04-12-2006, 11:22 AM
[b][size=24]நாளை அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தலைவர் உல்ப்ஹென் றிக்சன் பௌயர் சந்தித்து பேசவுள்ளார். அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தவுள்ளனர்.
இன்று காலை சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் அவர்களுடன் சந்திப்பை நடத்திவிட்டு கொழும்பு சென்றிருக்கும் அவர், சிறிலங்கா அரச தரப்பினருடன் பேச்சுக்களை நடத்துவார் என நம்பப்படுகின்றது.
இந்நிலையில் நாளை மீண்டும் காலை 11 மணிக்கு புலிகள் தரப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பேசவிருக்கின்றார் உல்ப்ஹென் றிக்சன் பௌயர்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருடனான சந்திப்பை முடித்துக் கொண்டு அரசியல்துறைப் பொறுப்பாளர் கிளிநொச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடாத்தவிருக்கின்றார். விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு தொடர்பான முக்கிய முடிவு இதில் அறிவிக்கப்படும் என்று தெரிகின்றது.
நாளைக்கு முக்கிய முடிவு அறிவிக்கப்படும்

[b]