Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேநீர்
#1
உலகம் முழுவதும் விரும்பி அருந்தப்படும் பானம் தேநீர். இதன் உபயோகம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஷென்-நுங் என்ற சீன அரசனால் தற்செயலாகக் கண்டறியப்பட்டது.

வனப்பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது கொதிக்கும் நீரில் தற்செயலாக விழுந்த காய்ந்த தேயிலைகள் நறுமணத்தை உருவாக்கின. நீரை அருந்தியபோது புத்துணர்ச்சி தரும் விதத்திலும் இருந்தது. அன்றிலிருந்து தேநீர் அருந்தும் பழக்கம் சீனாவில் உருவாகியது.

சீனாவிலிருந்து ஜப்பான், அங்கிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவியது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தாவரவியலாளர் ராபர்ட் ஃபார்ச்சூன் என்பவர் சீனாவிலிருந்து தேயிலை விதைகளையும், அதைப் பயிரிடும் முறையையும் கற்று வந்து இங்கிலாந்து அரசின் உதவியுடன் இந்தியாவில் தேயிலையை பயிரிட்டு வளர்க்க முயன்றார். தவறான மண் தேர்வு, தவறான பயிரிடும் முறைகளின் காரணமாக இம்முயற்சி பலமுறை தோல்வியடைந்தது. தொடர் முயற்சிகளின் காரணமாக இந்தியா மற்றும் ஆசியாவில் தேயிலை பரவியது. இங்கிலாந்தில் 1880களின் பிற்பகுதியில் தேயிலை வாணிபம் தனித்தொழிற்துறையாக வளர்வதற்கு உதவியது.

இங்கிலாந்தில் தேநீர் அருந்தும் பழக்கம் அதிகரிக்கவே "தேநீர்த் தோட்டங்கள்' எனப்படும் தேநீர் விடுதிகள் உருவாகின.

மொத்தம் 3000-க்கும் மேற்பட்ட தேயிலை வகைகள் உள்ளன. தேயிலையைப் பறித்த பின்னர் அதை பதப்படுத்தும் முறையைப் பொருத்து பிளாக் டீ, கிரீன் டீ, ஒய்ட் டீ, ஊலாங் டீ(சீனாவில் பிரபலம்) என நான்கு வகையாகப் பிரிக்கின்றனர்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்காட்லாந்து டீ மாஸ்டர் டிரிஸ்டேல் என்பவரால் கண்டறியப்பட்ட முறைகள் இவை.

தேயிலையில் உள்ள முக்கியப் பொருள்கள் எண்ணெய், காஃபின், பாலிஃபீனால் (டானின் என்பது தவறாகும்). எண்ணெய்களே தேயிலைக்கு மணம் தருபவை. காஃபின் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி புத்துணர்வை ஏற்படுத்தக்கூடியதாகும். பாலிஃபீனால்கள் நோய் எதிர்ப்புத் தன்மைகளைத் தரக்கூடிய ஆன்ட்டிஆக்சிடண்ட் ஆகும்.

ஒரு தேயிலைச் செடி(புதர்) 50 ஆண்டுகளுக்கு தேயிலை தரும்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இலங்கையும் முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)