<span style='color:brown'><b>மீன்பிடி படகு வெடித்ததில் சோதனையிட முயன்ற கடற்படையினர் 8 பேரைக் காணவில்லை</b>
<img src='http://www0.bbc.co.uk/worldservice/images/2006/02/20060211165536lankanavyboat203.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் வடக்கே மன்னாருக்கும் கற்பிட்டிக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் குதிரமலை என்னுமிடத்தில் மீன்பிடி இழுவைப் படகொன்றைக் கண்ட அதிவேக டோரா படகில் சென்ற கடற்படையினர் அதனைச் சோதனையிட முயன்றபோது அந்தப் படகு வெடித்துச் சிதறியதில் கடற்படையினர் 8 பேர் காணாமல் போயிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளனர்.
கடற்படையின் படகிலிருந்த எஞ்சிய 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி இழுவைப்படகும். கடற்படையின் டோரா படகும் கடலில் மூழ்கிவிட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெடித்துச் சிதறிய மீன்பிடி படகில் 6 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மதியம் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
- பீபீசி தமிழ்
http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
<b>கல்பிட்டி கடலில் 8 கடற்படையினரை காணவில்லை; 11 பேர் காயங்களுடன் மீட்பு 6 புலிகள் உயிரிழந்ததாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு</b>
<img src='http://www.virakesari.lk/vira/html/admin/head/head_img/uploaded/doora.jpg' border='0' alt='user posted image'>
கற்பிட்டி குதிரைமலை கடற்பரப்பில் நேற்று மாலை றோலர் மீன்பிடிப்படகு ஒன்றை கடற்படையின் டோறா பீரங்கிப்படகு அண்மித்ததையடுத்து அந்த மீன்பிடிப்படகு வெடித்துச் சிதறியதாகவும், இதனால் கடற்படையின் டோறாப் படகும் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவத்தில் மீன்பிடிப்படகில் இருந்த ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்த கடற்படை வட்டாரங்கள், தமது டோறாப்படகில் இருந்த 19 பேரில் எட்டுப்பே ரைக்காணவில்லையென்றும் ஏனைய பதினொருபேரும் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாகவும் தெரிவித்தன.
நேற்றுமாலை 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
கற்பிட்டி குதிரைமலை கடற்பரப்பில் மேற்குப் புறமாக 17 கடல்மைல் தூரத்தில் சந்தேகத்திற்கிடமான றோலர் மீன் பிடிப்படகு ஒன்றை அவதானித்த கடற்படையின் டோறாபடகு அந்த மீன்பிடிப்படகை அண்மித்து, அதனை சோதனையிட முயன்றபோது அந்தப்படகு வெடித்துச் சிதறியது. இதனால், அந்தப்படகில் இருந்த ஆறுபேர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்த கடற்படை வட்டாரங்கள் , றோலர் படகு வெடித்துச் சிதறியதால் தமது டோறா பீரங்கிப்படகும் கடலில் மூழ்கிவிட்டதாகவும், டோறாவில் இருந்த 19 பேரில் எட்டுப்பேரைக் காணவில்லை என்றும் தெரிவித்தன. அதேநேரம், டோறாவில் இருந்த 11 பேர் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்ததாவது:
கடற்படையினர் எட்டுப்பேரைக் காணவில்லை. பதினொரு கடற்படையினர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விடுதலைப்புலிகளின் றோலர் படகே வெடித்துச் சிதறியிருக்கலாம். இச்சம்பவத்தில்
காணாமல் போன படையினரைத் தொடர்ந்தும் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். இது குறித்து தமிழீழ விடுதலைப்புலிகளின் வட்டாரங்களை நேற்று மாலை தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன் இது குறித்து தெரிவிப்போம் என்றன.
இச்சம்பவத்தையடுத்து தலைமன்னார் கடலில் பாதுகாப்பைப்பலப்படுத்தியுள்ள கடற்படையினர், வீதிகளில் கடும் சோதனைகளை நடத்தி வருவதாகவும் தெரியவருகிறது.
-Veerakesari
</span>