Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் ஒரு மாதத்தில் 22 அப்பாவி பொதுமக்கள் படுகொலை
#1
[b] யாழில் ஒரு மாதத்தில் 22 அப்பாவி பொதுமக்கள் படுகொலை:

யாழில் சிறிலங்கா இராணுவத்தால் கடந்த ஒரு மாதத்தில் 22 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. இளம்பரிதியுடன் யாழ். மாவட்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர் மற்றி வெய்னியொன்பா இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

பளையில் உள்ள யாழ். மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைச் செயலகத்தில் முற்பகல் 11 மணியளவில் இச்சந்திப்பு நடந்தது.

இச்சந்திப்பில் யாழ். மாவட்ட நிலைமைகள் தொடர்பாக கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவரிடம் சி. இளம்பரிதி கூறியதாவது:

- சிறிலங்கா அரசாங்கம் மற்றும் உயர் படை அதிகாரிகளின் ஒப்புதலுடன் சிறிலங்கா படையினர் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினால் முதியோர்இ பெண்கள்இ சிறுவர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் முதலாம் நாள் முதல் ஜனவரி 5 ஆம் நாள் வரை ஒரு மாத காலத்தில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

- சுற்றிவளைப்புத் தேடுதல் என சிறிலங்கா படையினர் மேற்கொள்ளும் தேடுதல்களின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். ஒரு மாத காலப் பகுதிக்குள் இது போல் 6 சம்பவங்கள் வெளிவந்துள்ளன.

- கைது செய்யப்பட்டு கடத்தப்படும் அப்பாவிப் பொதுமக்கள் குறித்த எதுவிதத் தகவல்களும் வெளிவராது காணாமல் போவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதுவரைக்கும் 45-க்கும் மேற்பட்டோர் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

- படையினரது அடாவடித்தனங்களில் சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர்.

- சுதந்திரமான போக்குவரத்துக்கு இடர் ஏற்படுத்தும் வகையில் சிறிலங்கா இராணுவ நோக்கில் வீதித் தடைகளை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் வெள்ளங்கள் நிறைந்த சுற்றுவழி வீதிகளை நாடவேண்டியுள்ளது. வறணிப்பகுதியில் கொடிகாகம்- பருத்தித்துறை வீதி மக்கள் இப்படியான வெள்ளம் சூழ்ந்த வழிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

- வலி மேற்குஇ வடமராட்சி வடக்குப் பிரதேசங்களில் கடற்றொழில் செய்வதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். இது பற்றி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். இதனால் பல மீனவக் குடும்பங்கள் பசி பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்.

- பொதுமக்களைக் கொண்டு வேலி மரங்களையும்இ பனைகளையும் படையினர் கட்டாயமாகத் தறிக்க உத்தரவிட்டு வருகின்றனர். அடையாள அட்டைகள்இ கையடக்கத் தொலைபேசிகள்இ உடைமைகள் ஆகியவையும் மக்களிடமிருந்து சிறிலங்கா படையினரால் பறிக்கப்பட்டுள்ளன.

- வர்த்தக நிறுவனங்களின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன.

- பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள்இ துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் மக்களின் வீடுகள் சோதனையிடப்பட்டு அவர்கள் மீது வீண்பழி சுமத்தும் நோக்குடன் கைக் குண்டுகள்இ ஆயுதங்கள் இராணுவத்தால் வைக்கப்பட்டு எடுக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதால் மக்கள் மரண பீதியுடன் வாழ்கின்றனர்.

- கூட்டுறவுத் துறையினரது களஞ்சியங்கள் உடைக்கப்பட்டு தளபாடங்கள் எரிக்கப்படுகின்றன.

இத்தகைய அத்துமீறல்கள் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 1.2 விதிஇ 2.1இ 2.2இ 2.3இ 2.4இ 2.5இ 2.11இ 2.12இ 2.13 விதிகள் முற்றாக மீறப்பட்டுள்ளன.

இந்தச் செயற்பாடுகள் போர் நிறுத்த உடன்படிக்கை மீதும்இ சமாதான செயற்பாடுகள் குறித்தும் பொதுமக்கள் நம்பிக்கையை இழக்க வைத்துள்ளதால் யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமடைந்துஇ மரண பீதிக்குள் தள்ளப்பட்டுனர்.

படையினரது மனித உரிமை மீறல் செயற்பாடுகளை அனைத்துலகத்துக்கும் வெளிப்படுத்துவது அவசியம். படையினரது அத்துமீறல்கள் நிறுத்தப்பட்டு மக்களது இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சி. இளம்பரிதி.

வலி. மேற்குஇ வடமராட்சி கடற்றொழிலாளர்கள் கடலில் இறங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள படையினரது தடைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடமிருந்து வரும் முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன என்றும் தமது தலைமைப் பீடத்தின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றுள்ளதாகவும் கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர் மற்றி கூறினார்.

இச்சந்திப்பின் போது கடல் கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர் லாஸ் பிளேய்மன்இ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட ஊடக இணைப்பாளர் இ.இமையவன் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்: புதினம்
[size=14] ' '
Reply
#2
ஒரு பக்கத்தில் இளம் சமுதாயம் அழிந்து போய்க்கொண்டு இருக்க,, மறுபக்கத்தில் தந்தை தாய்களை இழந்து குடும்பங்கள் அநாதைகளாக போய்க்கொண்டு இருக்கிறது,, இதற்கு முடிவு வெகு விரைவில் எட்டப்படாவின் அதாவது உலக நாடுகளின் கண்டனங்கள், எச்சரிக்கைகளை கேட்டுக்கொண்டு இருந்தால் நிலைமை மோசமாகிச்செல்லும்,,,, சிங்களப்பிரதேசங்களில் சிங்கள மக்கள் என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்? யாழ்ப்பாணகுடா நாட்டிலேயே இந்த நிலை என்றால் மட்டக்களப்பு அம்பாறை வவுனியா மன்னார் பிரதேசங்களில் நிலை அதிகமாக இருக்கும், :roll: :? Idea Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
அப்பாவி பொதூமக்களை சிங்கள் பேரினவாதிகள் கொன்றொளிப்பதை ஐக்கிய நாடுகள் கண்மூடி பார்த்துக்கொண்டிருப்பதா??? இதுதான் நீதியா???
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)