11-30-2005, 09:23 AM
அபாயச் சங்கொலி
நாளை உலக எயிட்ஸ் தினமாகும். மனித உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை இல்லாதொழிக்கும் இந்த ஆட்கொல்லி நோயின் காரணியான எச்.ஐ.வி. வைரஸின் முதல் தொற்று கண்டு பிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கழிந்து விட்டது. எயிட்ஸுடனான மனித குலத்தின் கால் நூற்றாண்டு கால `வாழ்வில்' இதுவரை அது இரண்டரைக் கோடிக்கும் அதிகமானவர்களைப் பலியெடுத்துவிட்டது. எயிட்ஸின் தொற்றுக்கு இலக்கான 4 கோடிக்கும் அதிகமானவர்கள் இன்று உலகில் இருக்கிறார்கள். தினமும் புதிதாக உலகில் 6 ஆயிரம் பேரை எயிட்ஸ் தொற்றிக்கொண்டு வருகிறது.
எயிட்ஸ் பலியெடுத்தவர்களை நினைவு கூருவதற்காகவும் அதன் தொற்றுக்கு இலக்காகி அவலப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மீது பரிவு இரக்கம் காட்டி சிகிச்சையளிப்பதற்காகவும் எஞ்சிய மனித குலத்தை அதன் தொற்றில் இருந்து விடுபட்டவர்களாக வாழவைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் வருடந்தோறும் டிசம்பர் முதலாம் திகதியை ஐக்கிய நாடுகள் உலக எயிட்ஸ் தினமாக அனுஷ்டித்து வருகிறது. மேற் கூறப்பட்ட புள்ளிவிபரங்கள் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்ற அதேவேளை, எதிர்காலத்தில் எயிட்ஸ் பாதிப்பு தணிவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லாத நம்பிக்கையற்ற நிலைவரம் மேலும் கவலையைத் தருகிறது.
எமது காலத்தின் உலகளாவிய பிரதான நெருக்கடிகளில் ஒன்றாக விளங்கும் எயிட்ஸ் கொடுமையின் முன்னரங்க நிலையமாக ஆசியா மாறிக் கொண்டு வருகின்றபோதிலும், அந்த பேராபத்து தொடர்பில் அரசாங்கங்கள் போதிய அக்கறை செலுத்துவதாக இல்லை என்று ஐ.நா. எயிட்ஸ் (க்‡ அஐஈகு) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான பீற்றர் பியட் எச்சரிக்கை செய்திருக்கிறார். துரித பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் ஆசியாவில் எயிட்ஸ் நோயின் ஆபத்து குறித்து பிராந்திய நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக உலக எயிட்ஸ் தினத்துக்கு முன்னதாக இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்திருக்கும் பீற்றர் பியட் தெரிவித்திருக்கும் விபரங்கள் சகல ஆசிய நாடுகளினாலும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவையாகும்.
`எயிட்ஸ் கொடுமையின் புதிய முன்னரங்க நிலையமாக ஆசியா மாறியிருக்கிறது. ஆசியாவில் எயிட்ஸ் நோய் கணிசமான காலத்துக்கு தொடர்ந்து பரவும் பேராபத்தான நிலை தோன்றியிருக்கிறது. தடுப்பு நடவடிக்கைகளுக்கான செய்தி போதுமானளவுக்கு மக்களைச் சென்றடையாததே இதற்கான காரணமாகும். பறவைக் காய்ச்சலுக்கு எதிரான போராட்டம் எச்.ஐ.வி./ எயிட்ஸ் பரவலுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளில் இருந்து கவனத்தையும் நிதியையும் திசை திருப்பக்கூடும்.
`இந்த வருடத்தில் மாத்திரம் உலகம் பூராவும் சுமார் 50 இலட்சம் பேர் எச்.ஐ.வி.யின் தொற்றுக்கு இலக்காகியிருக்கிறார்கள். முதன்முதலாக மனிதரில் எச்.ஐ.வி. தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட 1981 இற்குப் பிறகு அதன் தொற்றுதலைப் பொறுத்தவரை இவ்வருடமே மிகவும் கூடுதல் வீச்சு காணப்படுகிறது. தற்போது உலகில் 4 கோடி 3 இலட்சம் பேர் எயிட்ஸ் நோயுடன் வாழுகிறார்கள். 2003 க்குப் பின்னர் ஆசியாவில் 12 இலட்சம் பேருக்கு புதிதாக எச்.ஐ.வி. தொற்றியிருக்கிறது. இக் கண்டத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 83 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. வியட்நாம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்நோய் துரிதமாகப் பரவுவதற்கான சூழ்நிலைகள் காணப்படுகின்றன.
` உலகில் புதிதாக எச்.ஐ.வி. யின் தொற்றுக்கு இலக்காகும் நால்வரில் ஒருவர் ஆசியராக இருக்கிறார். சீனாவின் சகல மாகாணங்களுக்கும் இந் நோய் பரவியிருக்கிறது. இந்தியாவில் 50 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் எச்.ஐ.வி. தொற்றுதலுக்குள்ளாகியிருக்கிறார்கள். உலகில் தென்னாபிரிக்காவுக்கு அடுத்தபடியாக எயிட்ஸ் பாதிப்புக்குள்ளான நாடாக இந்தியா விளங்குகிறது. தென்னாபிரிக்கர்களில் 9 பேரில் ஒருவர் எயிட்ஸ் நோயாளி. எச்.ஐ.வி. யின் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் சீனாவில் 50 சதவீதத்தால் உயர்வடைந்திருக்கிறது.
`உலகம் பூராவும் இவ் வருடம் எயிட்ஸ் நோயினால் 31 இலட்சம் பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை கடந்த வருட ஆசிய கடல்கோளுக்கு பின்னர் இடம் பெற்ற சகல இயற்கை அனர்த்தங்களிலும் பலியானோரின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமானதாகும். எச்.ஐ.வி.யின் தொற்றுக்கு இலக்கானோர் பயன்படுத்துவதற்கான மருந்து வகைகள் (அணœடி கீஞுœணூணிதிடிணூச்டூ ஈணூதஞ்ண்) அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மேற்குலகில் எயிட்ஸ் ஆபத்து குறித்து போதிய கவனம் செலுத்தப்படுவதாக இல்லை.இந்த மருந்து வகைகள் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதாக தவறாகக் கருதப்படுவதே இதற்குக் காரணமாகும். இதன் விளைவாக, சகல மேற்கு நாடுகளிலுமே புதிதாக எச்.ஐ.வி.யின் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 5-10 வருடங்களுக்கு முன்னர் எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்கானவர்களில் பலர் இப்போது நோயுற்றிருக்கிறார்கள்' என்று ஐ.நா. எயிட்ஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
எயிட்ஸ் கொடுமையின் புதிய முன்னரங்க நிலையமாக ஆசியா விளங்குகிறது என்ற ஐ.நா.வின் அறிவிப்பும் உலகில் எயிட்ஸினால் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக எமது அயலகமான இந்தியா இருக்கிறது என்ற உண்மையும் இலங்கையர்களாகிய நாம் வெறுமனே செய்தியாக நோக்கிவிட்டு அலட்சியம் செய்யக் கூடியவையல்ல என்பதை உணர்ந்து கொள்ளத் தவறக் கூடாது. எயிட்ஸ் பரவும் பேராபத்தில் இருந்து தப்பிப்பிழைத்ததாக இன்று உலகில் எந்தவொரு நாடுமேயில்லை.
கடந்த வருட நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் வெளியிடப்பட்ட மனித அபிவிருத்திச் சுட்டெண் (ஏதட்ச்ண ஈஞுதிஞுடூணிணீட்ஞுணœ ஐணஞீஞுது) அறிக்கையில் ஆபிரிக்க கண்டத்தின் பல நாடுகளில் மக்களின் சராசரி ஆயுட் காலத்தை எயிட்ஸ் நோய் 40 வருடங்களாக அல்லது அதற்கும் கீழாகக் குறைத்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. உலகில் பரிதாபகரமான வாழ்க்கைத் தரம் கொண்ட கண்டமாக ஆபிரிக்காவை எயிட்ஸ் மாற்றியிருக்கிறது. ஆபிரிக்காவில் ஒட்டுமொத்த மனித அபிவிருத்தி குறியீடுகளின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணியாக எயிட்ஸ் கொடுமையே விளங்குகிறது. ஆசிய எயிட்ஸ் நிலைவரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள விபரங்களை ஆபிரிக்காவின் வழியில் ஆசியாவும் சென்று விடாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசரம் குறித்த அபாயச் சங்கொலியாகக் கருதி அரசாங்கங்கள் செயலில் இறங்கவேண்டியது அவசியமாகும்.
http://www.thinakural.com/New%20web%20site...0/editorial.htm