09-27-2005, 10:08 AM
<img src='http://img392.imageshack.us/img392/240/preover9ph.gif' border='0' alt='user posted image'>
ஏமாத்தாதீங்கள்
ஏமாத்தாதீங்கள்
|
ஏமாத்தாதீங்கள்
|
|
09-27-2005, 10:08 AM
<img src='http://img392.imageshack.us/img392/240/preover9ph.gif' border='0' alt='user posted image'>
ஏமாத்தாதீங்கள்
09-27-2005, 10:10 AM
குழந்தைகள் மனதை பாதிக்கும் ஏமாற்றமான வாக்குறுதிகளால் பிற்காலத்தில் சமுதாயத்தில் வளர்ந்த மனிதனான பின்பு சமூகக்கேடான காரியத்தில் முற்படுகிறான் என்பது சமூக ஆய்வாளர்களின் கணிப்பு.
பிரான்சுக்கு வந்ததிலிருந்து கணபதியும் கனகம்மாவும் ஓய்வற்ற வேலைப் பழுவில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தனர். தங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது கூட வீட்டுக்குள் நுழையும் போதுதான் நினைவுக்கு வருவதுண்டு. பணத்தின் மோகத்திலும் சற்று பிடிப்புள்ளவர்களாகவே தென்பட்டார்கள். பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கூடம் பக்கத்திலிருந்ததால் காலையும் மாலையும் தாங்களாகவே போய்வந்தார்கள். பள்ளிக்கூடம் முடிந்து வந்தும் ரி.வி யில் மூழ்கிவிடுவார்கள். கதவு திறக்கும் சத்தம் கேட்ட மாத்திரத்தில் துள்ளிக்குதித்து வந்து தாய், தந்தையைக் கட்டிப்பிடித்து கொஞ்சிவிட்டு அவர்கள் கையிலிருக்கும் பைகளைத் துழாவத் தொடங்கியதும்........ ஏமாற்றத்தில் கலங்கிப் போய்விடுவார்கள். பிள்ளைகள் இருவரும் அடுத்தடுத்தாண்டில் பிறந்தவர்கள். மூத்தவள் மலர்விழிக்கு ஏழு வயது. இளையவன் மதிமுகனுக்கு ஆறுவயது. இருவரும் சிரிப்பற்று சினபாவத்துடன் நிற்பதைப் பார்த்த கனகம்மா கவலையுடன் இரக்கமாக இழுப்புச் சிரிப்போடு குழையத் தொடங்கினாள். இந்நேரம் தாயின் பேச்சுக்கு முந்தினாள் மலர்விழி. அம்மா, அப்பா எங்க எனக்கு ‘சைக்கிள் வாங்கி’ வாறேண்டு சொல்லிப் போனீங்க, ஓண்டுமில்லாமல் வந்திருக்கிறீர்கள் என்று சிணுங்கத் தொடங்கினாள். அவளோடு ஒத்து ஊதுவது போலல்லாது பெலத்துக் குளறினான் இளையவள் மதிமுகன். அம்மா எனக்குக் ‘கேம் போய்’ வாங்கி வாரண்டனீங்க இண்டைக்கும் இல்லையம்மா.... குளறி அழத் தொடங்கினான், இருவரது குழப்பத்தையும் அழுகையையும் உற்று நோக்கிய கனகம்மாவின் கள்ள மனசு கரையத் தொடங்கியது, கணபதியும் அவள் குணம் உணர்ந்தவர் போல் ஒத்துப்பாடத் தொடங்கினார். கனகம், நாம வேலைக்குப் போய்வரும் வரை பிள்ளைகளைச் சமாதானப் படுத்துவதற்காக் கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் பிள்ளைகளின் பிஞ்சு மனங்களில் பதிந்து விட்டது. இப்ப என்னடி செய்வது? காதுக்குள் ஓதியது பிள்ளைகள் செவிக்குள் நுழையவில்லை. இந்நேரம் பார்த்து மூத்தவள் அழு குரலில் சிணுங்கினாள். எங்களோட விளையாடவாற, எங்களோட ஒன்றாய்ப் படிக்கிறவங்கட்ட எல்லாம் சொல்லிப் போட்டோம்! இண்டைக்கு எங்கட அம்மா ‘சைக்கிள்’ வாங்கித் தருவார் என்று. அடுத்தவன், இண்டைக்கு எங்கடப்பா ‘கேம் போய்’ வாங்கித்தருவார் என்றான். பிள்ளைகளின் ஏக்கத்தையும் ஏமாற்றுப் போக்கையும் உணர்ந்த கனகம்மா தன் மெல்லிய குரலில் திரும்பவும் ஒரு சமாதான வாக்குறுதியை வழங்கினாள். என்ர செல்வங்களே! இண்டைக்குப் போகட்டும் நாளைக்கு நாங்கள் திரும்பி வரும்போது பிள்ளைகளுக்குப் பெரிய ‘கேம் போயும் வடிவான சைக்கிளும், சொக்கிளேட்டுகளும் கனக்க வாங்கி வாரோம். அதுவரையில் அழாமல் இருக்க வேண்டும். இப்படித் திரும்பவும் ஆறுதல் வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் வாரி வழங்கிச் சமாதானபடுத்திவிட்டனர். இது பிள்ளைகள் இதயத்தின் நினைவில் அகலாத நினைவாகப் பதிந்துவிட்டது. அந்த நிமிடத்திலிருந்து பிஞ்சு இதயங்களில் அப்பொருள் பற்றிய கற்பனைகள் கனதியாக உருவாகத் தொடங்கியது. கனகம்மாவும் கணபதியும் வேலைக்குப் போனார்கள். பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பிள்ளைகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டனர் திரும்பவும் வீட்டுக்கு வரும்போது களைத்து போனவர்களாக வெறுங்கையுடன் உள்ளே வந்ததை உற்றுப் பார்த்த பிள்ளைகள் இருவரது மனதிலும் பெற்றவர்கள் மீதுள்ள நம்பிக்கையையும் இழந்துவிட்டார்கள். பிள்ளைகள் இருவரது பார்வைகளிலும் வெறுப்புத் தோன்றியது. தாங்கள் கேட்டதை வாங்கித் தரவில்லை என்ற எண்ணப் பரிமாணம் எழுந்து நின்றது. பிள்ளைகள் மனதில் தூண்டிவிட்ட ஆசை ஏமாற்றமாகியதால் அவர்கள் மனதில் ஒருவகைத் திருட்டு எண்ணமும் துளிர்க்கத் தொடங்கியது. அயல்வீட்டுப் பிள்ளைகள் விளையாடும் பொருட்கள் மீதும் கவனம் விழுந்துவிடுகிறது. பேசாமல் நிற்கும் இருவரையும் திரும்பவும் சாந்தப்படுத்த வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்கள். இப்படியே பல நாட்கள் நகர்ந்தன. பிள்ளைகளின் நினைவாற்றல் கல்லில் எழுத்தாய்ப் பதியப்பட்டுவிட்டன. குழந்தைகளின் மன வளர்ச்சியில் நினைவுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. குழந்தைகள் ஒரு பொருளின் மீது ஆசை வைத்திருந்தார்களானால் அதை வாங்கித் கொடுக்கும்வரை அமைதியடையமாட்டார்கள். கனகம்மாவும், கணபதியும் அவர்களை இப்படியே ஏமாற்றி வந்தமைக்குப பலவகையான காரணங்கள் உண்டு. இருந்தும் பிள்ளைகளின் மன நிலையை அதிகம் சிந்திக்கும் தi;மையை இழந்து விட்டனர் என்றுதான் சொல்லலாம். அவர்களக்கு சொல்லி ஆறுதல்படுத்தும் போது மீண்டும் மீண்டும் அதை வாங்கித் தாரேன், இதை வாங்கித்தாரேன், இண்டைக்குப் போனால் என்ன நாளைக்கு வாங்கித் தாரேன் என்று வாக்களித்தனர். இதன் தாக்கம் எந்த நிலைமைக்கு போகும் என்பதை எண்ணிப் பார்க்க மறந்துவிட்டனர். அடுத்த நாள் வேலை முடிந்த இருவர் கைகளிலும் ஒவ்வொரு ‘பையாக’ படிகள் ஏறினர். களைப்பு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தாழ்ப்பாளில் திறப்பைப் போட்டுக் கதவைத் தள்ளித் திறந்து ஹொலிடோர் வழியாக நடந்து ஹோலுக்குள் நடந்தனர். இந்நேரம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒருவகை மியூசிக்! கணபதியும்,கனகம்மாவும் ஒருவரை ஒருவர் முழிகள் பிரள, வாய் முணு முணுக்க நோக்கியபடி விரைந்து நடந்து செற்றியிலிருந்த பிள்ளைகள் இருவரையும் நேர்குத்தப் பார்த்து அசந்து ஆச்சரியத்தோடு நின்றனர். கனகம்மாவின் முகத்தில் எள்ளு வெடித்தது. கணபதியின் பார்வையில் ஆத்திர ஆவேசம் சுண்டியது; கனகம்மாவின் கணீரென்ற குரல் சுவர்களில் மோதி எதிரொலித்தது. எடியே மலர்விழி, மதிமுகன் எங்கால இந்தக் ‘கேம் போய்’ கிடைத்தது. திடுக்கிட்ட பிள்ளைகள் இருவரின் முகத்திலும் பயம், பதைப்பு கிஞ்சுற்றும் அரும்பவில்லை. தன்பாட்டுக்கு கணபதியும் ஒரு போடு போட்டார். எங்க இதைக் களவாடினீங்கள்? இரண்டு பிள்ளைகளும் ஒத்தபடி மௌனம் சாதித்தனர். பிள்ளைகளின் செயல் பெற்றவர்களுக்கு மேலும் ஆத்திரத்தை கிளறியது. தாய் தந்தையின் ஆத்திரத்தையும் அக்கறையையும் எண்ணித் தங்களுக்குள் ஒரு வைராக்கியமான பிடிப்போடு எழுந்து ஒதுங்கி நின்றனர். கணபதியும் கனகம்மாவும் தங்களது வாக்குறுதிகளையும் எண்ணி எண்ணி வருந்தினார்கள். பிள்ளைகள் காரியத்தை யோசித்துக் கண் கலங்கி கட்டிப்பிடித்து கொஞ்சிக் கெஞ்சி ஆறுதல் கூறினார்கள். இனிமேல் இப்படி நடவாதீர்கள். நாங்கள் உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரும் காரியத்தையும் வாக்குறுதிகளையும் அள்ளி வழங்கமாட்டோம் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டதுடன் மாற்றுத் திட்டத்தையும் திடமுடன் ஏற்றுக் கொண்டார்கள். பிள்ளைகள் மனதில் பதியும் நல்லொழுக்க வழி முறைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதென அன்றிலிருந்து திடசங்கற்பம் éண்டார்கள். குழந்தைகள் மனதை பாதிக்கும் ஏமாற்றமான வாக்குறுதிகளால் பிற்காலத்தில் சமுதாயத்தில் வளர்ந்து மனிதனான பின்பு சமூகக்கேடான காரியத்தில் முற்படுகிறான் என்று சமூக ஆய்வாளர்கள் கணித்துள்ளதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவும்.
09-27-2005, 04:20 PM
ஜொதிகா.. நல்ல கட்டுரை.. நீங்கள் எழுதியதா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
09-28-2005, 03:16 PM
vasisutha Wrote:ஜொதிகா.. நல்ல கட்டுரை.. நீங்கள் எழுதியதா? இல்லை அண்ணா நான் சுட்டுத்தான் போட்டேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
|
« Next Oldest | Next Newest »
|