Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காட்டுக்குள் 6 மாதமாக சோறு தண்ணீர் இன்றி வாழும் அதிசய சிறுவன
#1
நேபாள தலைநகர் காட்மாண்டுவை சேர்ந்த சிறுவன் ராம்பகதூர் பங்ஜான். இந்த சிறுவனுக்கு 15 வயது ஆகிறது. இந்த சிறுவன் காட்மாண்டு அருகே உள்ள பாரா பகுதிக்கு சென்றான்.

அங்குள்ள காட்டுப்பகுதியில் ஒரு மரத்துக்கு கீழே உட்கார்ந்தபடி அவன் தவம் இருக்கத் தொடங்கினான்.

கால்களை மடக்கி அமர்ந்து கண்களை மூடி அவன் 6 மாதமாக தவம் இருக்கிறான். இந்த 6 மாதமும் அவன் சோறு தண்ணீர் எதுவும் சாப்பிடவில்லை. எப்போதாவது ஒருசில நிமிடங்கள் மட்டும் கண் விழித்து பார்க்கிறான்.

இது பற்றி கேள்விப்பட்டதும் ஏராளமானவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்க்கிறார்கள்.

அந்த சிறுவன் புத்தரின் மறு அவதாரம் என்றும் நேபாள மக்கள் கூறுகிறார்கள். தவம் இருக்கும் அந்த சிறுவனை புத்தரின் மறு அவதாரமாக நினைத்து வழிபாடும் நடத்துகிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை எதையும் அவன் ஏற்றுக் கொள்வதில்லை.

தினமும் 10 ஆயிரம் பேர் வரை அந்த சிறுவனை பார்க்க செல்வதால் இந்த காட்டுப் பகுதிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
Thanks:Malaimalar....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4479240.stm# புத்தர் மீண்டும் சிறுவன் உருவிலா....விஞ்ஞானிகள் பரிசோதிக்க இருக்கிறார்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->



Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)