Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலங்குகிறார் பாலுமகேந்திரா
#1
<b>இறைவா... என்னை வாழவிடு! </b>

<b>கலங்குகிறார் பாலுமகேந்திரா </b>

<img src='http://img17.echo.cx/img17/1780/p1588mb.jpg' border='0' alt='user posted image'>

அதிக குளிரை அறை முழுக்க நிரப்பிவிட்டு இன்னும் குளிரை அழுத்துகிறது ஏ.சி. ஒரு பைபிள்... சில கவிதைப் புத்தகங்கள். தலையில் இருக்கும் காட்டன் ஜீன்ஸ் தொப்பியும் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட முகமும் பாலு மகேந்திராவை இளமையாகக் காட்டினாலும் உடம்பில் தளர்வு தெரிகிறது. ஆவி பறக்க கண்ணாடிக் குவளையில் லெமன் டீ தருகிறார்.



கறுப்பன்கூட சினிமாவில் ஒரு நடிகனா வந்து ஜெயிக்க முடியும்ங்கறதை ரஜினிக்குப் பிறகு எனக்கு உணர்த்தியது தனுஷ்தான். இந்தப் புள்ளையோட (தனுஷை இப்படித்தான் சொல்கிறார்) கண்ல அப்படி ஒரு சக்தி இருக்கு. பார்த்தா ஏதோ சாதாரண நம்ம பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இருக்கார் தனுஷ். கொஞ்சம் கூர்ந்து பார்த்தா ஒரு பிரெஞ்ச் மாடலோட உடலமைப்பு இருக்கு.

<img src='http://img293.echo.cx/img293/4507/p1598fy.jpg' border='0' alt='user posted image'>
அது ஒரு கனாக்காலம் தனுஷ், ப்ரியாமணி

அது ஒரு கனாக்காலத்துல சீனுவா நடிச்சிருக்கார் தனுஷ். சீனு பேச விரும்பற விஷயங்களையெல்லாம் அவனோட கண்ணே பேசிடும். மனசோட தவிப்பை, காதலை, கண்ணால் பேசியிருக்கிறார் தனுஷ். தன் மகனுக்கு பெஸ்ட்டா ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற தகப்பன், தன் மகனுக்காக ஒரு முடிவெடுக்கிறான். Best of Intension-என்று சொல்வோம் இல்லியா, அது மாதிரி! ஆனால், அந்த முடிவு தன் மகனை எப்படியெல்லாம் சூறாவளியாய்ச் சுழற்றி அடிக்கிறது என்பதுதான் அது ஒரு கனாக்காலம். இந்தப் படத்துக்குக் கதை சொல்ல நான் நம்பியது நான்கு கண்களை. இரண்டு தனுஷோடது. இரண்டு ப்ரியாமணியோடது.


<img src='http://img293.echo.cx/img293/8600/p1600ki.jpg' border='0' alt='user posted image'>

நம்ம தமிழ்ப் பொண்ணுங்க கேமராவிலும், கேமராவுக்கு வெளியிலும் பேரழகிகள்தான்ங்கிறதை ப்ரியாமணி நிரூபிக்கிறாங்க. மேக்அப் இல்லாத முகத்திலும் அந்தப் பொண்ணு அத்தனை அழகு! ஒரு நாள் ஷ¨ட்டிங் ஸ்பாட்ல வெச்சு, நீங்க சினிமாவுக்கு வரலைன்னா என்னவா இருப்பீங்க?னு என்கிட்டே அந்தப் பொண்ணு கேட்டுச்சு. வாத்தியார் ஆகியிருப்பேன்னு சொன்னேன்.

இன்றைக்கும் விசிட்டிங் லெக்சரரா பல காலேஜுக்கும் போறேன். தினமும் ஒன்றரை மணி நேரம் என்னோட அலுவலகத்தில் சினிமா பற்றி மாணவர்களுக்குக் கத்துக் கொடுக்கறேன். அப்புறம் ரொம்பச் சந்தோஷமா இருந்தா நானே சமையல் செய்து எல்லோருக்கும் பரிமாறு கிறேன். நல்ல சமையல்காரன்தான் நல்ல கிரியேட் டரா இருக்க முடியும்னு நம்பறேன். ரொம்பச் சந்தோஷமா இருக்கிறேன்.

கடற்கரையோரமாக எங்க வீடு. கடலில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் எங்க சமையலில் வறு படும். கடல்காற்று, உப்பு, உணவுன்னு வாழ்ந்தோம். அப்பா பாலநாதன் பௌதிகப் பேராசிரியர். நல்ல சுதந்திரம் தந்தார். அப்பாவை மாதிரியே வாத்தியாராகணும், அம்மாவை மாதிரி விதவிதமா சமைக்கணும்னெல்லாம் ஆசைப்பட்டிருக்கேன். இப்பவும் ஒவ்வொரு தடவை பிளாக் டீ குடிக்கும் போதும் அம்மாவோட ஆக்சிஜன் அதுல இருக்குன்னு நம்பறேன். ஏன்னா... கசக்குற தேநீரை குடிக்கப் பழக்கினது அம்மாதானே! வாழ்க்கையிலே ஆசைப்பட்ட எல்லாத்தையும் அனுபவிச்சாச்சு!

என் பையன் (இயக்குநர்) பாலா என்னைப் பார்க்க அடிக்கடி வர்றான். உடம்பு சரியில்லாம இருந்தப்போ உதவி பண்ணட்டுமானு அன்பா கேட்டான்! அன்பு காரணமா ஒரு பொஸசிவ் வரும்ல... அப்படி ஒரு சங்கடம் எனக்கும் அவனுக்கும். காலம் அதைத் துடைச்சுத் தூக்கி வீசி எறிஞ்சிடுச்சி. பாலா யாரு... பாலுமகேந்திரா யாரு? ஒவ்வொருத்தருக் குள்ளேயும் ஒளிஞ்சிக் கிட்டிருக்கிற ஒரு கர்வம்... திமிர்தானே! இந்திய சினிமாவுக்குப் பாலாங்கிற அற்புத இயக்குநர் கிடைச்சிருக்கார். அது சந்தோஷமா இருக்கு. ஏன்னா, பாலாதான் நான் என்றபடி பெருவிரலை மூக்கில் வைத்து நீண்ட மௌனத்துக்குப் பிறகு,

எனக்குனு சில ஆசைகள் இருக்கு. ஆண்டவனோட அனுக்கிரஹத்துல அது ஒரு கனாக்காலம் நல்லா வந்திருக்கு. அதிலே இசை ஞானி இளையராஜா ஒரு பாட்டு தானே எழுதி பாடி இருக்கார்.

<i>காட்டு வழி கால்நடையாய் போற
தம்பி! பொழுதாகு முன்னே போற எடம்
சேர்ந்துவிடு

காலையிலே எளவெயிலு
கடுமையில்லே! ஒங்காலடியில்
எடுத்துவச்சாக் கவலயில்லே!</i>

இப்படிப் பொழுதெல்லாம் கேட்கிற மாதிரி நான்கு பாடல்கள் நல்லா வந்திருக்கு. அது ஒரு கனாக்காலத்துக்குப் பிறகு இன்னும் மூன்றே மூன்று சினிமா எடுக்கணும். அதில் முக்கியமானது ஈழத்தமிழர்கள் பற்றி. வேதனைகளைச் சுமந்தபடி கால் நூற்றாண்டு காலம் போராடிக்கொண்டு இருக்கிற தமிழினம், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்ட கண்ணீரைப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.

திரையுலகில் என் இறுதி ஆசை இதுதான். ஆண்டவன் அதுவரை என்னை உயிரோடு விட்டு வைத்திருந்தால் போதும். 'இறைவா! நான் நேசித்த சினிமாவையும் என்னையும் பிரித்து விடாதே. என்னை வாழவிடு' என்பதுதான் என் பிரார்த்தனை. அவ்வளவுதான்! என கலங்குகிறார் பாலுமகேந்திரா.

நன்றி: Vikatan
Reply
#2
vasisutha Wrote:<b>இறைவா... என்னை வாழவிடு! </b>

<b>கலங்குகிறார் பாலுமகேந்திரா </b>


. அது ஒரு கனாக்காலத்துக்குப் பிறகு இன்னும் மூன்றே மூன்று சினிமா எடுக்கணும். அதில் முக்கியமானது ஈழத்தமிழர்கள் பற்றி. வேதனைகளைச் சுமந்தபடி கால் நூற்றாண்டு காலம் போராடிக்கொண்டு இருக்கிற தமிழினம், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்ட கண்ணீரைப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.
திரையுலகில் என் இறுதி ஆசை இதுதான். ஆண்டவன் அதுவரை என்னை உயிரோடு விட்டு வைத்திருந்தால் போதும். 'இறைவா! நான் நேசித்த சினிமாவையும் என்னையும் பிரித்து விடாதே. என்னை வாழவிடு' என்பதுதான் என் பிரார்த்தனை. அவ்வளவுதான்! என கலங்குகிறார் பாலுமகேந்திரா.

நன்றி: Vikatan

சுடலை ஞானமா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#3
நடிகை ஷோபாவை அறிந்திருப்பீர்கள் ஃஃநடிப்பைப்பொறுத்தவரை அவருடைய இடத்தை பின்வந்தவர்கள் யாரும் நிரப்பவில்லை-என்பது எனது அபி்ப்பிராயமாகும்----மகேந்திராவுடன் சேர்ந்து வாழும் போது இந்த ஷோபா தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணம் எப்படி ஏற்பட்டது என்பது கேள்வி குறியாய் இன்றும் உள்ளது---------ஸ்ராலின்
Reply
#4
Niththila Wrote:சுடலை ஞானமா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதை படித்தவுடன் நானும் இப்படித்தான் நினைத்தேன். இவர் நினைத்திருந்தால்
எப்பொழுதோ ஈழத்தமிழர்களைப் பற்றி படம் எடுத்திருக்கலாம்.
ஏன் செய்யவில்லை? அதை செய்ய கடைசிகாலம் வரை
காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
இப்படி வேதனைப்பட்டு சொல்வது எல்லாம் நடிப்பு என்றுதான்
எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த வகையில் பார்த்தால் பல முரண்பாடுகள் இருந்தாலும்
நமது பிரச்சனையை தொட்டுச்சென்ற (கன்னத்தில் முத்தமிட்டால்) மணிரத்னம் மேலானவர். :roll:
Reply
#5
இதே மணிரத்தினம் தானே எங்களை கொச்சைப்படுத்தி படமும் எடுத்துள்ளார் வசிசுதா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
""
"" .....
Reply
#6
என்ன படம் அது?
அவரை சிறந்தவர் என்று நான் கூறவில்லையே.. பாலுவை விட மேலானவர் என்று
தான் சொன்னேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#7
stalin Wrote:நடிகை ஷோபாவை அறிந்திருப்பீர்கள் ஃஃநடிப்பைப்பொறுத்தவரை அவருடைய இடத்தை பின்வந்தவர்கள் யாரும் நிரப்பவில்லை-என்பது எனது அபி்ப்பிராயமாகும்----மகேந்திராவுடன் சேர்ந்து வாழும் போது இந்த ஷோபா தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணம் எப்படி ஏற்பட்டது என்பது கேள்வி குறியாய் இன்றும் உள்ளது---------ஸ்ராலின்

யார் ஷோபா? என்ன படத்தில் நடித்திருக்கிறார் என
கூற முடியுமா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
vasisutha Wrote:
stalin Wrote:நடிகை ஷோபாவை அறிந்திருப்பீர்கள் ஃஃநடிப்பைப்பொறுத்தவரை அவருடைய இடத்தை பின்வந்தவர்கள் யாரும் நிரப்பவில்லை-என்பது எனது அபி்ப்பிராயமாகும்----மகேந்திராவுடன் சேர்ந்து வாழும் போது இந்த ஷோபா தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணம் எப்படி ஏற்பட்டது என்பது கேள்வி குறியாய் இன்றும் உள்ளது---------ஸ்ராலின்

யார் ஷோபா? என்ன படத்தில் நடித்திருக்கிறார் என
கூற முடியுமா?
ரஜனி மற்றும் பல முன்னனி நடிகர்களிடம் நடித்திருக்கிறார். படங்களின் பெயர்கள் ஞாபகம் வரவில்லை--கடைசியாக அவர் நடித்த ---பசி என்ற திரைபடத்தின் மூலம் தேசிய விருது பெற்றவர் என்பது ஞாபகம் இருக்கு----பாலுமகேந்திரா பூனா பிலிம் institute இல் படித்த திறமைமிக்க திரை பட கமராமென்---பிரிட்டிஸ் தொலைக்காட்சி நிறவனம் இவருடைய திறமையை மதித்து பாராட்டியதாக கேள்வி---------உலக புகழ்பெற்ற டைரகட்ர் மிருனாசிளினால் பாரட்டு பெற்றவர்--இவவளவு திறமையிருந்தும் நீலப்பட தயாரிப்பு பற்றியும் சோபா வின் இறப்புப் பறறியும் பல கதைகள் நிலவின------------------------------------------------ஸ்ராலின்
Reply
#9
ஷோபா நடித்த படங்கள்: நிழல் நிஜமாகிறது, அழியாத கோலஙகள், பசி, சாமந்திப்பூ
Reply
#10
நிழல் நிஜமாகிறது - முதல் படம், அழியாத கோலஙகள், பசி, சாமந்திப்பூ - கடைசிப்படம்
Reply
#11
இன்னும் சில படங்கள்: முள்ளும் மலரும், மூடுபனி
Reply
#12
KATPUKKARASAN Wrote:இன்னும் சில படங்கள்: முள்ளும் மலரும், மூடுபனி
நன்றிகள் கற்ப்புக்கரசன்---------------------ஸ்ராலின்
Reply
#13
தம்பி பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டுதாம் கருடா சவுக்கியமா எண்டு?
Summa Irupavan!
Reply
#14
<span style='color:brown'>இயக்குனர் பாலுமகேந்திரா ஒரு சிறந்த இயக்குனர் ,ஒளிப்பதிவாளர் , படைப்பாளி என்பது முற்று முழுதுமான உண்மை.

ஆனால் இவர் இலங்கையர் பற்றியோ
<b>இந்தியாவில் வாழும் இன்னல்படும் இலங்கையர் பற்றியோ கூட</b>
ஒரு குறும்படம் கூடச் செய்யாதவர்.

இது மட்டுமல்ல இலங்கையைச் சேர்ந்த எவரையும் தனது மாணவர்களாகவோ அல்லது சீடர்களாகவோ வைத்துக் கொள்ளாதவர் என்பது மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும்.

இப்படியான இவரது தற்போதைய ஆதங்கம் ???????:-
Quote:ஈழத்தமிழர்கள் பற்றி. வேதனைகளைச் சுமந்தபடி கால் நூற்றாண்டு காலம் போராடிக்கொண்டு இருக்கிற தமிழினம், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்ட கண்ணீரைப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.
- இயக்குனர் பாலுமகேந்திரா
</span>
Reply
#15
என்ன சொன்னாலும் அவர் மச்சகாரன் ம்ம்ம்ம்............... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#16
யோ....... என்ன விட்டா எல்லாரும் பாட்டுக்கு அளந்துகொண்டு போறீங்கள். உங்கள் கதைகளைப் பார்த்தால் அண்மையில் வந்த தங்கர்பச்சானின் திரைப்பட பாடல் ஒன்றைத்தான் நினைவு படுத்துகின்றது. " வீடு பணம் தோட்டமெண்டு வசதியாக வாழ்ந்தால் வயிற்றெரிச்சலைக் கொட்டும் இந்த ஊர். வாழ்வும் வசதியும் இழந்து கீழே போனால் கேலியாக சிரிக்கும்" இப்படி இரண்டும் கெட்டான் ஊரில மனிதனாக வாழ்வதெப்படி? பாலுமகேந்திரா என்பவர் திறமையான ஒளிப்பதிவாளன், இயக்குனர்.......... அவர் ஈழத்தமிழர் பற்றிய திரைப்படத்தை எப்பவோ படைத்திருக்க முடியும், ஆனால் அங்கே இருக்கக் கூடிய எதிர்ப்புகளைத்தாண்டி அவற்றை சாதிப்பது அவரிக்கு கடினமான காரியமாக இருக்கலாமல்லவா? மணிரத்தினம் என்னத்தையும் எடுத்துவிடலாம். பாலச்சந்தரும் எதையும் எடுத்துவிடலாம், ஆனால் பாரதிராசாவும் பாலுமகேந்திராவும் எதனையும் எடுக்கும் நிலை இந்தியாவைப் பொறுத்தவரையும் இல்லை. காற்றுக்கென்ன வேலி கதைய சொன்னதுக்கே என்ன பாடு படுத்தினவங்கள் மதிப்பிற்குரிய புகழேந்தி ஐயா அவர்களை. ஏதோ நாலுபேர் பேசுறாங்க எண்டு போட்டு நானும் பேசக்கூடாது.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)