Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>சிறந்த குணசித்திர வில்லன் நடிகரும் நாடக நடிகருமான திரு.ஆர்.எஸ்.மனோகர் காலமானார். இவர் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலிருந்தும் அதன் பின்னரும் புகழ் பெற்ற வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் விளங்கினார். இலங்கையின் இராவணன் வரலாற்றை இலங்கேஸ்வரன் எனும் நாடகத்தால் சிறப்பாக்கி காட்டியவர். நாடகத்தறையில் பல சாதனைகள் நிகழ்த்தி இதுவரை 8000 நாடகங்களுக்கு மேல் அரங்கேற்றியவர். அன்னாரின் இழப்பு கலைத்துறைக்கு ஓர் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் எமது அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கின்றோம்.</b>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ். மனோகர் மரணம்
ஜனவரி 10, 2006
சென்னை:
<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/manohar-350.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் பட உலகின் பழம்பெரும் வில்லன் நடிகரும், மிகப் பிரபலமான நாடக நடிகருமான ஆர்.எஸ்.மனோகர் காலமானார். அவருக்கு வயது வயது 81.
வெகு நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 22ம் தேதி மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார். இதனால் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை நந்தனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மனோகர் சுய நினைவை இழந்தார்.
இந் நிலையில் அவரது உடல் நிலை இன்று அதிகாலை மிகவும் மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் இறந்தார்.
மனோகரின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு நடிகர்நடிகைகள் நாடக கலைஞர்கள் மற்றும் பிரமுகர்கள், ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாளை காலை பெசன்ட் நகர் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
தற்ஸ்தமிழில் வந்த செய்தியின் இணைப்பை இங்கே இணைத்தமைக்கு நன்றி வானம்பாடி.