Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் தேசிய இனம் தமது பலத்தில்
#1
(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை)
தமிழர் தாயகத்தின் விடுதலைப் போராட்டம் விடியலை நெருங்கும் காலகட்டத்தில்,
‘தமிழ் தேசிய இனம், தமது தாயகத்தில் தமது பலத்தில், தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கத் தயாராகிவிட்டது’

என்பதை இந்த யாழ் மண்ணிலிருந்து ஸ்ரீலங்கா அரசிற்கும், சர்வதேச நாடுகளிற்கும் தெரிவிக்கவே நாம் இங்கு கூடியுள்ளோம்.

இன்றைய தினம் தமிழர் தம் வாழ்நாளில் ஒரு திரு நாள். அலை அலையாக வந்து, கடலெனத்திரண்டு நிற்கிறது தமிழ் வெள்ளம். பொறுமையின் எல்லையில் நிற்கிறோம். பொங்கி எழுந்து நிற்கும் எமது உணர்வலைகளை உலகமே புரிந்துகொள், என உரக்க கூவி நிற்கிறோம.; நிச்சயமாக இந்தமுழக்கம், காற்றோடு கலந்து, உலகின் காதுகளை எட்டும். உண்மையை உலகம் புரிந்துகொள்ளும். உலகமே உனது மனச்சாட்சியைத் திற என இந்த மக்கள் வெள்ளத்தின் முன்னால் கோருகின்றேன்.

தமிழ் தேசியப் போராட்டம் தானாக உருவானது அல்ல. உருவாக நிர்ப்பந்திக்கப்பட்டது. எமக்கென ஒரு தனியரசை வரலாற்றில் கொண்டிருந்தவர்கள் நாம். ஆனால், 1948ல், ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரம், சிங்களவருக்கு மாற்றப்பட்டது. இத் தீவின் சுதந்திரம், சிங்;கள இனத்தின் மேலாண்மையை அங்கீகரிப்பதாகவும், தமிழரின் இறைமையைப் புறந்தள்ளுவதாகவும், நசுக்குவதாகவும் அமைந்தது. இந் நிலையில், தமிழர்கள் தமது இறைமையை நிலை நிறுத்துவதற்காக போராட்டத்தினை தொடங்கினர்.

ஒரு நாட்டின் இறைமை என்பது, அந்த நாட்டு மக்களிடமே உள்ளது. அதே போன்று, ஒரு நாட்டின் அரசியல் அமைப்பு என்பது, அந் நாட்டின் அனைத்து மக்களுடன் மேற்கொள்ளும் ஒரு ஒப்பந்தமாகும். இதுவரையில் இலங்கைத் தீவில் உருவாக்கப்ட்ட எந்த ஒரு அரசியல் அமைப்பையும் தமிழ் மக்கள் அங்கீகரிக்கவில்லை. ஒருபோதும் நாம் ஏற்றுக்கொண்டதுமில்லை. ஆகையால், சிங்கள அரசுகளால் ஆக்கப்பட்ட அரசியல் அமைப்புகள், எமது மக்களின் இறைமையைக் கொண்டதல்ல. எமது இறையாண்மை இப்போதும் எம்மிடமே இருக்கின்றது – சிங்கள அரசியல்; அமைப்புக்குள் எங்கள் இறைமை சென்றுவிடவில்லை.


நாம் முயற்சித்தது எல்லாம், எமது தனித்துவத்தை இழக்காது, சிங்கள தேசத்துடன் சேர்ந்து வாழவே. இந்த விருப்பத்தின் அடிப்படையில், எம்முடைய முன்னைய தமி;ழ் அரசியல்த் தலைவர்கள், தழிழ் மக்களின் இறைமையை பிரதிபலிக்கின்ற அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற, ஸ்ரீலங்கா அரசுடன் ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், பேச்சு வார்த்தைகள் நடத்தினர். எனினும், அவை எல்லாம் தோல்வியடைந்து, தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றப்பட்டனர். எமது அடிப்படை உரிமைகள் ஏறி மிதிக்கப்பட்டன. எல்லா வகையான வதைகளையும் சிங்கள அரசுகள் செய்து பார்த்தன. ஆனால், தமிழ் தேசிய இனம் என்ற ஆத்மாவை, சிங்கள அரசால் அழிக்க முடியவில்லை. அதை அழிக்கவும் முடியாது – ஏனெனில், இன்று, தமிழ் மக்களாகிய எங்களிடம், ஏமாற்ற முடியாத, பலமுள்ள எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய, வலுவுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளோம்.

நண்பர்களே, நாங்கள் ஆயுதத்தின் மீது அன்பு கொண்ட இனமல்ல. வன்செயல்களில் காதல் கொண்ட இனமுமல்ல. ஆனால், உரிமைகளின் மீது மோகம் கொண்ட இனம், எமது தமிழினம். அந்த தணியாத தாகம் எம்மைத் தடியெடுக்க வைத்தது. இனிமேலும் முடியாது என்ற நிலையில் ஒரு இனம் செய்யக் கூடியது இது தான். வரலாறு பூராவும் உலகில் இதுதான் நடந்திருக்கின்றது. அதனை உலகம் அவ்வப்போது அங்கீகரித்தும் உள்ளது.

எமது மக்களிற்கு மனிதாபிமான ரீதியில் உதவி வழங்க என, சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்ததின் காரணமாக உருவாக்கப்ட்ட, ஒரு மிகச் சிறிய பொதுக்கட்டமைப்பையும் கூட, சிங்கள பேரினவாதம், சிங்கள அரசியலமைப்பை ஆயுதமாக பாவித்து முடக்கியது.

பசித்தவனுக்கு புசிக்கக் கொடுக்கவே, தடுக்கும் மனிதாபிமானம் அற்ற சிங்கள பேரினவாதம், தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யுமா என்பதை சர்வதேச சமூகம் சிந்தித்துப் பார்த்து, தீர்க்கமாக, உறுதியானதும் இறுதியானதுமான முடிவை எடுக்க வேண்டும் எனக் கூறி விடைபெறுகின்றேன்.
ஆயுதம்.com

ஜீ.ஜீ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)