Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வினோதமாகப் பிறந்த பெண் இரட்டையர்!
#1
<b>வினோதமாகப் பிறந்த பெண் இரட்டையர்!</b>

பெய்ஜிங், ஆக. 26:

சீனாவின் ஜை யியாங் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு 2 பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் செவ்வாய்க்கிழமை பிறந்தன. இரு குழந்தைகளுக்கும் ஒரே பிறப்புறுப்புதான் காணப்படுகிறது. இரண்டும் சேர்ந்து 4,380 கிராம் எடைதான் இருக்கின்றன.

மகப்பேறு மருத்துவமனையிலிருந்து இவ்விரு குழந்தைகளையும் மேல் சிகிச்சைக்காக ஷாங்காய் நகரில் உள்ள ஃபுடான் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு இரு குழந்தைகளையும் தனியாகப் பிரிக்க அறுவைச் சிகிச்சை நடைபெறவிருக்கிறது.

இதில் ஒரு குழந்தைக்குப் பிறந்ததிலிருந்தே இதயக் கோளாறு காணப்படுகிறது. மற்றொரு குழந்தைக்கு நுரையீரல் ரத்தக்குழாயில் கோளாறு காணப்படுகிறது.
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)