Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலனாய்வு விழிப்புணர்வு அவசியம்
#1
<span style='color:brown'><b>தமிழரின் புலனாய்வு விழிப்புணர்வு தமிழீழம் வென்றெடுக்க வழியமைக்கும்</b>

<i>(நன்றி வே பவான், மட்டக்களப்பு ஈழநாதம்)</i>


[size=13] கடந்த 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் 22ம் திகதி சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஓர் சமாதான சூழல் உருவாக்கப்பட்டது. ஆனால் இச் சமாதானச் சூழலானது இன்று கேலிக்கிடமாகியுள்ளது.

அதாவது போர் நிறுத்த உடன்படிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றான "போர் நிறுத்த முறைகள்" (ஒப்பந்தத்தின் உறுப்புரை 1.1 தொடக்கம் 1.13வரை இது பற்றிக் கூறுகின்றது) என்ற விடயத்தில் விடுதலைப் புலிகளல்லாத தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஒப்பந்த தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் ஆயுதங்களைக் களைய வேண்டும். அல்லது அவர்கள் விரும்பினால் சிறிலங்கா படையணிகளில் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் வடகிழக்கில் சேவையாற்ற அனுமதிக்கக் கூடாது என்ற நடைமுறைபடுத்தப்பட வேண்டிய விடயத்தை சிறிலங்கா அரசானது சொற்பமேனும் கடைப்பிடிக்கவில்லை. மாறாக அவ் ஆயுதக் குழுக்களுக்கு இராணுவ புலனாய்வுத் துறையானது சுகபோக சலுகைகளை வழங்கி அவர்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்படுத்தி வருகின்றது.

சிறிலங்கா இராணுவமும் அதனுடன் ஒட்டுப் படையாக உள்ள தமிழ்த் தேசவிரோதக் குழுக்களும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அலுவலங்களின் மீதும் அரசியல் பணியில் ஈடுபடும் போராளிகள் மீதும் தமிழீழ பற்றாளர்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மறைமுக தாக்குதலை நடாத்தி வருகின்றனர். ஆனால் இவர்களால் நடாத்தப்படும் இத் தாக்குதல் திட்டமிடப்பட்ட புலனாய்வு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெறுமதி வாய்ந்த தாக்குதல்களாகக் காணப்படவில்லை.

ஆயினும் இராணுவத்தினருக்குத் தகவல் வழங்குனர்களாக இருக்கும் துரோகிகள் எம் மத்திலேயே இருக்கின்றனர். இவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டு சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு வலுசேர்க்கின்றனர். எமது விடுதலைப் போராட்டத்திற்கு நேரில் மோதும் எதிரி பெரிதல்ல முதுகில் குத்தும் துரோகியே ஆபத்தானவர்கள். விடுதலைப் போராட்டம் இவ்வளவு காலத்திற்கு நீண்டு செல்வதற்கான காரணமும் இத்துரோகிகளே.

எனவே தமிழர் தாயகத்திலிருந்து துரோகிகளைக் களைந்து எதிரியுடன் போரிட்டு எமது தமிழீழத்தை வென்றெடுக்க தமிழர்களாகிய நாம் புலனாய்வு சார்ந்த விழிப்புணர்வையும் புலிப்படையின் புலனாய்வு வல்லுனர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கும் முன் வரவேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் பிறப்புக் கடமையாகும்.

எமது மக்கள் புலனாய்வுப் பணியை ஓர் வஞ்சகத்தன்மையான செயற்பாடாகவும் புதுமையான செயற்பாடாகவும் நோக்குகின்றனர். ஆனால் இப்புலனாய்வுச் செயற்பாடானது வஞ்சகத் தன்மை நிறைந்ததோ அல்லது ஒழுக்கக்கேடானதோ அல்ல. திருக்குறள் பைபிள் அஸ்த்தசாஸ்திரம் போன்ற உலகுக்கு வழிகாட்டும் நூல்கள் புலனாய்வின் நியாயத்தை கூறுகின்றன. நாட்டுக்காக சூது வாது நிறைந்த உளவுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று இந் நூல்கள் வலியுறுத்துகின்றன. அத்துடன் ஓர் நாட்டின் குடிமகனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அந் நாட்டிற்காக உளவு பார்க்க வேண்டியது அவரது பிறப்புக்கடமை என்றும் கூறுகின்றது.

இப் புலனாய்வுப் பணியானது எமக்கு புதுமையான பணியல்ல. அதாவது மனிதன் தோன்றிய காலம் தொட்டே புலனாய்வு தோற்றம் பெற்றது எனலாம்;. அயல் வீட்டை வேவு பார்ப்பதிலிருந்து குடும்ப இரகசியத்தைக் காப்பது வரையான சாதாரண நடவடிக்கைகளும் புலனாய்வுதான். எமது குடும்ப வாழ்வில் புலனாய்வு இரண்டறக் கலந்துள்ளது. இரகசியம் காப்பது கதை கட்டிவிடுவது திருடனை கையும் களவுமாக பிடிப்பதற்கு உளவு பார்ப்பது காதலிப்பதற்கு முகவர்களை அமைப்பது இரகசிய மறைவிடத்தில் கடிதம் வைப்பது போன்ற எம் மத்தியிலுள்ள வழமையான செயற்பாடுகளும் ஒரு வகைப் புலனாய்வு வேலைகளே. ஆனால் இத் தந்திரோபாய செயற்பாடுகளை நாம் எமது சுய நோக்கத்திற்காகவே செய்கின்றோம். இவ் வித்தியாசமான புலனாய்வுச் செயற்பாட்டை எமது தமிழர் தேசியம் பலம் பெறும் வகையில் சிந்திப்பதே தற்போதைய காலத்தின் தேவையாகும்.

உளவு வேலையானது இன்று உலக மக்களிடையே நன்கு வியாபித்து அதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. வீரம் மிகுந்த செவ்விந்திய இனம் போரில் தோற்றது அமெரிக்காவின் சொந்தக்காரர்களான செவ்விந்தியர்கள் உலக திரையிலிருந்து மறைந்து போனது புலனாய்வின் தேவையைச் சுட்டிக்காட்டும் நிகழ்வாகும். அமெரிக்க கடற்படைத் துறைமுகம் (பேள்காபர்) ஜப்பானால் நீர் மூலமாக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவுக்கு புலனாய்வின் தேவையை உணர்த்தியது.

இஸ்ரேலிய தேசத்தின் வரலாறு புலனாய்வின் ஓர் வரலாறாகும். யூதர்களின் தாயகம் நோக்கிய பயணம் ஓர் புலனாய்வுப் பயணமே. இவ்வாறு இஸ்ரேல் தேசம் தோன்றியதும் அது நிலைத்திருப்பதும் அதன் "மொசாட்"என்ற புலனாய்வு அமைப்பாலாகும். இன்றைய எமது தமிழீழம் நோக்கிய பயணத்திற்கும் இவை நல்ல படிப்பினைகளாகும். மொசாட்டின் வெற்றிக்கு மூலகாரணம் அதன் தேசப்பற்று நிறைந்த முகவர்களாகும். இவர்கள் உலகெங்கும் வலையமைப்பாக பரந்திருந்தார்கள். மொசாட்டின் தேவைகள் ஏற்படும் போது ஒவ்வொரு முகவரும் தோள் கொடுத்தனர். மொசாட் அமைப்பு பெறுமதி வாய்ந்த வெற்றிகளைக் குவித்தது.

அமெரிக்காவிற்கு 90மைல் அருகிலிருக்கும் குட்டித்தீவு கியூபா பல வருங்களாக அமெரிக்காவிற்கு சவால் விட்டு பிடல் காஸ்ரோ என்ற பெரும் தலைவனின் ஆட்சி கியூபாவில் தொடர்கிறது. இதற்கு ஒட்டுமொத்த கியூபா மக்களினதும் கியூபா புலனாய்வுத் துறையினதும் பங்கு பெரியது. அந்நிய உளவு குறித்து கியூபா மக்கள் விழிப்படைந்தனர். இதன் விளைவாக கியூபா போரிலும் புலனாய்விலும் பொருளாதாரத்திலும் தனிமரமாக நின்று பிடிக்க முடிகிறது.

இவ்வாறு பல நாடுகள் இன்று புலனாய்வின் முக்கியத்துவத்தை தேவையை உணர்ந்து அந்நாட்டு மக்களின் ஆதரவு கொண்டு பாரிய உள்ளக வெளியக புலனாய்வுக் கட்டமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வருகின்றது.

இப் புலனாய்வின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப்புலிகளும் புலனாய்வுத் துறையை உருவாக்கி செயற்படுத்துகின்றனர். இப்பணியானது இரகசிய முகவர்களுடாக இரகசியமான முறையில் நடாத்தப்படுகின்றது. புலிப்படை ஒற்றர்கள் சாதாரண மக்களோடு மக்களாக இருந்து கொண்டு தமிழர் போராட்டத்திற்குப் பலம் சேர்க்கக் கூடிய தகவல்களைத் திரட்டுகின்றனர்.

அதாவது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுகின்ற அமைப்புக்கள் தனிநபர்கள் பற்றிய விடயங்கள் இராணுவ மற்றும் மாற்றியக்கங்களின் புலனாய்வு அமைப்புக்களுடன் தொடப்பினை ஏற்படுத்தி புலிகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் பற்றிய விபரங்கள் நேரடியாக இயக்கத்திற்கு எதிராக செயற்படாத போதிலும் கொள்கை ரீதியாக விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்கள். அத்துடன் தமிழர் போராட்டத்திற்கு எதிராக விமர்சனங்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய விபரங்களையும் சேகரிக்கின்றனர்.

மேலும் எதிரியின் தரைப்படை கடற்படை விமானப்படை பொலிஸ்படை போன்ற பாதுகாப்பு கட்டமைப்பு சார்ந்த விபரங்களையும் புலனாய்வு கட்டமைப்பு சார்ந்த விடயங்களையும் தகவல்களாகச் சேகரிக்கின்றனர். அத்துடன் நாச வேலை ஒன்றை மேற் கொள்வதினூடாக எதிரியின் பொருளாதாரத்தைச் சீரழிக்கக் கூடியதும் சிவில் நிர்வாகத்தினை ஸ்தம்பிதமடையச் செய்யக் கூடியவாறானதுமான சிறிலங்காவின் பொருளாதார இலக்குகள் ஒவ்வொன்றினையும் பற்றிய முழுமையான விபரங்களும் திரட்டப்படுகின்றது.

புலிப்படையி;ன் இரகசிய உளவாளிகள் தமிழர்களின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் சாவுக்கு அஞ்சாது எதிரியின் பிரதேசத்திற்குள் ஊடுருவி எதிரியின் பலவீனத்தைப் பயன்படுத்தி மேற்படி தகவல்களைப் பெறும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இத்தகவல்களின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் தமிழீழம் வென்றெடுப்பதற்கான பெறுமதி வாய்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இத்தகவல்கள் வழியமைத்துக் கொடுக்கின்றது.

தமிழர் தயாகத்தின் இன்றைய கள நிலமை மோசமடைந்து வருகின்றது. தமிழ் மக்களின் இயல்பு வாழ்வு சீரழிந்து வருகின்றது. மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை போன்ற மாவட்டங்களில் மக்கள் வாழ்விடங்களில் புதிது புதிதாக இராணுவ காவலரண்கள் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. முகாமில் உள்ள இராணுவ சிப்பாய்கள் ஒரு சில தமிழ் மக்களுடன் ஒரு மித்து நன்றாகப் பழகுவதையும் சில தமிழ் இளைஞர்கள் அருகில் உள்ள இராணுவ முகாம்களுக்கு அடிக்கடி சென்று வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இப் பழகுமுறையை இராணுவப் புலனாய்வு (னுஆஐ) தமிழர் தரப்புக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடும். இது எந்தவொரு புலனாய்வு அமைப்பினதும் வழமையான தந்திரோபாயமாகும். பணத்திற்குச் சோரம் போபவர்களை இனம் கண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்கி தமிழர் போராட்டத்திற்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய தகவல்களை இவர்கள் மூலம் பெறுகின்றனர். இத்தகவல்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதன் மூலம் எமது போராட்டத்திற்கு போராளிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர்.

எனவே இராணுவத்தினருடனான இப்பழகு முறையை தமிழ்த் தேசிய போராட்டத்திற்குச் சார்பாகப் பயன்படுத்துவதற்கும் இராணுவத்திற்கும் தகவல் வழங்குனர்களாக இருக்கும் தமிழ்த் தேச துரோகிகளை தமிழர் தாயகத்திலிருந்து களைவதற்கும் இப் பத்தியில் கூறப்பட்ட தமிழர் தேசியம் பலம் பெறுவதற்கான தகவல்களைத் திரட்டுவதற்குமான துடிப்பும் ஆர்வமும் புலனாய்வு விழிப்புணர்வும் தமிழீழ பற்றும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வரவேண்டியதே இன்றைய தேவையாகும்.

எனவே போர்நிறுத்த ஒப்பந்தம் எந்நேரமும் கிளித்தெறியப்படலாம் என்பது வரலாறு சொல்லும் பாடம். எனவே 4ம் கட்ட ஈழப்போரை தமிழர்கள் எதிர் கொள்வது நிச்சயம். எதிர் நோக்க வேண்டிய 4ம் கட்ட ஈழப் போரில் துரிதமாக தமிழீழம் வென்றெடுக்க தமிழரின் ஒன்றுபட்ட புலனாய்வு விழிப்புணர்வு வழியமைக்கும். </span>

உங்கள் கருத்துக்கள்:
http://www.battieezhanatham.com/weekly/mod...p?name=Feedback
Reply
#2
என்னப்பா குருக்ஸ் ,
குஸ்பு எண்டு தலைப்பப் போட்டுட்டு ... நல்ல விளயாட்டு
Reply
#3
Quote:மேலும் எதிரியின் தரைப்படை<b>இ</b> கடற்படை<b>இ</b> விமானப்படை<b>இ</b> பொலிஸ்படை போன்ற பாதுகாப்பு கட்டமைப்பு சார்ந்த விபரங்களையும்<b>இ</b> புலனாய்வு கட்டமைப்பு சார்ந்த விடயங்களையும் தகவல்களாகச் சேகரிக்கின்றனர். அத்துடன் நாச வேலை ஒன்றை மேற் கொள்வதினூடாக எதிரியின் பொருளாதாரத்தைச் சீரழிக்கக் கூடியதும்<b>இ</b>

குறுக்ஸ் என்ன இது? கட்டுரை முழுக்க இ இ இ இ
என்று வருது? :roll:
Reply
#4
உருமாற்றியில பிழை
Reply
#5
குறுக்ஸ்,

உங்கள் கட்டுரையை திரும்பவும் எழுத்துரு மாற்றம் செய்து இணைத்துள்ளேன். தலைப்பையும் மாற்றியுள்ளேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
நல்லது இப்பத்தான் கட்டுரையை தெளிவாக
படிக்க முடிகிறது. நன்றி மதன்.
கட்டுரையை இங்கு இணைத்த குறுக்ஸ் அண்ணாவுக்கும்
நன்றி.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
நண்றி குறுக்ஸ்... நல்லதொரு கட்டுரையை இணைத்ததுக்கு
::
Reply
#8
சிங்களவனில் படித்தவன் தாய் நாட்டுக்காய் உழைகிறான் உ+ம் எங்கள் அரசியல் பிரதிநிதிகளை ஜரோப்பிய யூனியன் தடை. .எங்களில் படித்தவன் சோரம் போய் காட்டிகொடுக்கிறான் .புலனாய்வு என்பது நம்பிக்கையின் அத்திவாரம்.அதற்கெல்லாம் நிறைந்த மனவுறுதி வேணும்
inthirajith
Reply
#9
என்ன உப்படி சொல்லிப்போட்டியள் இந்திரஜித். ஆ விளங்குது விளங்குது உங்களுக்கு புரியாணியும் புருட்சலட்டும் தேவையா இருக்கு <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->

நங்கள் இஞ்சை உழைக்கிறது தெரியேல்லையே. பந்தி பந்தியா எழுதுற விதந்தடவாதங்கள் சுய தம்பட்டங்கள் தான் எங்கடை படிப்பிற்கும் நம்பிக்கைக்கும் அத்திவாரம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)