Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கதிர்காமர் கொலையும், சந்திரிகா நிலையும் பகுதி - 6
#1
கதிர்காமர் கொலையும், சந்திரிகா நிலையும் பகுதி - 6

கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது….

சென்ற தொடரில் இந்திய அரசின் உளவுத்துறையான றோ ஏன் கதிர்காமரை கொலை செய்திருக்கக்கூடாதென்று பார்த்தோம்அல்லவா?. இம்முறை எப்படி அக்கொலையை றோ செய்திருக்கும் என நோக்குவோம் எம்மினிய வாசகர்களே! இந்திய அரசின் உளவு அமைப்பான றோவினுடைய ஊடுருவல் இலங்கையில் அதிகமாக இடம்பெற்றிருக்கின்றது. அதாவது றோவினது இலங்கை உபஅமைப்பான ஈ.என்.டி.எல்.எப்பினது உறுப்பினர்களின் ஊடுருவலானது விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் கௌசல்யனின் கொலையில் அம்பலமானதை அறிந்திருப்பீர்கள். அதை எம் வாசகர்களுக்காக மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம். கௌசல்யன் கொலை நடைபெற்று சில வாரங்களின் பின் வெலிகந்தையில் கருணா குழுவின் முகாம்மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவர் இந்தியாவைச்சேர்ந்தவர். இவர் கௌசல்யன் கொலையாவதற்கு மூன்றுநாட்கள் முன்தான் இலங்கை வந்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கொலையான பின் இவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கான எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாம் ஆனந்தசங்கரியால் முன்னெடுக்கப்பட்டவையென்பதும் நீங்கள் அறிந்தவையே. ஆகவே இந்திய உளவுப்பிரிவின் நடவடிக்கைகள் இலங்கையரசியலில் முக்கிய இடம் வகிப்பதை நாம் அவதானிக்கலாம். அத்துடன் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரியின் தொடர்புகளும் இந்திய உளவு அமைப்பான றோவினருடன் ஆழமாகவிருப்பதையும் நீங்கள் அவதானிக்கலாம். அதாவது வெலிகந்தையில் கொல்லப்பட்டவரின் உடல் இந்தியாநோக்கி போவதாகவிருந்தால் அதற்கு உதவியவரின் அரசியல் செல்வாக்கு எப்படி இருந்திருக்கவேண்டும். அத்துடன் ஆயுதங்களுடன் தமிழ்நாட்டில் பிடிபட்ட ஈ.என்.டி.எல்.எப்பின் உறுப்பினர்களை விடுதலைப்புலிகள் என தமிழக காவல்த்துறையினர் கைது செய்திருந்தவேளை இலங்கையில் இருந்த ஓர் அரசியல்வாதி இந்தியா சென்று அவர்களை விடுவித்திருந்தார். அது யார்தெரியுமா? ஆம் உங்கள் ஊகம் சரிதான். ஆனந்தசங்கரியார் தான் இந்தியா சென்று அவர்களை விடுவித்திருந்தார். அந்தளவுக்கு ஆனந்தசங்கரி இலங்கை ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்களுக்கும் சரி, இந்திய ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்களுக்கும் சரி எப்படியோ அவர்களுக்கு வேண்டியவராகவே இருக்கின்றார். இவர்களைப்பயன்படுத்தியே இந்திய அரசின் உளவுப்பிரிவான றோவினது ஊடுருவலானது இலங்கையில் இருக்கின்றது. அமிர்தலிங்கம் கூட்டணித்தலைமையில் இருந்தபோதே றோவும் இலங்கையில் ஆழ ஊடுருவியிருந்தது. அந்தவகையில் இந்தியாவினது இலங்கைத் தமிழ்க்கட்சிகளுடனான தொடர்புகள் அமிர்தலிங்கம் காலத்திலிருந்தே இலங்கையில் அதிகமாக இருக்கின்றதென்பதில் நாம் ஐயமுறத்தேவையில்லை. அதை இப்போதும் பேணிவரும் அரசியல்வாதி எங்கள் தமிழின வரலாற்றுத்துரோகி ஆனந்த சங்கரி. இவையிருக்க, இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியலைப்பொறுத்தவகையில் யாரை எவர் கொன்றாலும் தான் பதவியில் இருக்கவேண்டும் என்பதில் உறுதியான போக்கைக்கொண்டிருப்பவர். ஆதலினால் கதிர்காமரைக்கொன்றால் என்ன? டக்லஸைக்கொன்றால் என்ன? அவர்கள் கொலையைவைத்தே அரசியல் நடாத்தும் திறமை அவருக்கிருக்கின்றது. அதனடிப்படையில் சிங்கள அரசு கூலிக்கு வைத்திருக்கும் ஈ.என்.டி.எல்.எப்பின் உறுப்பினர்களை வைத்தே றோ கதிர்காமரைக்கொலைசெய்திருக்கலாம் அல்லவா?. அதற்கு கூடுதலான விளக்கமாக கருணாவின் குழுவினர் ஊடகவியலாளர் சிவராமைகக்கடத்தி அதிகூடிய பாதுகாப்பிற்குட்பட்டிருந்த இடத்தில் கொலைசெய்து வீசியெறிந்திருந்தார்கள். அவரைக்கடத்தும்போது நேரடியாகக்கண்ட சாட்சிகளின் வாக்குமூலத்திலிருந்தே அவரைக்கொன்றது கருணாவின் வலதுகரமான இனியபாரதியென்பது தெரிந்தும் அவனைக்கைது செய்யாமல் விட்டுவிட்டு, பின் ஆயுதத்துடன் அவனையும், ஓர் முஸ்லீமையும் சேர்த்து கைதுசெய்து இவர்களின் உயிர்ப் பாதுகாப்பிற்கு உத்தரவாதத்திற்கென்று சிங்கள இடத்திற்கு இவர்களின் சிறையை மாற்றிவிட்டு இன்று அக்கொடியவனான இனியபாரதி அவனது குற்றத்திற்கான தண்டனை பெறாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல், ஏன், எதற்காக கைது செய்யப்பட்டான் என்பது தெரியாமல் இராணுவத்துடன் இராணுவவாகனத்தில் உலாவருகின்றான். இதை சிறீலங்கா இராணுவமும், இலங்கை இராணுவத்தின் உளவுப்பிரிவினரும் மறுக்கமுடியவுமில்லை, மறைக்கமுடியவுமில்லை. அவ்வாறான துரோக கும்பலைவைத்தே இந்திய உளவுப்பிரிவான றோ இலங்கையரசியலில் கதிர்காமரைக்கொலைசெய்து, பழியை புலிகள்மேல் போட்டு, சுகந்தி கதிர்காமருக்கு அனுதாபத்தையும் தெரிவித்து, இலங்கையரசுக்கு கவலையையும் தெரிவித்து, புலிகளை கண்டித்து தனது அரசியல் சாமர்த்தியத்தைக்காட்டியிருக்கலாம் அல்லவா? அவர்கள் கருணாவின் கூலிக்கும்பலை வைத்து கொலைசெய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆயுதத்துடன் கொலைநடந்த இடத்திலிருந்து வெளிச்செல்லும்போது இராணுவத்தினர் கைதுசெய்ய ஏதுவாகலாம் என வாசகர்கள் நீங்கள் நினைப்பது எமக்கு புரிகின்றது. அப்படி நடக்க சாத்தியமில்லை வாசகர்களே! காரணம் அக்கும்பலிடம் இலங்கையில் எங்கும் சென்றுவரத்தக்கதாக இலங்கை அரசின் உளவுப்பிரிவினருக்கான அடையாள அட்டையிருக்கின்றது. இவர்களை சந்தேகத்தின் பேரில் இராணுவம் மறித்திருந்தாலும் கூட தம்மிடமுள்ள சிறீலங்கா உளவுத்துறையின் அடையாள அட்டையை வைத்தே சாதாரணமாக தப்பியிருக்கலாம். இவைகளை கருத்தில் எடுத்தே றோவானது இலங்கை அரசியலில் விளையாடி தமக்கு எதிராக செயற்பட்ட கதிர்காமரை போட்டு, தம்மிடமிருந்து து}ர விலகிய இலங்கையை தம்மிடம் நெருங்கிவர வைத்திருக்கின்றார்கள். அதையே வெளிநாட்டு அமைச்சராக பதவியேற்ற அனுராவின் முதற்பயணமான இந்திய பயணமும் எடுத்துக்காட்டுகின்றது அல்லவா? வாசகர்களே! அடுத்து நாம் பார்க்கப்போவது சந்திரிகாவின் கட்சியை. உள்ளிருந்து கொல்லும் வித்தையை அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான காரணம்
தொடரும்...

மலரவன் மலரினி
www.tamilkural.com

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)