Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏவிஏட்டர் அல்லது வான்வியலாளர்-ஒரு விமர்சனம்
#1
ஏவிஏட்டர் அல்லது வான்வியலாளர்-ஒரு விமர்சனம்

<img src='http://img10.imageshack.us/img10/4049/theaviatorbigposter6ip.jpg' border='0' alt='user posted image'>

இந்த ஆண்டு வெளி வந்த கொலிவூட் படங்களில் குறிப்பிடத்தக்கது.மார்டின் ஸ்கொர்சினால் நெறிப்படுத்தப்பட்ட ,விமானவியலாளரான கார்வார்ட் கெயுசுன் வாழ்க்கை வரலாற்றை அடியோற்றி எடுக்கப் பட்ட காலப் படம்.யார் இந்த கார்வார்ட் கெயுஸ், அமெரிக்காவில் டெக்சாசில் எண்ணை வர்த்தகத்தில் ஈட்டிய வருமானத்தில் ,பல கோலிவூட் படங்களை எடுத்து பின்னர் அமெரிக்க விமானப்படைக்கு தேவயான விமானங்களை வடிவமைத்து, பல வான் பறப்பு சாதனைகளைச் செய்து,விமானச் சேவை நிறுவனத்தை உருவாக்கி ஆரம்பகால கண்டங்களுக் இடயேயான பயணியர் விமான சேவை நிறுவனங்களைத் தொடக்கிய ஒரு கலவை மனிதர்.இவர் அந்தக் காலத்தில் அதாவது 1920 - 1940 காலத்தில் கோலிவூட்டை ஆட்டிப் படைத்த ஒரு எம் ஜீ ஆர்.இவர் பல நடிகைகளை தனது நாயகியாகவும் வைத்திருந்தார்.சில வேளைகளில் அதி கூடிய சுத்தத்தை பேணும் ஒரு மன நோயளராகவும் இருந்தார்.இவ்வாறு ஒரு கலவயான குணா அம்சத்தை உடய மனிதரின் கதை அந்தக்காலத்தை பிரதிபலிப்பதாக மிகவும் தொழில் நுட்ப நேர்தியுடன் எடுக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக இதில் அமெரிக்க வர்தகர்க்கும் ,அமெரிக்க அரசியலாளர்கள் அதாவது செனட்டர்களுக்குமான தொடர்பு மற்றும் அந்தக் காலத்தில் கொம்யுனிஸிட்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு நிகழ்ந்த மக்காத்தி படு கொலைகள் ,அமெரிக்க கொலிவூட்டில் பெண் நடிகைகள் நடத்தப்படும் விதம் எனப் பல விடயங்கள் சொல்லப் பட்டிருப்பது,அமெரிக்காவைப் பற்றிய உண்மைகளை இன்றய நிலயில் எமக்கு அறியவைகின்றது.அமெரிக்க வர்த்தகம்,அரசியல் அனைத்துமே போர்களோடு பின்னிப்பிணைந்தது என்பது இன்றும் நிதர்சனமாகவே இருப்பதை இந்தப் படம் எமக்கு நினைவூட்டுகிறது.
Reply
#2
நல்ல சுருக்கம் ஒண்ட தந்திருக்கிறீங்க அக்கா....இந்தப் படத்த பாக்கோணும் போல இருக்கு....

வேற நல்ல ஆங்கில படங்கள பற்றியும்.....புதுசா வாற படங்கள் பற்றியும் சுருக்கமா எழுதினீங்கள் எண்டால்......அந்த படங்கள எடுத்து பாக்கிறதுக்கு வசதியா இருக்குமக்கா.....

நீங்க ஈரானிய படங்கள பாக்கிறனீங்களா......இண்டைக்கு உலகத்தரத்தில நல்ல சினிமா எண்டு சொல்லுவினம்....அதுகள பாத்திருந்தா அதப்பற்றியும் கொஞ்சம் எழுதுங்கோவனக்கா.....
Reply
#3
வணக்கம் அக்கா,

ஒருத்தரும் இங்க எழுதேல்ல என்றவுடன் இதை இங்க எழுதினது நேரம் மினக்கட்ட வேலை எண்டு நினச்சன், உங்களுக்காவது பிரயோசனமா இருந்ததால சந்தோசம். நாங்கள் சினிமா எண்டா சும்மா தமிழ் படங்கள மட்டும் பாத்துக் கொண்டிருந்தா எங்கட பார்வயோ ரசனயோ இல்லாட்டி உலக விசயங்கள் பற்றிய அறிவோ வளரப் போறேல்ல.பல மொழிகளில நல்ல பல படங்கள் வருகுது.உங்களுக்கு தெரிந்த படங்களையும் எழுதுங்கோ அப்பத் தான் தேடிப் பிடிச்சுப் பாக்கலாம்.

இன்னொரு விசயம் இந்தா கார்வட் கியுசின் சில ஆரம்ப கால முயற்ச்சிகளால தான் நாங்கள் எல்லாம் சொகுசா விமானக்களில புலத்தில பயணிக்கக் கூடியதாக இருக்கு.மேலும் செய்மதிகள்,தொலைக் காட்சி என்பனவற்றில் இவர் உருவாக்கிய நிறுவனங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அத்தோடு படமும் 1920,30,40 ஆண்டுகளில நகரும் போது அந்த காலத்திற்கு ஏற்ற டெக்னிக் கலரில நகருறது பார்ப்பவரை அந்த காலகட்டத்துக்கே கொண்டு போய் விடுகிறது.இந்தமுறை ஒஸ்காரில இந்தப் படம் பருசுகளைக் குவிக்கலாம்.
Reply
#4
ஏவியேட்டர் படம் குறித்த் அறிய தந்தமைக்கு நன்றிகள். வேற்று மொழி படங்களில் சிறந்த படங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து தாருங்கள். அனைத்து பிற மொழி படங்களையும் பார்க்காவிட்டாலும் சிறந்த படங்களை அதன் மூலம் அறிந்து கொண்டு பார்க்கலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
ஏவியேட்டர் படத்தைப்பற்றி அறியத்தந்தமைக்கு
நன்றி அக்கா
துப்பறியும் படங்கள் எனக்கு சரியான விருப்பம்
உங்களுக்குத் தெரிந்தால் அப்படிப்பட்ட படங்களையும் அறியத்தாருங்கள்.( உங்களுக்கு நேரமுள்ளபோது) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#6
<!--QuoteBegin-siluku+-->QUOTE(siluku)<!--QuoteEBegin-->ஏவிஏட்டர் அல்லது வான்வியலாளர்-ஒரு விமர்சனம்

<img src='http://img10.imageshack.us/img10/4049/theaviatorbigposter6ip.jpg' border='0' alt='user posted image'>

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தகவலுக்கு நன்றி.
தொடர்ந்து எழுதுங்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)