெரியாது.

விவேக் : வைகைப் புயல் யாரு?

வடிவேலு : தெரியாது.

விவேக் : ஹேஹ்ஹே... கன்பார்ம்! உனக்கு அதுவேதான்!

வடிவேலு : ஆமா, என் கார்ல நீ எப்படி வந்த?

விவேக் : என்னது உன் காரா... ஏய், இது என் காருடா!

வடிவேலு : அப்ப உன் காருல என்னை ஏன் டிரைவரா வைச்சிருக்க?

விவேக் : ஆங்... ஒரு வேண்டுதல்தான்! அய்யா இப்ப எங்க போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?

வடிவேலு : தெரியாது. (என சொல்லிவிட்டு "நோ பார்ககிங்'ல் காரை நிறுத்தி விட்டு வேகமாக கீழே இறங்கி நடக்க ஆரம்பிக்கிறார்.)

விவேக் : அடப்பாவி! நோகாம நோ பார்க்கிங்ல காரை விட்டுட்டு, இன்டிப்பெண்டன்ஸ் டே பரேட்ல நடந்து போறாப்ல போறானே! (காரை எடுத்துக் கொண்டு வடிவேலுவைப் பின் தொடர்கிறார் விவேக்.)

விவேக் : சார், நான் உங்களுக்கு லிப்ஃட் தர்றேன், ஏறிக்கோங்க!

வடிவேலு : தாங்க்ஸ்! (ஏறிக் கொள்கிறார்.)

விவேக் : சார், உங்களுக்கு ஞாபக மறதி வியாதி! எல்லாத்தையும் மறந்துட்டீங்க! நீங்கதான் தமிழ்நாட்டோட சி.எம்!

வடிவேலு : (கொஞ்சம் குழப்பத்துடன்) அப்படியா... சொல்லவே இல்ல!

விவேக் : கடந்த 15 வருசமா நீங்கதான் ஆட்சி புரியறீங்க. உங்க ஆட்சியில வருசம் மும்மாரி பெய்யுது!

வடிவேலு : (ரொம்பவே குழம்பிப் போய்) ஹேய்... மேன் நீ யாரு... என்னைக் கடத்திட்டுப் போறியா? நான் யாரு தெரியுமா... முதலமைச்சர்.

விவேக் : (மனதிற்குள்) நம்பிட்டான்யா நம்பிட்டான்! (வடிவேலு விவேக்குடன் சண்டை போட்டு ஸ்டியரிங்கைப் பிடித்து இழுக்க, கார் நிலை தடுமாறி ஒரு மரத்தின் மேல் மோதி நிற்கிறது. ஐந்து நிமிடங்கள் கழித்து... வடிவேலு தெளிவாக கண்விழிக்க, விவேக்குக்கு நோய் பற்றிக் கொள்கிறது.)

வடிவேலு : ஆத்தாடி. தலை என்னமா வலிக்குது. ஆமா எங்கிட்டு இருக்கோம்? இது யாரு காரு? ஆக்சிடெண்ட் ஆகிக் கெடக்குது. பக்கத்துல பொத்துனாப்ல படுத்துக்கிட்டு கெடக்கறது யாரு. அட... விவேக்கு. இந்தப் பய எப்படி இங்க வந்தான்?

விவேக் : (கண் விழித்துக் கொண்டே) நான் எங்க இருக்கேன்? இது ஆஸ்திரேலியாவா? நீ யாரு மேன். டோட்டல் பாடிக்கும் கருப்பு டை அடிச்சிக்கிட்டு என்கூட உட்கார்ந்திருக்க?

வடிவேலு : (மனதிற்குள்) அலம்பலை ஆரம்பிச்சுட்டான்யா! ஒருவேளை மண்டையில ஏதும் டேமேஜ் ஆகியிருக்குமோ? (சத்தமாக) எப்பா, நீதான் விவேக்கு! நாந்தான் வடிவேலு! ரெண்டு பேருக்கும்தான் இப்ப சினிமால நெம்பர் ஒன் காமெடி நடிகன் யாருன்னு போட்டி!

விவேக் : என்ன மேன் நக்கலா? நீ ஸ்கீரின்ல வந்தா மக்களால சிரிக்கவா முடியும்? இதுல என்னை வேற பஃபூன்னு சொல்லுற... நான்சென்ஸ்! ஏன் மேன் காரையும் மரத்தையும் கிஸ்ஸடிக்க வைச்சிருக்க?

வடிவேலு : யாரு... நானு... டிரைவரு சீட்டுல யாரு உட்கார்ந்திருக்கான்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டு பேசுறது!

விவேக் : எனக்கு பசிக்குது! உங்களைப் பாத்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது. எனக்கு பீஸôவும், பணியாரமும் செஞ்சித் தாரியா?

வடிவேலு : (மனதிற்குள்) பையன் ஒரு தினுசாப் பேசுறானே... ஓருவேளை கஜினி வியாதி வந்திருக்குமோ? செக் பண்ணிப் பாப்போம்! (சத்தமாக) தம்பி, இந்தியாவின் பிரதமர் யாரு?

விவேக் : சானியா மிர்சா.

வடிவேலு : அய்யோ! அய்யோ! தம்பி உனக்கு மண்டையில அடிபட்டு எல்லாம் உடனே மறந்து போற வியாதி வந்திருக்கு.

விவேக் : ஓ அப்படியா! நான் யாரு?

வடிவேலு : நீதான் சர்வதேச தீவிரவாதி ஒஸôமா பின்லேடன். அமெரிக்காக்காரன் உன்னைத்தான் தேடிக்கிட்டு இருக்கான்.

விவேக் : அய்யய்யோ! நானா மறந்தாப்ல போயி போலீஸ்ல மாட்டிக்கிட்டா ஆபத்தாயிருமே! இப்ப நான் என்ன பண்ணுவேன்?

வடிவேலு : ஆங்... அதுக்குத்தான் அண்ணன் ஒரு ஐடியா வைச்சிருக்கேன். அந்த உருட்டுக் கட்டைய எடு! உன் குல தெய்வத்தை நெனைச்சுக்கிட்டு "பொடெர்'னு உன் மண்டையில நீயே அடிச்சிக்கோ! கலங்கிப் போன கபாலம் திரும்ப தெளிவாயிரும்!

விவேக் : சரிண்ணே! (கட்டையை எடுத்து பயந்து நடுங்கியபடியே ஒரு நிமிடம் யோசிக்கிறார்.)

வடிவேலு : என்னா யோசிக்கிற! ஒரே போடாப் போடு!

(வடிவேலுவின் மண்டையில் அடிக்கிறார்.)
ThanksBig Grininamani....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#3
SUNDHAL Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன நீங்களே சிரிக்கிறிங்க?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
ஆஅஅஆ சிரிச்சனா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#5
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#6
SUNDHAL Wrote:ஆஅஅஆ சிரிச்சனா?

அப்ப அழுதனீங்களா..... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)
Reply
#7
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சுண்டலுக்கே இந்தக் கதையைப் பார்த்து சிரிப்பதா? அழுவதா என்று தெரியலா?

Reply
#8
நேக்கும் கஜனி வயாதி வந்திட்டுதுப்பா..அதான் கேட்டன்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)