Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
எப்போதும் எனக்குத் தனிமனித துதிபாடலில் நம்பிக்கை கிடையாது. அதே நேரம் சாயிபாபாவின் கல்விச் சேவைகள் கிராமங்களுக்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் பாராட்டப் படவேண்டியவை. இதேபோல்த்தானே தற்போது டென்மார்க் நாட்டிலும் நம் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி அதிசயங்கள் நடாத்தி வருகின்றார். இதில் என்ன அதிசயம் என்றால் டென்மார்க்கிலுள்ள தமிழர்கள் அவவை வழிபடச் செல்வதில்லை. ஆனால் ஏனைய நாடுகளிலுள்ள தமிழர்கள் திரளுகின்றனர். இவர் நம்மவர் என்பதாலோ என்னவோ எவரும் இவர் பற்றி வாய் திறக்கவில்லை.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
அந்த "அம்மன் அவதாரம்" பற்றி தொலைக்காட்சியிலும் விளம்பரம் போடுகிறார்கள். சும்மா சொல்லக்கூடாது பட்டும் படாமலும் மேக்கப் ஏல்லாம் போட்டுத்தான் அம்மன் அவதாரம் அருள்கொடுக்;க வருகிறா.
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
வசம்பு சொன்னதை போல டென்மார்க்கில் உள்ள பெண்மணி பற்றியும் அவரது கணவனை பற்றிய சுத்து மாத்துகளை பற்றியும் டென்மார்க்கிலுள்ள தமிழர்களிற்கு நன்கு தெரிந்திருப்பதால் அங்குள்ள தமிழர்கள் அவரிடம் பேகாவதில்லை யெர்மனியிலிருந்துதான் அதிக தமிழர்கள் அவரிடம் போகிறார்கள் அவரை பற்றி முன்பு ஒரு முறை யாழில் எழுதியிருந்தேன் கருத்து காணாமல் போய் விட்டது
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
போலிச்சாமிகள் பற்றி விழிப்புணர்வு கொண்டுவரும் தகவல்களை யாழ்களத்தில் பகிர்வதற்கு ஏன் தடை?
விமர்சனங்கள் உண்மைகளை தனிமனித தாகுதல் என்று மூடிமறைக்க முயல்வது சரியா?
சாமியார் அரசியல்வாதிகள் என் பொதுவாழ்விற்கு புறப்பட்டவர்கள் இவற்றை எதிர்கொள்ள வேண்டும். அவற்றை தனிமனிதர்களாக பார்க்கமுடியாது.
ஏனைய உறுப்பினர்கள் உங்கள் கருத்துக்களையும் வையுங்கள்.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
சாமியார்கள் என்று நாம் எல்லோரையும் குறை சொல்ல முடியாது. உண்மையில் சமுதாய முன்னேற்றங்களக்காக மதங்களைக் கடந்து தொண்டாற்றிய மகான்களும் உள்ளார்கள். உதாரணமாக இந்த விடயத்தில் எனக்கு காலஞ்சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் காலஞ்சென்ற குன்றைக்குடி அடிகளார் போன்றோரை மிகவும் பிடிக்கும். இவர்கள் சேவைகளுக்காக இவர்களை கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்கள் கூட மதித்தனர்.
<b>அதே போல் சமுதாயக் குறைபாடுகளை தாராளமாக சுட்டிக் காட்ட வேண்டும். ஆனாலும் அதனைக் கௌரவமாகச் சொல்வதே சாலச் சிறந்தது. ஒரு மதத்தைச் சார்ந்தவர் இன்னொரு மதத்தைப் பற்றிச் சொல்வதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக எந்த மதமும் தவறான பாதையைச் சொல்லவில்லை . அவற்றை பரப்புவோரும் சில போலிகளுமே தவறான வழிகளைக் கைக்கொள்கின்றனர். எனவே வார்த்தைகளை கவனமாகக் கையாள வேண்டும். எமது கருத்துக்களால் எந்த மதமக்களும் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எமக்குப் பிடிக்காத விடயங்களை நாம் மேற்கொள்ளாது விடலாம். அதே போல் அவரவர் தமது சொந்த விருப்பங்களுக்கு ஏற்றவாறு நம்பிக்கை வைப்பதை நையாண்டி செய்யாமல் வேண்டுமானால் எமது சந்தேகங்களை அவர்களிடம் பவ்வியமாகக் கேட்டுத் தெரிந்தோ அல்லது அவர்களுக்குத் தெரியாமலிருந்தால் தெரிய வைத்தோ கொள்ளலாம். எனவே எப்போதும் நாகரீகமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வதே சாலச் சிறந்தது.</b>