Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரபல ஊடகவியலாளர் "நிலவன்" ஐரோப்பிய நாட்டில் தஞ்சம்!
#1
நிதர்சனத்தின் கொழும்பு பத்திரிகையாளர் நிராஜ் டேவிட் ஐரோப்பிய நாட்டில் தஞ்சம். - நிதர்சனத்தின் பிரதம செய்தி ஆசிரியராக நிஜமனம்.

(வியாழக்கிழமை) 27 ஏப்பிரல் 2006 (மௌலானா)

பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான நிராஜ் டேவிட் அவர்கள் ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார். ஒட்டுக்குழுக்களாலும் இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கும் உள்ளான நிலையில் நிராஜ் டேவிட்டும் அவரது துணைவியாரும் மட்டுநகரைவிட்டு வெளியேறி கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவு வாழ்வு வாழ்ந்திருந்தனர். துரோகி கருணாவின் துரோகத்தனத்தை மட்டக்களப்பிலிருந்து வெளியுலகுக்குத் தெரிவித்ததற்காக மட்டக்களப்பிலிருந்து அச்சுறுத்தப்பட்டு கொலைஞர்கள் இவரைக் கொலை செய்வதற்கு வீடு தேடிச் சென்ற வேளை மறைந்திருந்து மட்டு நிலவரத்தை 'நிலவன்" என்ற புனைபெயரில் Tamilwebradio.com, CTR (Canada) Sangamam (London) ஆகிய ஊடகங்களின் ஊடாக வெளியில் கொண்டு வந்தவர். இக்காலப்பகுதியில் பீபீசியின் செய்தியாளர் ஒருவரினால் கருணா குழுவுக்கு எதிரான செய்திகளை வெளியில் சொல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டவர். எனினும் துணிச்சலுடன் செயற்பட்டு இறுதிவரையும் மட்டுநகர் செய்திகளை உலகுக்கு அறிவித்து வெளியில் வராதிருந்த பல விடயங்களை தனது செய்திகள் ஊடாக வெளியில் சொல்லியவர். மட்டக்களப்பிலிருந்து பத்திரிகையாளர்கள் விரட்டப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் மட்டு நிலவரம் வெளியில் சொல்வதற்றே செய்தியாளர்கள் இல்லாத நிலையில் தற்போது மட்டக்களப்பு மண் இவர்போன்ற பத்திரிகையாளர்களை இழந்து நிற்கிறது. நிமலராஜன் , நடேசன் , சிவராம் வரிசையில் ஒட்டுக்குழுக்களின் கண்ணில் உறுத்தலாய் இருந்த இவரும் இவரது துணைவியாரும் மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் கொலையின் போது மயிரிழையில் உயிர் தப்பியயவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.nitharsanam.com/?art=16782
"
"
Reply
#2
துரோகி "கருணா", தென் தமிழீழத்தில் தோற்றுவித்த தமிழ்த் தேசிய விரோத கிளர்ச்சிக் காலகட்டத்தில், மட்டுநகரிலிருந்து உலகிற்கு உண்மையை ஓங்கி ஒலித்த ஓர் அற்புதமான ஊடகவியலாளன் "நிலவன்"!!

கொலை வெறியாட்டங்கள், கொலைப் பயமுறுத்தல்கள் மத்தியில் நின்றே, இந்த ஊடகவியலாளன் பயனித்ததை நாம் மறவோம்!!

அந்த இனிமையான/இளமையான/உறுதியான குரல் ஐரோப்பிய/கனேடிய வாணலைகளில் தவழ்ந்து சில வருடங்கள் ஆகி விட்டாலும் .... நன்றியுடன் நினைவு கூருகிறோம்>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)