Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிளைமோர் குண்டு தாக்குதல்:
#1
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்திலுள்ள கயூவத்தையில் இன்று சனிக்கிழமை அதிகாலை உழவு இயந்திரமொன்று கிளேமோர் குண்டில் சிக்கியதில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 4 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் மர வியாபாரிகள் என்று அறியவருகின்றது.

குறிப்பிட்ட 4 பேரும் 2 உழவு இயந்திரங்களில் காட்டில் மரங்களை வெட்டிக் கொன்டு தமது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில், அதில் வந்த ஒரு உழவு இயந்திரமே கிளைமோர் குண்டொன்றில் சிக்கியதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற பிரதேசமானது கயூவத்தை சிறிலங்கா இராணுவ முகாமிற்கும் கிரிமிச்சை குளத்திற்கும் இடைப்பட்ட இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

-புதினம்-
" "
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)