Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தீண்டாமை ஒழிப்பு இயக்க வரலாறு
#1
தீண்டாமை ஒழிப்பு இயக்க வரலாறு

கே. டானியல்

இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே குறிப்பாக வட பகுதியில் நிலவி வரும் சாதி அமைப்பு முறைக்கு எதிராக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளுக்கான இயக்க பூர்வமான காலத்தை 'சுமார் ஐம்பது ஆண்டு காலம்' என்று ஓரளவுக்குக் குறிப்பிடலாம். இந்த ஐம்பது ஆண்டு காலத்திற்கு முன்னால் இதன் கோர ரூபம் எப்படி இருந்திருக்கும் என்பதனை இந்த ஐம்பது ஆண்டு காலக்குறிப்புகளைக் கொண்டு கணக் கெடுத்துக் கொள்வது யாருக்கும் கடினமாக இராது.

பரிணாம வளர்ச்சிக் கணக்கெடுப்பில் இருந்து பார்க்குமிடத்து நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் பிறப்போடு இந்தச் சாதி அமைப்பு முறையும் பிறப்பெடுத்ததென்று குறிப்பிடுவது பொருத்தமாயினும் இங்கு இந்த சாதி முறைக்கு எதிரான பொது இயக்கங்கள் பிறப்பிக்கப்பட்ட காலத்தைக் கணக்கிற் கொண்டுதான் இதன் வயது ஐம்பது ஆண்டுகளுக்குக் கணக்கிடப்படுகிறது..

தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரியப் பிரதேசம் என உரிமை கொண்டாடும் பிரதேசங்களுள் கேந்திரப் பிரதேசமாகக் கணிக்கப்படும் வடபிரதேசம் எங்கும் உள்ள கிராமப்பிரிவுகளுக்குச் சென்று உன்னித்து ஊடுருவிப் பார்த்தால் இந்தச் சாதி அமைப்பு முறையின் சின்னங்களைத் தரிசிக்கமுடியும். கிராமங்களில் அமைப்பு முறையும்/ ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளும்/ அவர்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் பாதைகளும்/ அவர்கள் வாழும் நிலங்களும்/ அவைகளைச் சுற்றியுள்ள பிரதேச நிலங்களின் நிலத்தோம்புப் பெயர்களும்/ ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் பெரு ஆலயங்களும்/ குளங்களும்/ கிணறுகளும்/ மடங்களும்/ வேறும்பல சரித்திரச் சின்னங்களும்/ கால் நடைகளின் பட்டிக் குறிகளும்/ வீதிப் பெயர்களும்/ கிராமப் பெயர்களும்/ பேச்சு முறைகளும்/ பழக்க வழக்கங்களும்/ நன்மை தின்மை வைபவங்களின் நடை முறைகளும்/ மிகவும் தீண்டப்படாதாருடன் தொடர்பு கொள்வதற்காகச் சங்கடப் படலையோடு கூடிய படிலைத் தலைவாயிலும்/ அதற்குசற்று முன் வரிசையில் (உள்ள சாதியினருடன் பேசிக்கொள்வதற்காக அமைந்த) சவுக் கண்டியும்/ தம்மோடொத்தவர்கள் மட்டும் உள்ளே வர வசதியாக அமைக்கப்பட்ட நால்சார வீடும் நடு முற்றமும்/ பாரம்பரிய பெருஞ்சாதி மனிதர்களின் சாதி அமைப்பு முறையினை அனுசரித்து அமைந்த ஞாபகச் சின்னங்களாக இருப்பதைத் தெளிவாக உணர முடியும். .

இந்தச் சாதி அமைப்பு முறைக்கும் அதன் வெறியாட்டாங்களுக்கும் சவாலாகத் தலையெடுத்து வந்த எதிர்ப்புச் சாதனங்களுடன்தான் சாதி எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதெனலாம்.1915-18ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட பகுதியில் சுன்னாகத்தைச் சேர்ந்த வி. எம். கந்தையா என்பவரை ஆசிரியராகக்கொண்டு வெளியான 'ஆதி திராவிடன்' மாத இதழுடன் இந்தச் சாதி எதிர்ப்பு இயக்கம் மெது மெதுவாக ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் இந்த 'ஆதி திராவிடன்' அடிப்படையில் சமய சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டிருந்தமையால் சாதி எதிர்ப்பு இயக்கத்தில் இது பிரதானப்படுத்துமளவுக்குத் தலை நிமிர்ந்து நிற்கவில்லை. இதைத் தொடர்ந்து 1920-25 கால இடைவெளியில் சூ. எ. சின்னப்பு என்பவரை ஆசிரியராகக் கொண்ட 'மேல் நோக்கம்' என்ற பத்திரிகை ஒரு படி முன்னேறிச் சாதிக் கொடுமையின் தம்மைகளை ஆத்மார்த்தக் கருத்துக்களோடு சேர்த்துக் கொண்டதும்/ அந்த வேளை அச்சுத்தொழிýல் பயிற்சி பெற்று இன்றும் ஈழகேசரி பொன்னையா என்று கெüரவமாக அழைக்கப்படும் பெரியார் 'முன்னேற்றம்' பத்திரிகையை நெறிப்படுத்தியதும் குறிப்பிடக்கூடியனவாகும். இந்த காலக்கட்டத்தில் தீவிரமான சாதி ஒழிப்பு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு துணிச்சலுக்கு இலக்கணமாக விளங்கிய அமரர் என்ற பத்திரிகையும்/ அப்பத்திரிகை மூலமாகப் போராட்டமயமான கருத்துக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட 'ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கமும்'தான் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் ஓர் அத்தியாயத்தின் தொடக்கமாய் அமைந்தது எனலாம். ஒடுக்கப்பட்ட மக்கள் பட்டுவந்த இன்னல்களுக்கு எதிராக எழுந்துநின்று குரல் கொடுக்கும் பணியில் ஒப்புதல் தெரிவித்துக்கொண்டவர்களில் முக்கியமானவர்களாக இருந்தவர்களுள் அன்று இராமநாதன் கல்லூரி ஆசிரியராக இருந்த ருத்திரகோடீஸ்வர ஐயர்/ மத்தியூஸ் பாதிரியார்/ யாழ்பாணக்கல்லூரி அதிபர் லொக்கூட்/ பிக்கனல் பாதிரியார் ஆகியோர் குறிப்பிடக்கூடியவர்களாவர். அவ்வேளை இந்துக் கல்லூரி ஆசிரியராக இருந்து நெவில்ஸ் செல்லத்துரை அவர்களைத் தலைவராகவும் அமார் யேக்கப் ஸ்ரீகாந்தி அவர்களைச் செயலாளராகவும் கொண்டு உதயமாகிய 'ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கத்திற்கு' மேலே குறிப்பிடப்பட்ட நால்வரும் போஷகர்களாக இருந்தமையிýருந்து அன்று தொடக்கம் இன்றுவரை சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் தன்னந்தனியாக நிற்கவில்லை என்பதும்/ காலத்துக்குக் காலம் நல்லெண்ணம் கொண்ட மக்கள் பலரும் ஒத்தாசை நல்கியுள்ளனர் என்பதும் புலனாகின்றது..

இந்தப் போஷகர்களில் மூவர் வெள்ளையர்கள் ஆதலால் அவர்கள் பிரதானப்படுத்த படவில்லையாயினும்/ உருத்திர கோடீஸ்வர ஐயரைப் பொறுத்தவரை அவர் சாதித் தமிழர்களின் கண்டனங்களுக்கும் எதிர்ப்பு நடவடிக் கைகளுக்கும் இலக்காக வேண்டியதாயிற்று. இதேபோல் இந்த ஸ்தாபனத்தின் தலைமகனாகிய யோவேல் போல் எண்ணற்ற எதிர்ப்புகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்துப் பெருமையைச் சம்பாதிக்கத் தவறவில்லை..

1927ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் இலண்டனிýருந்த தனது நண்பர் மூலமாக இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை/ இலண்டனில் குடியேற்ற நாடுகளின் பிரச்சனைகளைக் கவனிக்கவென நிறுவப்பட்ட சபைக்குத் தெரிவித்ததில் அமரர் யோவேல் போல் அவர்கள் எடுத்த முயற்சியின் பலாபலனாக டொனமூரைத் தலைவராகக் கொண்டு இலங்கைக்கு வந்த அறுவர் அடங்கிய கமிஷனாகும். 'வயது வந்தோருக்கு வாக்குரிமை அளித்தல்' என்ற கொள்கையின்கீழ் அன்று குடியேற்ற நாடுகளின் காரியதரிசியாக இருந்த அமெரி என்ற ஆ.ட.யினால் நியமிக்கப்பட்ட டொனமூர்க் கமிஷனுக்கு எதிர்ச்சாட்சியமளிக்க சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் இலண்டன் மாநகரம் சென்றதிýருந்துதான்/ 'பஞ்சமச் சாதியிடம் வாக்குக் கேட்டுச் சாதிமான்கள் யாசகம் போவாரோ?' என்ற கேள்வி சாதிமான்களிடையே ஆக்ரோஷமாக எழுந்து சாதி அடக்குமுறைகள் கோர வடிவங்களை எடுத்தன/ என்பது முக்கிய கவனத்துக்குரியதாகும். பின்னர் இங்கே டொனமூர் கமிஷன் “வயது வந்தோருக்கு வாக்குரிமை” கிடைப்பதன் மூலம் பல உரிமைகளை அவர்கள் அடைய வழி பிறக்கும் என அறிக்கை மூலம் பிரகடனப்படுத்தியபோதும் உள்நாட்டு அரச இயந்திரங்களைப் பெருஞ்சாதியினரே ஆளுமை நடத்தி வந்தமையால் ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர்பார்க்கப்பட்டவைகள் நடந்தேறவில்லை. பதிலுக்கு அடக்குமுறைகள் அதிகரித்தன. அரசு இயந்திரங்கள் தீவிரமடைந்தன. விதானை/ உடையார்/ மணியகாரன் என்ற பதவிகளில் குந்தியிருந்தவர்கள்/ காவல் படையினைச் சேர்ந்தவர்கள் சிவில் சேவை அதிகாரம் வகித்தவர்கள் உட்பட சகல பிரிவினரும் தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் துரித கதியில் செயற்படத் தொடங்கினர். இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாத ஒடுக்கப்பட்ட மக்கள் மதமாற்றம் போன்ற குறுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் ஒரு சில சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின என்பது உண்மையே. அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிகளுக்குள் கூட அனுமதி கிடைக்கப்பெறாத மக்களுக்குப் பிற மதப் பாடசாலைகள் சற்று வழிவிட்டன. சுற்றுப்புறச் சார்புகளை மீறிப் பாடசாலைகளுக்குச் சென்ற பலர் தண்டிக்கப்பட்டனர். இம்சிக்கப்பட்டனர்..

பகிரங்க வீதிகளில் தலைநிமிர்ந்து நடமாடத் தடை - சுடலைகளில் பிணம் சுடத் தடை - பொது ஸ்தாபனங் களின் உள்நுழையத்தடை -சுதந்திரமான வாகனப் போக்குவரத்துத்குக்குத் தடை - கோவிற் பக்கம் செல்லத்தடை - மேளம் அடிக்கத்தடை - மீசை விடத் தடை - கடுக்கன் அணியத் தடை - குளங்களில் குளிக்கத் தடை - பந்தல் போட்டு வெள்ளை கட்டத்தடை - முழங்கால் மட்டத்திற்குக் கீழ் வேட்டி அணியவும்/ மேல் அங்கி அணியவும்/ சால்வை போடவும் தடை - வண்டியில் ஆசனத்தட்டில் ஏறியிருக்கத் தடை - புகை வண்டியின் ஆசனங்களில்/ பஸ் ஆசனங்களில் இருக்கத்தடை - கடை போன்றவை வைக்கத்தடை - செய்த வேலைக்குக் கூý கேட்கத்தடை - குழந்தைகளுக்கு நல்ல பெயரிடத் தடை - பால்மாடு வளர்க்கத்தடை - விறுமர்/ அண்ணமார்/ காளி/ பெரியதம்பிரான்/ வீரபத்திரர்/ வைரவர்/ நாச்சிமார்/ காத்தவராயர் ஆகிய தெய்வங்களின் பெயர்களை விட ஏனைய பெயர்களில் கோவில்களை அமைக்கத்தடை - குடை பிடிக்கவும்/ வெள்ளை வேட்டி அணியவும்/ செருப்பு அணியவும் பெண்கள் குடுமி போட்டுக் கொள்ளவும் தடை - தாவணி போடத்தடை தங்கத்தாý/ நகை நட்டுக்கள் அணியத் தடை இப்படித் தடை வரிசையோ கணக்கற்றவை. இவை யாவும் தேச வழமை என்ற மதிப்பீட்டுக்கு உட்பட்டவையாகவே கணிக்கப்பட்டன. சர்வ சன வாக்குரிமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறையில் இராமநாதன் துரை அவர்கள் இலண்டன் சென்றிருந்தபோது அவரைத் தலைவராக/ கொண்டிருந்த சைவசித்தாந்த சபைக்குத் தற்காýகத் தலைவராக ஆறுமுக நாவலரின் மருமகனாகிய த. கைலாசப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அப்போது பரமேஸ்வராக் கல்லூரியில் சைவ சிந்தாந்த அறக் கல்விப் போதனைக்காக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அப்போது திரு. யோவேல் போல் அவர்களால் உந்தப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டோர் சிலர்/ தாமும் சைவ சித்தாந்த அறக் கல்வியைப் பெற வேண்டும் என்று கோரி/ மாநாட்டுத் தலைவர் கைலாசப்பிள்ளை மறுக்கவே. அறக்கல்விக்கு அனுமதி கேட்டுப் போயிருந்த ஒடுக்கப்பட்டோர்/ அவரின் மறுப்பை எழுத்தில் பெற்று/ டொனமூர்க் கமிஷனுக்கு தந்தி மூலம் இலண்டனுக்கு அனுப்பிவைத்தனர். அந்த வேளையும் உயர்சாதியைச் சேர்ந்த நாகநாதி அதிகாரம்/ இலங்கைச் சட்டசபை உறுப்பினராக இலண்டனில் இருந்த தம்பிமுத்து ஆகியோர் இந்த மக்களுக்கு ஆதராவாய் இருந்தனர். நம்மவர் துணிந்து செயற்பட்டமையால்தான் இராமநாதன் துரை அவர்களின் இலண்டன் பிரயாணம் தோல்வியில் முடிந்ததெனலாம். 1930ம் ஆண்டுக்காலப் பகுதியின் ஹண்டி. எச். பேரின்ப நாயகத்தைத் தலைவராகவும்/ செனட்டர் நாகýங்கம்/ ஒறேற்றர் சுப்பிரமணியம்/ கலைப் புலவர் நவரத்தினர்/ ஏ. எஸ். கனக ரத்தினம் ஆகிய முக்கியஸ்தர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இளைஞர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் தோன்றியது. இந்த ஸ்தாபனம் பல தேசியப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தபோதும்/ சாதி ஒழிப்பு விவகாரத்தில் பெருமளவு செயற்பட்டு/ 'சம ஆசனம் - சம போசனம்' என்ற கொள்கையை ஏற்று நாடெங்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அப்போது இவர்களுக்குச் சாதிமான்களால் கிடைத்த எதிர்ப்புகள் பெருமளவாகும். இதன் பிரச்சாரத்திற்கென தமிழக தமிழறிஞர் திரு.வி.க அவர்கள் அழைக்கப்பட்டு/ சமபந்தி சமபோசனப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதும் அவர் திரும்பிப்போன மறுகணமே அவர் பேசிச் சென்றதும்/ சம ஆசன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதுமான பல பாடசாலைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. வசாவிளான் வடமூலை/ ஒட்டகப்புலம்/ சுளிபுரம்/ புன்னாலைக்கட்டுவன்/ காங்கேசன்துறை/ பருத்தித்துறை ஆகிய இடங்களில் சுமார் 14 பாடசாலைகள் சாதி வெறியர்கள் வைத்த தீயில் வெந்து சாம்பராயின..

1931இல் வரவிருந்த ஆட்சிமன்றத் தேர்தலைத் தமிழர்களின் உரிமைக்காகப் பகிஷ்கரிக்கத் திட்டமிட்டுப் பிரசாரம் செய்துவந்த வாýபர் காங்கிரசினர்/ அவ்வேளை சாதி வெறியர்களின் கோபாக்கினிக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தக் காலக்கட்டத்தோடு வீறுகொண்டெழுந்து நின்ற சாதி வெறியர்கள் கிராமப் புறங்கள் எங்கும் தங்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்தாக்குதல்களுக்கு முதன்முதýல் பýயிடப்பட்டவன் புத்தூர்ப்பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டவன் ஒருவனாகும். பீதி மிகுதியால் பனை மரத்தில் ஏறி இருந்த ஒரு அப்பாவிப் பஞ்சமன் மரம தறித்து வீழ்த்தப்பட்டு - கொல்லப்பட்டு - அந்த மரத்தின் அடியிலேயே கொழுத்திப் பிடி சாம்பராக்கப்பட்டான். ஏனைய கிராமப்புறங்களில் இல்லாத அளவில் புத்தூர்ப்பிரதேசத்தில் நில ஆதிக்கமுறையும்/ சாதி ஒடுக்கு முறையும் மேலோங்கி யிருந்தன என்பதற்கு இன்றும் அழியா அடையாளச் சின்னங்கள் பல உண்டு. பல பாரம்பரிய குடும்பங்களின் பழைய நால்சார் வீடுகளில் இன்றுவரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பல்லக்குகளும்/ வீட்டு முற்றங்களின் நீள வரிசைகளில் சுற்றுவட்டாரத்தில் உண்டாக்கப்பட்ட பல பாரம்பரிய பல அளவுகள் கொண்ட பொருக்குப் பட்டையற்ற நேர்மரங்களும் இன்றைய அமைப்புக்கு சற்று வேறுபட்ட/ சற்று உயர்ந்த அமைப்பிலுள்ள ஏர்க் கலப்பைகள் இடம் பெற்றுள்ளதும் இன்றும் நாம் பார்க்கக்கூடிய சின்னங்களாகும். அக்காலத்தில் பல்லக்கு முதý குடும்பம் எனப்படுவோர் தங்கள் பிரயாணத்திற்குப் பயன்படுத்திய பல்லக்குகளைச் சுமந்து செல்லக் கோவியர் சமூகத்தினரை அமர்த்தி வைத்துக் கொண்டிருந்ததையும்/ ஊரிலுள்ள பஞ்சமர்களிடையே ஏற்பட்ட குற்றங்களுக்குத் தண்டணை கொடுக்க/ அளவான மரத்தைப் பார்த்து அவர்களைக் கைகொடுக்க வைத்துச் சவுக்கடி கொடுத்து தர்பார்த்தன வழக்கத்தையும் மாட்டுக்குப் பதிலாக/ அடிமை மனிதனை ஏரில் பூட்டி/ உழுது பயிரிட்டமையும் இந்த அடையாளச் சின்னங்கள் இன்றும் நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன..

கýயாணப் பெண்களுக்குச் சீதனம் கொடுக்கும்போது அந்தச் சீதன வரிசையில் ஒரு கோவியனும்/ ஒரு பள்ளியும் நிச்சயமாக இடம் பெற்றே தீரவேண்டும் என்பது இறுக்கமான நடைமுறையாயிருந்தது. இந்தக் குடும்பங்களின் மரண வீடுகளில் தொண்டு வேலைகள் புரியும் வரிசைகள் சில இன்று வரை இருந்து வருவதைக் காணலாம்..

இயற்கை மரணத்தை எதிர் நோக்கி நிற்கும்/ நயினார் அல்லது நயினாத்தி மரணப் படுக்கையிற் கிடக்கும்போது கண்/ வாய் பொத்த கோவியன்/ அல்லது கோவிச்சி காத்திருக்க வேண்டும். மரணம் நிகழ்ந்த பின்பு சகல தொண்டு வேலைகளையும் கோவியக் குடும்பம் செய்து முடிக்க வேண்டும். மரணித்தது ஆணாக இருப்பின் பரியாரி' என்று இவர்களால் அழைக்கப்படும் அம்பட்டன் பிணத்துக்குச் சவரம் செய்வதும்/ 'கட்டாடி' என்று அழைக்கப்படும் வண்ணான் தனது சேவைகளைச் செய்வதும் முதன்மையான அடிமைத் தனத்தொண்டுகளாகும். இவைகளுக்குப் பின்பு பிரேத ஊர்வலத்தில் நடைமுறை வரிசை பார்ப்பதற்கே மனங் கொள்ளாக் காட்சியாக இருக்கும்..

http://tamil.sify.com/dalit/dalit10/fullst...php?id=13553620
Reply
#2
கட்டை கத்தி அடுக்கும் பள்ளர் பச்சையான கட்டை குத்திகளைச் சுமந்து கொண்டு முன்னே செல்ல/ அதை அடுத்து மாராயச் சாதிப் பெண்கள் குடமூதி நடக்க/ அதை அடுத்து 'சாம்பான்' என்ற பறையன் பறை கொட்டிச் செல்ல/ அதன் பின்னே வண்ணான் நில பாவாடை விரித்து வர நான்கு கோவியர்கள் பாடை காவியும்/ நாலு கோவியர்கள் மேலாக்குப் பிடித்தும் வர/ கடைசியில் பரியாரி என்ற அம்பட்டன் பாடைக்குப் பொறி எறிந்து நெருப்புச் சட்டி தூக்கிவரும் காட்சி சாதி முறையின் பூரண வெளிப்பாடாகும். சகல விதமான அடிமை குடிமை முறைகளோடு நடந்து வந்த வைபவ முறைகளில் பெரிய அளவு மாற்றங்கள் எதுவுமே இல்லாது இன்றுவரை அவை நடைமுறையில் இருப்பதைக் காணலாம்.

ஒடுக்கப்பட்ட ஊழியர் சங்கம் சற்று விரிந்து பரந்ததன் பலாபலனாய் 1940ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்ட சகல மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய சிறுபான்மைத் தமிழர் மகாசபையாக பரிணமித்தது..

அன்று சமூக சிறுசிறு இயக்கங்களோடும்/ தனித் தனியாகவும் இருந்து செயற்பட்டு வந்த எஸ்.ஆர். யேக்கப் காந்தி/ ஆ.ம. செல்லதுரை/ ரீ. ஜேம்ஸ்/ வீ. ரீ. கணபதிபிள்ளை/ எம். சி. சுப்பிரமணியம்/ எம். ஏ. சி. பென்சமின்/ எஸ். நடேசு/ ஜீ. நல்லையா/ வீ. ரீ. அரியகுட்டிப் போதகர்/ ஜீ. எம். பொன்னுத் துரை/ யோனா/ யே. டீ. ஆசீர்வாதம்/ எம். வி. முருகேசு/ விஜயரட்ணம்/ பேப்பர் செல்லையா/ ஏ. பி. இராஜேந்திரா ஆகியயோர்களையும் உள்ளடக்கிக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த ஸ்தாபனம் உடனடியாகவே பல சாதிக் கொடூர நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. வில்லூண்டி மயானத்தில் முதý சின்னத்தம்பி சுட்டுக் கொல்லப்பட்டதும்/ பூநகரியில் நடந்த சாதி வெறியினால் மூவர் உயிர் இழந்ததும் 26 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில் தானாகும்..

யாழ்ப்பாணத்து நீதிமன்றத்தில் முதý சின்னத்தம்பியின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நியாய துரந்தரர்கள் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு முதý சின்னத்தம்பிக்கான பக்கத்துக்கு வழக்காட மறுத்தபோது திரு. தம்மகுலசிங்கம் அவர்கள் ஒருவர் மட்டுமே சாதிமான்களின் கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு வழக்குரைக்க முன் வந்தார். இதன்மூலம் தனது நல்லெண்ணத்தைக் தெரிவித்துக் கொண்டபோதும் மகாசபைக்கு அது போதுமான ஆதரவாகப்படாமையால் கொழும்பு நீதிமன்றத்துக்கு வழக்கை எடுக்க அப்போது யாழ்ப்பாணத்திýருந்த சிங்கள நியாய துரந்தரர்கள் உதவியோடு முயற்சித்து வெற்றி கண்டதுடன் கொழும்பு விசாரணையில் மூவர் தண்டிக்கப்படவும் வைத்தனர். இதேபோன்றே பூநகரிக் கொலை/ வீடெரிப்பு வழக்குகள் கண்டி நீதிமன்றத்தின் பின்பு கொழும்பு நீதிமன்றத்திலும் விசாரனைக்கு எடுக்கப்பட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். அப்போதைக்கப் போது அவ்வப்பகுதிகளில் நடந்த சாதி அடக்குமுறைத் தாக்குதல்களுக்கெதிராகச் சட்ட நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாதென்பதைச் சிறிய அளவில் இவர்கள் உணர்ந்து கொண்டமைதான் சில அரசியல் இயக்கங்களுக்கான ஆதரவுக்குரலையும் இவர்கள் வைக்க முற்பட்டமைக்கான காரணமாயிற்று. இந்த முயற்சியின் முதலாவது பலனாகச் சங்கானையைச் சேர்ந்த பொன்னர் என்பவர் கிராமச் சங்க உறுப்பினர் ஆகவும் பளையைச் சேர்ந்த செல்லையா என்பவர் கிராமச் சங்க உறுப்பினராகவும் வந்தனர். கிராமச் சங்க உறுப்பினர் பொன்னர் முதல்முதல் கிராமச்சங்க கூட்டத்திற்குச் சென்றபோது கைத்தறி நெசவுக்கிடங்கு அமைத்து அதில் கால் செருகிக் கொண்டு உட்காரும்படியும் செல்லையா சென்றபோது/ தென்னைமர அடிக்குற்றி ஆசனமாக வைக்கப்பட்டிருந்தமையும் தமிழர்களின் ஜனநாயக அமைப்பு முறையின் சரித்திரத்தில் குறைந்த பட்சம் பித்தளை எழுத்துக்களாலேனும் பொறித்து வைக்கப்பட வேண்டியவையாகும். அத்தோடு அந்தக்காலகட்டத்தோடு ஒட்டிய ஐந்தாண்டு இடைவெளியில் எரிக்கப்பட்ட வீடுகள் என்று கணக்கை நிரைப்படுத்தினால் அவை .

பூநகரி - 26
காரைநகர் - 10
கரவெட்டி - 14
ஊர்காவற்றுறை - 5
பருத்தித்துறை (சல்ý) - 3
கன்பொல்லை/ கரவெட்டி மேற்கு/ கலட்டி/ கட்டுவன்/ இளவாலை/ நாரந்தனை மேற்கு/ பளை/ அல்லைப்பிட்டி/ புத்தூர்/ சங்கானை மொத்தமாக 65இற்குக் குறையாதுதான் அமையும். இந்த இடைக்காலத்தின் சாதி வெறி நடவடிக்கைகளில் பýயான உயிர்கள் என்று குறிப்பிடும்போது பண்டித்தலைச்சி - 3
பூநகரி - 3 சண்டிýப்பாய் - 1
வில்லூண்டி - 1
ஊரெழு - 1
நயினாதீவு - 1
பருத்தித்துறை-சந்தாத்தோட்டம் - 1
காரைநகர் - 1 கெருடாவில் - 1
புத்தூர் - 1
கோண்டாவில் - 1
புன்னாலை - 1
கம்பர்மலை - 1
இக்கட்டுரைக்குள் அடக்கப்படாத 68க்குப்பின் சம்பவங் களால் இழக்கப்பட்ட உயிர்கள் பற்றிய குறிப்பு: சங்கானை - 3
கன்பொல்லை - 3
கரவெட்டி - 3
அச்சுவேý - 1
சண்டிýப்பாய் - 1
பளை - 2
மிருசுவில் - 1
என நிரைப்படுத்திக் கொள்ளலாம்.
உயிர்ச்சேதமற்ற துப்பாக்கிச்சூடு/ வாள்வெட்டு/ கத்திக்குத்து/ எலும்புமுறிவு/ மானபங்கம் ஆகியவை என்று குறிப்பிடும் போது யாழ்ப்பாணக்குடா நாட்டில் எத்தனை சிறு கிராமங்கள் உள்ளன என்று கணக்கெடுத்து சிறு நகர் எத்தனை இருக்கிறது என்று பார்த்து இரண்டையும் சேர்த்துக் கணக்கெடுத்துச் சராசரி 75இனால் பெருக்கினால் வரும் எண்ணிக்கை எதுவோ அதுதான் உத்தேச ஆனால் சரியான கணக்காகும். இந்தக் காலக்கட்டத்தில் விசேடமாக நடை பெற்ற இன்னொன்று குறிப்பிடப் படவேண்டியதாகும். சோல்பரிப் பிரபு தலைமையிலான ஒரு கமிஷன் இந்தச் சாதி அடக்கு முறையின் விசாரணைக்காக நியமிக்கப்பட்டது. இந்தக் கமிஷனுக்குச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையினர் ஒரு விபர வியாக்கியானக் கொத்துச் சமர்ப்பித்திருந்தனர். இந்த வியாக்கியானக் கொத்துச் சமர்ப்பிக்கப்பட்டதுதான் தாமதம்/ அப்போது பருத்தித் துறைத் தொகுதிப் பாரளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் மகா சபையினரை சென் சார்ள்ஸ் பாட சாலையில் சந்தித்து அந்த வியாக்கியானக் கொத்தை மீளப்பெறும் படியும் தான் சகல சாதிப்பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க ஆவன செய்வதாகவும் கூறினார். இதை மகாசபையினர் நிராகரித்தனர். அதன் பின் மகாசபையினர் சோல்பரியால் அழைக்கப்பட்டனர். பத்துப்பேர் கொண்ட ஒரு குழு கொழும்பு சென்று விபரக் கொத்தின் வியாக்கியானத்தைத் தெளிவு படுத்தியதின்மேல் சோல்பரி இதை ஏற்றுத் தனது யாழ்ப்பாண வருகையின்போது சாதி ஒடுக்குமுறைக்குட்பட்ட ஒரு கிராமத்தைத் காட்டும்படியும் கேட்டு இந்த காரியத்தைத் தான் வந்து பார்க்கும் வரை ரகசியமாக வைத்திருக்கும்படிக் கூறினார். குறிப்பிட்டப்படி சோல்பரி யாழ்ப்பாணம் வந்தபோது நெல்ýயடிச் சந்தியில் பொன்னம்பலம் அவர்களால் பெருவரவேற்பு ஒன்று அவருக்கு அளிக்கப்பட்டது/ இந்த வரவேற்பு முடிந்த பின் இரகசியத்திட்டத்தின்படி பருத்தித்துறை வாடிவீட்டிýருந்து சோல்பரி பிரபுவை மகாசபையினரைச் சேர்ந்த எம். சி. சுப்பிர மணியம்/ டீ/ ஜேம்ஸ்/ வீ/ ரீ. கணபதிப்பிள்ளை ஆகியோர் அழைத்துச்சென்று கன்பொல்லைக் கிராமத்தைக் காட்டினர். இரண்டொரு நாட்களுக்கு முன் சாதி வெறியர்களினால் தீயிடப்பட்டுப் புகைந்துகொண்டிருந்த வீடொன்றையும்/ சோல்பரி பார்த்துக்கொண்டு திரும்பியபின் குறிப்பிட்ட மூவரும் பஸ் எடுப்பதற்காக நெல்ýயடிக்கு வந்தனர். இவைகளை அவதானித்திருந்த சாதி வெறியர்கள் மூவரையும் சிறைப்பிடித்து எம். சி. சுப்பிரமணியம் அணிந்திருந்த கதர் சால்வையாலேயே சுற்றி மூவரையும் கட்டி நைய்யப்புடைத்து பட்டப்பகýல் நெருப்பு வைக்க முற்பட்டனர். அந்த வேளை தற்செயலாக டாக்டர் பஸ்தியான் என்பவரும் மூன்று பொýசாரும் காரில் வந்தபோது சாதி வெறியர்களின் தீவைப்பு முயற்சி முறியடிக்கப்பட்டு மூவரும் காப்பாற்றப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று பகிரங்கப் படுத்தபடுவதை சாதித்தமிழர் பரம்பரையாக வந்தவர்கள்கூட விரும்பமாட்டார்கள். 1949 செப்டம்பர் 14ஆம் திகதி அப்போதைய உள்நாட்டு மந்திரியும் கிராம அபிவிருத்தி மந்திரியுமாயிருந்த ஒýவர் குணத்திலக அவர்கள் இந்துக்கோவில்களில் பýயிடுதல் நிதி நிர்வாகம் பற்றியும் தனக்குக் கிடைத்த குற்றச்சாட்டுகளை யோசிக்கக் கீழ் சபையிலும்/ மேல் சபையிலும் அங்கத்தவர்களான தமிழ் உறுப்பினர்களை அழைத்துச் சம்பாசித்தார். அப்போது திரு. சி. சிற்றம்பலம் இவைகளைவிட ஒரு பகுதியினரைக் கோவிலுக்குள் விடாது தடுத்து வைத்தல் பெருங் குற்றம். எனவே இதை முதல் பிரச்சனையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் பிரேரிக்க செனட்டர் பெரிய சுந்தரம் இதை ஆதரிக்க இந்த ஆலய வழிபாடு விடயம் பற்றித் தனியாக விசாரிக்க ஒரு கமிஷன் நியமிக்கிறேன் எனக்கூறி வாய்மூலம் நேருக்கு நேராகவும் எழுத்து மூலமாகவும் கமிஷனுக்குச் சாட்சியங்கள் அளிக்கப்பட்டன. வடக்கில் சுமார் அறுபது ஸ்தாபனங்களினதும் கோவில் நிர்வாகிகள் குருக்கள் என்ற விதத்தில் 80 பேர்களினதும் வசதி படைத்த கொழும்பு வாசிகளின் ஸ்தாபனங்கள் 13இனதும் தனியானவர்கள் 12பேரினதும் சாட்சியங்கள் பதிவாகின. ஆலயப் பிரவேசத்தை ஆதரித்த விதத்தில் யாழ்பாணம் காந்தி நிலையம்/ மனோகரா சேவா சங்கம்/ சுன்னாகம் தாழ்த்தப்பட்டோர் ஐக்கிய சங்கம்/ தேவரையாளி சைவ கலைஞான சபை/ பருத்தித்துறை திராவிடர் கலைமன்றம்/ ஆகியவை தர்க்க ரீதியான முறையில் ஆலய வழிபாட்டை வýயுறுத்தி நின்றன. அத்துடன் வடபகுதியிலுள்ள ஸ்தாபனங்களையும்/ தனி மனிதர்களையும் தவிர்ந்த ஏனைய ஸ்தாபனங்களும் தனி மனிதர்களும் நூற்றுக்கு நூறு இந்தத் தர்க்க நியாயங்களுக்குச் சார்பாகவே சாட்சியமளித்துள்ளனர். இதற்க மாறாகச் சாட்சியம் கொடுத்தவர்களுடைய தர்க்க நியாயங்களுள் தாழ்த்தப்பட்ட மக்கள் மனிதப் பிறவிகள் அல்லர்/ என்ற கருத்துக்களே பொதுவில் பரவலாக இடம் பெற்றிருந்தன..

இந்த விசாரணைக்குப் பின்னால் கனகரட்ணம் கமிஷன் கொடுத்த அறிக்கை முடிவால் ஏற்றபட்ட மாற்றத்தில் முக்கியமாக அன்றைய அரசாங்க அதிபரான சிறீகாந்தா/ நீதிபதியான சிறீஸ்கந்தராசா/ மானிப்பாய் வைரமுத்தர் ஆகியோர் உட்படப் பலர் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் 50ஆம் ஆண்டுக்காலத்தில் நல்லூர்க் கந்தசாமி கோவிலைத் திறக்க வைத்ததெனலாம். இதைத்தொடர்ந்து 56ஆம் ஆண்டுகால வரை ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்கள் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தலைமையின் கீழ் வரவேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததுடன்/ இலங்கையில் நடந்த அரசியல் மாற்றத்தையும் பயன்படுத்திச் செயற்பட ஆரம்பித்து/ இளம் தலைமுறையினரையும் சற்று உள்ளடக்கிக் கொண்டது..

முதன்முதýல் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இந்து சமய வழிமுறைகளில் தமக்கென பாடசாலை ஒன்றை அமைக்கும் முயற்சியில் வதிரியைச் சேர்ந்த கா. சூரன் என்பவர் எடுத்த விடாமுயற்சியால் 1914ஆம் ஆண்டிலேயே வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரி அமைக்கப்பட்டதும்/ அதைத் தொடர்ந்து கல்வி அடிப்படையான முயற்சிகள் எடுக்கப்பட்டதும்/ அப்பகுதி மக்கள் மேலும் முன் செல்ல உதவியதெனலாம். 1940 - 41 கலப் பகுதியில் டீ. ரீ. சாமுவேலைத் தலைவராகவும் கவிஞர் செல்லையாவைக் காரியதரிசியாகவும்/ சைவப் புலவர் வல்ýபுரத்தைத் தனாதிகாரியாகவும் கொண்டு தொடக்கப்பட்ட வடமராட்சி சமூக சேவா சங்கம்/ வடமராட்சிப் பகுதியில் தொடக்கப்பட்டபோது அப்பகுதியைச் சேர்ந்த பல உயர்சாதி இந்துக்களும் அதற்கு ஆதரவளித்து உற்சாகப்படுத்தினர்..

1944-46ஆம் ஆண்டுக் காலத்தில் அச்சங்க மாநாடொன்றில் தலைமை உரையாற்றிய டாக்டர் பசுபதி என்பவர் 'தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத வரையில் நான் இன்றிýருந்து கோவிலுக்குள் போகமாட்டேன்' என்று சபதம் எடுத்துக்கொண்டார். இந்தச் சபதத்தை அவர் தம் உயிர் உள்ளவரை - நீண்ட காலம் கடைப்பிடித்தே வாழ்ந்தார் என்பது குறிப்பித்தக்கது. இது போன்ற பல சம்பவங்கள் மறப்பதற்கரியனவே.

1956ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் மகாசபையின் இணைக்காரிய தரிசிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்ட இ. வி. செல்வரட்ணம்/ கவிஞர் பசுபதி திரு. எம். சி சுப்பிரமணியம் தலைமையில் எடுத்துக்கொண்ட நடைமுறை வேலைகளுக்கு நாடெங்குமிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதிகளிýருந்து ஆதரவு கிடைத்தது. அதன் பெறுபேறுகளாக 14க்கு மேற்பட்ட பாடசாலைகள் அமைய வழி பிறந்தமையாலும்/ அந்தக்கால வடபகுதி முதலாவது பாராளுமன்ற உறுப்பினரான பொன் கந்ததையா அவர்களின் துணிவான/ நேரடியான ஒத்துழைப்புக் கிடைத்தமையாலும் இந்த இளைய தலைமுறையினர் மேலும் உற்சாகமுடன் செயற்பட்டனர்..

தாழ்த்தப்பட்ட மக்களின் குரýன்கீழ் பல சாதியினரையும்/ பல மதத்தினரையும் பெருவாரியாகக் கலந்து கொள்ள வைத்த அனுபவத்திýருந்துதான் 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்' பிறப்பிக்கப்பட்டதாகும். பல பிற்போக்காளராலும்/ தமிழர் அரசியல் இயக்கங்களாலும் ஒருமுகமாக இந்த எழுச்சி எதிர்க்கப்பட்டபோது பெருஞ்சாதித் தமிழர் வழிவந்த திரு.என்.சண்முகதாசன் அவர்களால் தலைமை தாங்கப்பட்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி/ இந்த எழுச்சியை ஏற்று ஒத்துழைப்புத் தர முன்வந்ததோடல்லாமல் ஆக்கபூர்வமான காரியங்களில் நேரடியான ஒத்துழைப்பையும் நல்கியது. இந்த செயற்பாடு அதுவரை திறக்கப்படாது யாழ்நகர் எங்குமிருந்த தேனீர்க் கடைகளையும் யாழ் நகருக்குப்பால் கிளிநொச்சி/ வவுனியா ஆகிய இடங்களில் தேனீர்க்கடைகளையும் திறப்பதற்கு வாய்ப்பளித்தது. மகாசபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களில் இருந்துதான் பொதுவான ஒரு அரசியல் உணர்வையும்/ சமூக மாற்றத்திற்கான செயற் பாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் பங்கையும்/ ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியெங்கும் பரப்பமுடிந்தது. ஆரம்ப காலத்தில் செனற் சபையில் ஏ. பி. இராசேந்திரா அவர்களுக்கு நியமனம் கிடைத்த பின்னும் சிறிதளவேனும் நகர்ந்து கொடுக்காத சாதிமுறையில் சற்றுத் தளர்ச்சி ஏற்பட்டது. இந்தத் தலைமையின் நடவடிக்கைகளுக்குப் பின்புதான் என்பதைத் துணிந்து கூறிவிடலாம். இதே போன்ற பிற்காலப் பகுதியில் திரு. ஜீ. நல்லையா அவர்களுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தபோதும்/ ஒடுக்கப்பட்ட மக்களால் எதிர்பார்க்கப்பட்ட பலாபலன்கள் கிடைத்து விடவில்லை. இதிýருந்து அரசாங்க மட்ட நியமனங்களைவிட இயக்க ரீதியான காரியங்களும்/ நடவடிக்கைகளுமே உரிமைகளை வென்றெடுக்கக் கூடியனவென்பது புலனாயிற்று..

திருவாளர்கள் சுப்பிரமணியமும்/ நல்லையாவும் பதவிகள் பெறாத காலத்தில் மக்கள் பெற்றுவந்த பேறுகளை அவர்கள் பதவி வகித்த காலங்களில் பெற முடியவில்லை. இதை அவர்களே ஒப்புக்கொள்வர். 56க்கும் 66க்கும் இடையே உள்ள காலப்பகுதியில் சமூக ரீதியில் சலுகைகளைப்பெறும் முயற்சியில் சற்று வெற்றிகாண முடிந்ததேயன்றி அந்தச் சலுகைகளால் சமூகக் கொடுமைக்குத் தீர்வு காணமுடியவில்லை. இதற்கான காரண காரியங்களைத் தேடிப் பிடிப்பதில் அரசியல் கோட்பாடுகளுக்கூடான முயற்சிகள் நடந்தன. இதன் பிரதிபýப்பாகவே 57ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமூகக் குறைபாடுகள் நீக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது சட்டமாக்கப்பட்டபோது சாதி கொடுமைகளிýருந்து முற்றாக விடுபட இது வழிவகுக்கும் எனப் பலரும் நம்பினர். ஆனால் அந்தச் சட்டம் ஒரு பரீட்சார்த்த முன்னறிவித்தல்போலவே நிலப் பிரபுத்துவ கெடு பிடிக்குட்பட்ட அரசு யந்திர சேவையாளர்களின் ஆளுகைகளுக்கு உட்பட்டுத் தானாக அட்டை போலச் சுருண்டு கொண்டது..

இந்த நிலைமையை நன்கு உணர்ந்துகொண்ட இளம் சந்ததியினர் 1966 அக்டோபர் 21இல் 'சாதி ஒழிப்புச் சட்டத்தை அமுல் நடத்து' என்ற சுலோகத்தைத் தூக்கிப் பிடிக்க ஆயிரக்கணக்கிற் திரண்டு சுன்னாகத்திýருந்து யாழ்ப்பாண நகரை நோக்கிப் புறப்பட்டனர்..

இவர்கள் மேல் குண்டாந்தடிப் பிரயோகம் செய்யப்பட்டது. பலர் காயமுற்றனர். சிலர் சிறை பிடிக்கப்பட்டனர். ஆயினும் திட்டமிட்டபடி ஊர்வலத்தினர் நகர்வரை எழுச்சி பொங்க வந்தே சேர்ந்தனர். அந்த ஊர்வலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஸ்தாபனங்களின் ஐக்கியத்தில் அச்சுவேýயில் நடந்த மாநாடும்/ அந்த மாநாட்டில் கலந்து கொண்டு 'ஆறு மாத காலத்துள் உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்' என் சாவகச்சேரி எம். பி. திரு. வி. என். நவரத்தினம் அவர்கள் தந்த வாக்குறுதியும் பற்றிய தாற்பரியங்களும் 1965ல் ஏற்படுத்தப்பட்ட முக்கிய இயக்கத்தினால் இணுவில் கந்தசாமி கோவிýல் இருந்து திருவாளர்கள் நல்லையா/ சுப்பிரமணியம் முதலானோர் தலைமை தாங்கி நடாத்தப்பட்ட - முற்று முழுதாகத் தாழ்த்தப்பட்ட மக்களையே கொண்ட - மெüன ஊர்வலமும் அத்தோடொத்த பல காரியங்களும்/ மீளாய்வு செய்யப்பட்டு/ 'தியாகங்களுக்கஞ்சாத விட்டுக்கொடாத போராட்டம் ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியது' என்ற கொள்கையில் வெகுஜன இயக்கம் நெறிப்படுத்தப்பட்டது. இந்த நெறிப்படுத்தýன் அடிப்படையில் ஆலயப் பிரவேச இயக்கங்கள்/ தேனீர்க்கடைப் பிரவேச போராட்டங்கள் நாடெங்கும் விரிவடைந்தன. இந்தப் போராட்டங்கள் இழப்புகள் பலவற்றுக்கும் உட்பட்டதாயிற்று. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை இயக்கங்கள் காலத்தில் இந்த மக்களுக்கு ஒத்தாசையாக இருந்த தமிழ்த் தலைவர்களும்/ பிரமுகர்களும் தந்த ஆதரவுக்கு முற்றும் வேறுபட்ட விதத்தில் அப்போதைக்கப்போது உரிமைப்போர் நடந்த இடங்களுக்கு நேராகச் சென்று ஆலோசனை கூறியும் உற்சாகமளித்தும் இலங்கையில் சகல பகுதிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் அனுதாபத்தைப் பெற்றுத் தந்தும் இன்றுவரை தொடர்ச்சியாக வெகுஜன இயக்கத்தின் நடவடிக்கைகளை உற்சாகப்படுத்தியும் வரும் என். சண்முகதாசன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் அதேவேளை சாதி வெறியர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவும் இருக்கிறார் என்பது விசேஷமாகக் குறிப்பிடக்கூடியதாகும்..

66-78 இதற்கிடையிலுள்ள காலப்பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றிகள் முன்னை காட்டப்பட்ட 30 ஆண்டுகால இயக்க வழியில் இந்தப் பன்னிரண்டு ஆண்டு காலம் குறுகியதாயினும் இந்தக் குறுகிய காலத்தில் சாதிக்கப்பட்ட காரியங்கள் விகிதத்தில் மிக மிக தாக்க மானதும் நிரந்தரமானதுமாகும். இந்தக் குறுகியகாலப் பலாபலன்களை அரை நூற்றாண்டு காலப் பலாபலன்களுடன் ஒப்பிடுவதில் கருத்துவேறுபாடு யாருக்குமே இருக்க முடியாது..

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகள் .

மாவிட்டபுரம் கந்தன்/ மட்டுவில் பண்டித்தலைச்சி அம்பாள்/ செல்வச்சந்நிதி முருகன்/ வல்ýபுர ஆழ்வார் ஆகியவைகள் உட்பட பல பகுதிகளின் ஆலயங்களின் கதவுகள் திறக்கப்பட்டதும் எவ்வளவு சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவங்களோ அதே அளவுக்குப் பிரசித்தி பெற்றவையே தேனீர்க்கடைகள் பொதுநிலையங்கள் திக்கப்பட்ட சம்பவங்களும் பொதுக்கிணறுகள் புளக்கத்திற்கு விட்டப்பட்ட செயலுமாகும். 1968 - 78க்கிடையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவும் மக்களின் மனத்திற்கு வýந்து கொண்டுவர வேண்டியதில்லை. ஏனெனில் இவை மிகச் சமீபத்திலே நடந்த பத்து ஆண்டு காலச்சம்பவங்கள் ஆகும். அதற்காக ஒரு வரலாறு பிறக்க இருக்கிறது. அந்த வீர வரலாறு ஒடுக்கப்பட்ட மக்களின் பல நூறு சந்ததியினருக்கும் வழிகாட்டியாகவே நிற்கப்போகின்றது. இந்த இடையில் சாதிக்கொடுமையின் வேள்வித்தீக்குப் பதினொரு ஒடுக்கப்பட்ட வீரர்கள் பýயிடப்பட்டனர். பொருட்சேதம்/ இரத்தச் சேதம் கணக்கிட முடியாதவை. இந்த தியாகங்கள் யாவையும் ஒடுக்க மக்களின் ஐம்பது ஆண்டுக் காலத் தியாகங்களை விட மேலானவை என்பதற்குப் பின்னேவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு சான்றுதல் பகரும். இச்சிறு கட்டுரைக்குள் அவைகளை எல்லாம் அடக்க முடியாது..

இந்தப் பத்தாண்டு காலத்துள் ஒடுக்கப்பட்ட மக்களாலும் அதற்கு ஆதரவு தந்த சக்திகளாலும் சரித்திரப் பிரசித்தி பெற்ற கோயில்கள் நான்கு உட்படப் பலவும் தேனீர்ச் சாலைகளும் பொது நிலையங்களும் வெல்லப்பட்டன..

'தியாகங்களுக்கஞ்சாத விட்டுக்கொடாத போராட்டமே முடிவான விடுதலையைத் தர வல்லது' என்ற வழியில் முன்னேறிச் செல்லத்துடிக்கும் மக்கள் பரப்பில் மாற்றங்களை வரவேற்கும் சகலரும் இணைந்து கொள்ள கடமைப்பட்டவர் களாகின்றனர்..

(இக்கட்டுரை 1979 காலப்பகுதியில் எழுதப்பட்டிருக்கலாம். முதýல் பிரசுரமானது பற்றிய விபரங்கள் இல்லை.) நன்றி : கனடாவிýருந்து வெளியிடப்பட்ட கே. டானியல் சிறப்பு மலர் செப்டம்பர் 2003..

http://tamil.sify.com/dalit/dalit10/fullst...13553620&page=2
Reply
#3
சாதி என்ன சாதி. கடவுள் படைத்தது தான் மனித ஐhதி. அதில் இரண்டு ஐhதி ஆண் பெண்.
புலத்தில் நாம் செய்யும் வேலைகளின் அடிப்படையில் சாதி பிரித்தால் நாம் எல்லாம் எந்த சாதிக்குள் அடங்குவோம் என்பதே கேள்விக் குறி?

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)