Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவ மின்வேலியில் சிக்கிய இராணுவத்தினர் படுகாயம்
#1
இராணுவத்தின் மின்வேலியில் சிக்கியது இராணுவ வாகனம்: 8 படையினர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் அமைத்திருந்த மின்வேலியில் இராணுவ ட்றக் சிக்கியதில் 8 படையினர் படுகாயமடைந்துள்ளனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


யாழ். நகரில் உள்ள ஞானம் மற்றும் சுபாஸ் உணவு விடுதிகளுக்கு இடையில் இராணுவத்தின் 512 ஆவது படைப்பிரிவு மின்வேலி அமைத்துள்ளது. அந்த மின்வேலியில் இராணுவ ட்றக் வாகனம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் சிக்கியது.

இதில் 8 படையினர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அனைவரும் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் மின்வேலியில் சிக்கி குருநகரைச் சேர்ந்த மீனவர் அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து இராணுவ மின்வேலிகளை அகற்றுமாறு பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இராணுவத்தினரே மின்வேலியில் சிக்கிக் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.

சுட்டது புதினத்திலிருந்து. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)