Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்!
#1
<b>4வது சர்வதேசத் தமிழ் குறுந்திரைப்பட விழா</b>

சற்று முன்னர்தான், ரொறொண்டோவில் தமிழ்க் குறுந்திரைப்பட விழா நடந்து முடிந்திருந்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட இருபத்தைந்து குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தன. படங்களின் நேரவளவு, ஒரு நிமிடத்திலிருந்து முப்பது நிமிடங்கள் வரை பல்வேறு வகையான காலவளவுகளுக்குள் இருந்தன. எல்லாத் திரைப்படங்களையும் அறிமுகஞ் செய்தல் இயலாத காரியமாகையால் என்னைப் பாதித்த/நான் இரசித்த படங்கள் பற்றிய சில குறிப்புக்களைத் தரலாம் என்று நினைக்கின்றேன்.

<span style='color:green'>கிச்சான்
இந்தப் படம் ஈழத்தில் கிழக்கு மாகாணத்தை பின்புலமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. படம் தொடங்கி சற்றுப்பின்னரே நான் இதைப் பார்க்கத் தொடங்கியதால் முழுக்கதையும் தெரியாவிட்டாலும், ஏழ்மையின் காரணமாக படிப்பை இடைநிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லும் சிறுவனொருவனின் வாழ்வைப் பதிவு செய்கின்றது இப்படம். அவனது தகப்பன் இராணுவத்தால் கொல்லப்படவும், தாய் வெளிநாட்டுக்கு உழைக்கச் செல்வதற்காய் கடல் கடந்து போகையில் இடையில் காணாமல்/எந்தத் தொடர்பும் இல்லாது போவதாயும் சிறுவனுக்கு ஆதரவாய் ஒரெயொரு வயது முதிர்ந்த பாட்டியொருவர் மட்டுமே இருப்பதாய்க் காட்டப்படுகின்றது. வருமானம் எதுவுமின்றி வறுமையால் அல்லறும் சிறுவன் தன் படிப்பை இடைநடுவில் நிறுத்தி இறுதியில் வேலைக்குப் போகின்றான். அவனது வயதுக்குரிய, மற்றச்சிறுவர்கள் செய்யும் எதையும் செய்யவியலாத இயலாமையைப் படம் அழகாக எடுத்துரைக்கின்றது. சிறுவனாக நடித்த பையனுக்கு விழாவின் இறுதியில் வழங்கப்பட்ட விருதில் சிறந்த நடிகனுக்கான பரிசு வழங்கப்பட்டது. உரிய அங்கீகாரம்தான்.

<span style='color:green'>வெள்ளைப் பூனை


தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவக்குமார், இடாலானோ கால்வினோவின் ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டு இக்குறுந்திரைப்படத்தை எடுத்திருந்தார். ஒற்றை அறையுள்ள வீட்டில் ஒரு தம்பதியினரையும், எதுவுமே பேசமுடியாத கடும் நோயுற்றிருக்கும் ஆணின் தாயையும் சுற்றிக்கதை நகர்கின்றது. ஒரு தம்பதிகளுக்குரிய இடையில் எழும் இயல்பான பாலியல் உணர்ச்சிகளைக் கூட பிடித்தமான சூழ்நிலையில் காட்டமுடியாத ஒற்றை அறை வாசமும், வெவ்வேறு நேரங்களில் அவர்கள் செய்யும் வேலைகளும் அவர்களை அவர்கள்பாட்டில் சுய இன்பத்தில் அலைய விடுகின்றது. வெவ்வேறு நேரங்களில் அவர்கள் ஈடுபடும் சுய இனபத்தில் ஒரு வெள்ளைப்பூனை மட்டும் இரண்டு பேருக்கும் சாட்சியாக இருக்கின்றது. மிக இயல்பாய் எதையும் அளவுக்கும் மீறிப் பேசாமல் இந்தப்படம் பத்து நிமிடங்களுக்குள் சொல்ல வந்ததைக் கூறி நிற்கின்றது.தம்பதிகளில் ஒருவராக நடித்த லீனா மணிமேகலை மிக அற்புதமாய்ச் செய்திருந்த்தார். சிறந்த திரைப்படத்துக்கான விருதை இந்தப்படம் பெற்றதில் எதுவும் ஆச்சரியமில்லை.
[size=18]
You 2

கணவனால் வன்முறைக்குள்ளாக்கப்படும் பெண், தனது பிள்ளையும் கூட்டிக்கொண்டு ஒரு சினேகிதியின் வீட்டுக்கு வருகின்றார். அங்கே தங்கியிருக்கையில் ஆண்கள் இல்லாது தனித்து வாழ்வோம் என்று எண்ணமும், இரு பெண்களுக்கும் இடையே முகிழும் அந்நியோன்னியமும் அவர்களை சமப்பாலுறவாளராக்குகின்றது. எனினும் இருபெண்களுக்கிடையில் ஒரு பெண் மேலாதிக்கவாதியாக படிப்படியாக மாறி இறுதியில் (கணவனின் வன்முறையால் வீட்டை விட்டுவந்த) மற்றப்பெண்ணை ஒரு பிரச்சினையின் நிமிர்த்தம் கை நீட்டி ஓங்கவும், 'நீயும் கூடவா?' என்று கேள்வியை பார்ப்பவரிடையே விட்டுச் செல்வதுடன் படம் முடிகின்றது. ஆண்-பெண்ணுக்கிடையில் மட்டுமல்ல, பெண்-பெண்ணுக்குமிடையிலான உறவில் கூட வ்ன்முறை/சுரண்டல்கள் வரலாம் என்ற சிந்திக்கக்கூடிய விடயத்தை தொட்டுச்செல்கின்றது. எங்கேயும் ஒரு ஆதிக்கம் வருகையில், அது வன்முறையாகத்தான் இறுதியில் உருவெடுக்கச் செய்கின்றது. அது ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்த்தால் என்ன? ஒரே மாதிரித்தான் இருக்கின்றது. இந்தப்படத்தில் சுமதி ரூபனும்(கறுப்பியும்), இன்னொரு பெண்ணும் நன்றாக நடித்திருந்தனர். சிறந்த திரைக்கதைக்கான விருதை சுமதி ரூபன் பெற்றிருந்தார்.




[size=18]Rape

காலம் காலமாய் தமிழ்ப்பெண்கள் மீது ஏனைய இராணுவங்களால் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளையும் சித்திரவதைகளையும் இது ஆவணப்படுத்துகின்றது. 50களில் ஆரம்பித்த கலவரத்தில் பாலியல் வன்புணரப்பட்ட பெண்களிலிருந்து, அண்மையில் (2001) மன்னாரில் வன்புணரப்பட்ட இருபெண்கள் வரை பேசப்படுகின்றது. 'சிறி' என்ற சிங்கள முத்திரையை, பெண்களை பாலியல் வன்புணர்ந்து முலைகளில் குத்தியிருந்து தொடக்கம், கர்ப்பிணிப்பெண்களை கூட்டாய் வன்புணர்ந்தது வரை பார்த்தவர்களின் நேரடிப்பேச்சால் ஆவணப்படுத்தப்படும்போது சொல்வதற்கு நிச்சயம் சொற்கள் எதுவும் நமக்கு எஞ்சியிருக்கப்போவதில்லை. அதிலும் கலவரம் ஒன்றில் ஜந்து இராணுவத்தால் வன்புணரப்பட்ட ஒரு பெண் தன் வாயால் நிகழ்ந்ததைக் கூறும்போது..... #%^$ U #$%$@! என்று swear பண்ணாமல் நிச்சயம் இருக்கமுடியாது. வெளியுலகத்துக்கு இதுவரை மறைக்கப்பட்ட, பல உண்மைகளை இது அம்பலத்தப்படுகின்றது. பாலியல் வன்புணரப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வாழ்வேன் என்று நம்பிக்கையாக எழுந்த அந்தப்பெண்மணியையும், பாலியல் வன்புணரப்பட்டாலும் நீங்கள் எந்தக்குற்றமும் செய்யவில்லை அந்த நிகழ்வை அசட்டை செய்து வாழ்வில் நீங்கள் கட்டாயம் நகரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்களுக்காய், எழும் ஒரு திருச்சபை ஆயரின் வார்த்தைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் ஆதரவைத் தரும். பாலியல் வன்புணரப்பட்டாலும் அவர்களும் நம்மில் ஒருத்தர் என்ற புரிதலை பார்ப்பவரிடையே இந்த ஆவணப்படம் படியவிடுவது ஆறுதலாக இருக்கின்றது.

[size=18]அந்த ஒரு நாள்</span>
ஒரு பெண்ணுடைய adultery பற்றிக் கூறுகின்ற படம். தனது மனைவி இன்னொருத்தருடன் உறவில் ஈடுபட்டிருக்கின்றார் என்று ஏற்கனவே அறிந்து சந்தேகம் கொள்ளும் கணவனுக்கு, மன உளைச்சல்களால் அவதிப்பட்டு வேலை போய்விடுகின்றது. இறுதியில் அந்தப்பெண்ணைப் 'பழிவாங்கி' இரத்தக்கறைகளும் நிற்பதுடன் படம் முடிகின்றது. சிறந்த எக்ஸில் படத்துக்கான விருதை இது பெற்றிருந்தது. கனடாவில் எடுக்கப்பட்ட படம்.


'உயிர்நிழல்' கலைச்செல்வன் நினனவுப்பரிசான சிறந்த எக்ஸில் படத்துக்கான விருதைப் பெறும் பற்றிக் பத்மநாதன்(வலது), கலைச்செல்வனின் சகோதரர் கவிஞர் திருமாவளவன் (இடது) மற்றும் நிக்கோல்

<span style='color:green'>தீர்ந்து போயிருந்த காதல்

கவிதை நடையுடன் மூன்று நிமிடங்களில் காதலின் 'அழுகிய' கணங்களைச் சொல்கின்றது. வேலைக்குப் போகும் பெண் தாபத்துடன் வேலை முடிந்தவுடன் தனது கணவனுக்காய் வீட்டில் காத்திருப்பதும், அவன் நேரம் பிந்தி நள்ளிரவில் வருகின்றபோது அவளது காதல்/காமம் அவளை விட்டு விலகிப்போயிருப்பதையும், ஜடமாய் அவன் அரவணைப்பில் கசங்கிப்போவதையும் மிக இயல்பாய் கவிதை நடையில் கூறியிருந்தது. லீனா மணிமேகலையே இயக்கியும் நடித்தும் இருக்கின்றார். சிறந்த இந்தியத் திரைப்படத்துக்குரிய தேர்வில் இது விருதைப்பெற்றிருந்தது.

ரெட் வின்ரர்(Red Winter)மூன்று இளைஞர்களையும் ஒரு பெண்ணையும் சுற்றி நகரும் கதையிது. படத்தின் முடிவில் மூன்று கொலைகள் நிகழ்ந்துவிடுகின்றன. யாரோ ஒரு ஆண்தான் இந்தக் கொலைகளைச் செய்திருப்பான என்பதைப் பார்ப்பவரிடையே படியவிட்டு இறுதியில் மூன்று கொலைகளையும் சைக்கோவான பெண்ணே செய்திருக்கின்றாள் என்பதாய் முடியும். அற்புதமான ஒளிப்பதிவும், இசையும் இதற்கு மெருகூட்டுகின்றன. படத்தில் இடையில் பின்னணியில் காட்டப்படும் துண்டு துண்டான ஆங்கிலப்படங்களின் காட்சிக்கும், இதற்கும் தொடர்புகள் இருக்கின்றதென்று படம் பார்த்துக்கொண்டிருந்த தோழி ஒருவர் கூறியிருந்தார். எனினும் தமது மூலத்தை/அடிப்படையை மறைக்காமல், படம் முடியும்வரை பார்க்கக்கூடிய ஒரு நல்லதொரு திரில்லரைத் தந்திருக்கின்றார்கள் என்பதற்காய்ப் பாராட்டலாம். இதைச் சற்று நீளமான திரைப்படமாக (ஒரு மணித்தியாலத்துக்கு மேல்) எடுத்தார்கள் என்றும் இந்த விழாவுக்காய் 30 நிமிடங்களாய்ச் சுருக்கியதாயும் அந்தப் படத்தை இயக்கியவர் உரையாடும்போது கூறியிருந்தார். முடிந்திருந்தால் அந்தப்படத்தில் வழமையான சினிமாத்தனத்துடன் வரும் பாடல்களை (ஒரு பாடலையாவது) எடிட் செய்திருக்கலாம். விரைவில் ரொறண்டோவில் தியேட்டர்களில் முழுநீளத்திரைப்படமாக இத் திரைப்படம் காண்பிக்கப்படப்போவதாயும் அறிந்தேன். பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்சினி நன்றாகச் செய்திருந்தார்.



இந்த விழாவில் வலைப்பதியும் நண்பர்களினதும் பங்களிப்பைப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அருண் வைத்தியநாதனின் நான்கு திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்தன. சுமதி ரூபன் 'You 2' நடித்ததுடன், திரைக்கதையையும் அந்தப்படத்துக்கு எழுதியிருந்தார். வலைப்பதிவுகள் தமக்கென சொந்தமாக வைத்திருக்காவிட்டாலும், அவற்றை வாசிப்பவர்களும், ரொறண்டோவில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டவர்களுமான ரூபன், சத்தியாவும் தமது திறமையைக்காட்டியிருந்தனர். ரூபன் 'You 2' மற்றும் 'ஐயோ' ஆகிய இருபடங்களை இயக்கிருந்ததும், சத்தியா 'ஐயோ' படத்தில் நடித்தமைக்காய் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
.........


நன்றி DJ
</span>[size=9]' target='_blank'>http://djthamilan.blogspot.com/[/s...[size=9]
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
தகவலுக்கு நன்றி குளம். இந்த குறும்படங்களில் எதையாவது இணையத்தில் பார்த்தீர்களா? யாரிடமாவது இருக்கின்றதா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
இல்லை மதன்
கறுப்பியின் படம் அவரின் குறும்பட தளத்தில் இருக்கலாம். இன்னும் தேடி பார்க்கவில்லை.
http://www.nirvanacreations.ca/
இதில் வேறி சில இருக்கு யு2 வின ரெயிலர் இருக்கு
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
http://homepage.mac.com/ruban/iMovieTheater45.html
YOU 2 குறும்படம், இதற்கு quicktime palyer வேண்டும்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)