09-23-2005, 05:40 PM
திரைப்பட இயக்குநர்களுக்கு அச்சுறுத்தல்: சுதந்திர ஊடக அமைப்பு கண்டனம்
[வெள்ளிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2005, 13:06 ஈழம்] [ம.சேரமான்]
இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக திரைப்படம் தயாரித்த திரைப்பட இயக்குநர்களுக்கு படைத்தரப்பு மற்றும் ஊடகத்துறையினரால் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுதலுக்கு சுதந்திர ஊடக அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடக அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"போருக்கு எதிராக திரைப்படம் எடுத்த அசோக ஹந்தகம, பிரசன்னா விதானகே, சுதத் மகாதிவுல்வெவ மற்றும் விமுக்தி ஜயசுந்தர ஆகியோரை செப்டம்பர் 14ஆம் திகதியிட்ட ஆங்கிலம் ஊடகம் ஒன்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
வெளிநாட்டு நிதி உதவியுடன் திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இது ஒரு புதிய பயங்கரவாதம் என்றும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நான்கு இயக்குநர்களுமே தங்களது படைப்புகளுக்காக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். இவர்களில் இரண்டு இயக்குநர்களை அண்மையில் சந்தித்த இராணுவ மூத்த அதிகாரிகள் மிக மோசமான முறையில் அவர்களை நடத்தி, விமர்சித்துள்ளார்.
இச்சந்திப்புகளையடுத்து அவர்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.
இனப்பிரச்சனை தொடர்பான கருத்துகளை வெளியிடுகிற கருத்துச் சுதந்திரம், படைப்பாளிகளுக்கு உண்டு. ஊடகத்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அந்த திரைப்பட இயக்குநர்களின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும். இந்தக் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளனர்.

....