Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
வசம்பு
நீங்கள் சொல்வதைப்பார்த்தால் இந்தக்கட்டுரை எழுதியவரும் முழுவதுமாக இந்தவிடயத்தை தெரிந்துகொண்டு எழுதவில்லை. இல்லையென்றால் அதை மூடிமறைத்துள்ளார். அப்படித்தானே?
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
ஆதிபன்
கட்டுரையாசிரியர் முழுவதுமாக தெரிந்து கொண்டு எழுதவில்லையென்று சொல்ல மாட்டேன். ஆனால் தெரிந்ததை மறைத்து சில ஊடகங்களிலுள்ள தனது தனிப்பட்ட கோபங்களை வெளிக் கொண்டுவந்திருக்கின்றார். உதாரணமாக சண் தொலைக்காட்சியின் விளம்பரத்தில் மாலைமுரசு போன்ற பத்திரிகைகளின் விளம்பரத்தில் அப்பத்திரிகையின் தலைப்புச் செய்தியை விளம்பரமாக்கினார்கள். இதிலென்ன தவறு. சமீபத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த படம் தோல்வியடைந்த போது அதனை சுப்பர் ஸ்ராரின் மருமகன் மண்ணைக் கவ்வினாரென குமுதம் தலையங்கமிட்டது. இவையெல்லாம் விளம்பரயுக்தியே.
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
குஷ்புவுக்கும் சுகாசினிக்கும் ஆதரவு கொடுக்க நடிகர்சங்கம் தீர்மானித்துள்ளதாக தினமலரில் செய்தி வந்திருக்கின்றது.
ஆனால் நடிகர்கள் ஒழுங்கம் கெட்டவர்கள் என்று யாராவது சொன்னால் அவர்கள் சும்மா இருப்பார்களா?
நடிகர்களை தலையில் வைத்து ஆடும் இந்திய மக்களுக்கு இது தேவைதான்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>ஆதிபன்:</b>
எந்தவிடயமும் எப்படி விளம்பரப்படுத்தினாலும் அதில் உண்மையில்லாதபோது எத்தனை நாட்களுக்கு நிலைத்துநிற்கும். அரசியல்வாதிகள் என்பதற்காக அவர்கள் செய்வதெல்லாம் அடாவடித்தனமாகி விடாது. அதற்காக தவறுகளை நியாயப்படுத்த முடியாது. வெறும் உப்புச் சப்பில்லா விடயம் எனச் சொல்லிக் கொண்டெ இதுபற்றி தொடர்ந்து கருத்துக்கள் எழுதும் உங்களை என்ன சொல்வது.
<b>வியாசன்:</b>
நீங்கள் குறிப்பிட்ட நடிகர் சங்க விடயம் நானும் பார்த்தேன். இதில் எவ்வளவு உண்மைத் தன்மையுள்ளது என்பது போகப் போகத்தான் தெரியும். ஏனெனில் இதே சரத்குமார் தான் சுகாசினி செய்த தொலைபேசிச் செய்தி மிரட்டலால் கோபம் கொண்டு அவரைச் சங்கத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப் போதவதாக அறிவித்தார்.
<b>மேலும் வியாசன் அன்பான ஒரு வேண்டுகோள் எதற்கெடுத்தாலும் இந்தியத் தமிழர்களைக் கிண்டலடிப்பதை நிறுத்துங்கள். வெளிநர்டுகளில் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் சக்கை போடு போடுவதற்கும் இந்தியத் தமிழர்களா காரணம். இங்கே எமது வானொலிகளெல்லாம் ஈழத்துப் பாடல்களை மட்டும் தானே ஒலிபரப்புகின்றன. </b>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
தப்பாக விளங்கிக்கொண்டுள்ளீர்கள் வசம்பு
நான் தமிழக மக்களை கிண்டலடிக்கவில்லை. நம்மவரிடையே 95 96 வரை சினிமா மோகம் அதிகமாக இருந்தது. அந்தவேளையில் நடிகர்களை இங்கு வரவழைப்பதுவும் அவர்களுக்கு தங்க சங்கிலிகள் அன்பளிப்பு செய்வதுவுமாக இருந்தனர். ஆனாஈல் இப்போது படங்களுடன் நின்று கொள்கின்றனர். இது ஒரு பெரியமாற்றம்.ஆனால் இந்தியாவில் அப்படி அல்லசினமா அவர்களுடைய உயிர் அதனால்தான் நான் அப்படி குறிப்பிட்டேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>வியாசன்</b>
நீங்கள் சொல்லும் மாற்றம் நம்மவர்கள் தாமாகச் செய்திருந்தால் வரவேற்கத்தக்கது. ஆனால் மிரட்டல்களாலேயே இப்படியொரு நிலை உருவாக்கப்பட்டுள்ளது. யாராவது தனியார் இந்திய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தால் அதை குழப்புவதற்கென்றே குறிப்பிட்ட சிலர் இயங்குகின்றனர். அதே குறிப்பிட்ட சிலரே இந்தியத் திரைப்படங்களை இங்கு வெளியிட்டு பணம் பார்க்கின்றனர். இது உங்களுக்கே வேடிக்கையாகவில்லையா?? சரி பொதுவாக இந்தியர்களுக்கு சினிமா உயிர் என்றீர்கள். அதே இந்தியாவில் தானே கேரளாவும் உண்டு. அங்கே உங்கள் வாதம் எடுபடுமா?? அவர்கள் நம்மவர்களை விட எவ்வளவோ மேல்.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>து}யவன்</b>
<b>ஆகா ஓகோ ஏதோ சுடுகின்றதா??</b>
பக்கம் பக்கமாக காணவில்லையென்று தேடுவார்கள். 1000 கருத்துக்கள் 2000 கருத்துக்கள் 5000 கருத்துக்கள் எழுதினார்கள் என்று பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டேயிருப்பார்கள். அவற்றோடு ஒப்பிடும் போது இது ஒன்றும் கேவலமில்லை
<b>முதலிலே வக்காலத்து வாங்கிறவங்களை நிறுத்தச் சொல்லுங்கள் பிறகு நான் நிறுத்துகின்றேன். என்ன நாயகன் படம் ஞாபகம் வருகின்றதா???</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
தாராளமாக நீங்களே அதைச் செய்யலாமே?????????????????? நீங்கள் கூட இந்தப் பக்கத்தனுள்ளேயே உங்கள் பொன்னான நேரத்தை ஏன் வீணாக்குகின்றீர்கள்????????????????
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ரேவதியை இங்கு கூப்பிடாதீர்கள். அவரையும் கேரளாவிற்குத்துரத்திவிடுவார்கள் இந்த அடாவடித்தமிழர்கள்.
மோசமான பெண்ணிடம் தமிழ்நாட்டை ஒப்படைத்துவிட்டு இருக்கிறார்கள். குஸ்ப்பு ஏதும் சொன்னால் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறதோ... என்ன மானஸ்தர்கள் இவர்கள்.
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
<b>குஷ்பு பார்த்த கொலை: சிபிஐ விசாரணை?</b>
நவம்பர் 23, 2005
சென்னை:
சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஒரு பார்ட்டியின்போது ஒரு குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை குஷ்புவும் போலீசாரும் மறைத்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் அந்தக் கொலை நடந்தபோது குஷ்புவும் அந்தப் பார்ட்டியில் இருந்தார். ஆனால், கொலையை போலீசிடம் அவர் தெரிவிக்கவில்லை. பின்னர் குமுதம் பத்திரிக்கைக்கு ஒரு பேட்டியளித்தபோது, அந்தக் கொலைச் சம்பவம் தனது மனதை மிகவும் பாதித்ததாக குஷ்பு கூறியிருந்தார்.
இதையடுத்து குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிந்தும் அதை போலீசுக்குத் தெரிவிக்காமல் மறைத்த குஷ்பு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
இந்தக் கொலையை போலீசார் ஏன் விசாரிக்காமல் விட்டார்கள் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும், மேலும் இக் கொலை குறித்து சிபிஐ அல்லது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி மகாராஜன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொலை வழக்கை போலீசார் விசாரிக்காமல் மறைத்தது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணையோ, டிஜிபி தலைமையிலான விசாரணையோ அல்லது சிபிஐ விசாரணையோ தேவையா என்பது குறித்து ஓரிரு நாளில் உத்தரவிடப்படும் என்றார்.
பின்னர் வழக்கை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். குமுதம் ஆசிரியர் டிசம்பர் 15ம் தேதி ஆஜராகி சாட்சியளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
முடிஞ்சிட்டுதோ விவாதம்.
குஸ்புவுக்கு ஒரு கடிதம்!
எழுதியவர் மட்டுவில் ஞானக்குமாரன்
<img src='http://tamilamutham.net/images/stories/kavithai/kushbu.jpg' border='0' alt='user posted image'>
உனக்கென்ன
ஆடும் மேடைகளிலெல்லாம்
காசு மாலைகள்தானே..!
ஏறும் சபாக்களிலெல்லாம்
மக்கள் கூட்டம்
வாய் பிழந்த முகங்களுடன்
உனக்கு
கோவில் கூடக்
கட்டியிருக்கிறானாம் ஒரு கிறுக்கன்...
தமிழுக்கு
நீ செய்த
தொண்டுக்காகவோ அல்லது
உலக உய்வுக்கான உனது சேவைக்கும்
உனைத் தேடி வரவில்லை
அவர்கள்
அது
ஏனென்று உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்...
கூட்டம்
உனக்காக கூடியதைக் கண்டு
நீ
போட்டது
தப்புக் கணக்கு
என்னது
தமிழ்ப் பெண்கள்
ஒழுங்கற்றவரா..!
துப்பம்மா
வாய் வழியே உனது அனுபவங்களை
ஆனால்
அது தமிழ்ப் பெண்ணுக்கும்
பொருத்தமென்றதே மிகப் பெரிய
தப்பம்மா... …
ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக
உனைப் போல
தமிழை பேசப் பழகியவர்
செய்யும் இழிவெல்லாம் தமிழனுக்காகாது
உயிர்
இழை கொண்டே
எமது பாரம் பரியத்தினை
கட்டிக் காக்கவர்கள்
மானம் போகின்
வைரத்துகழ் அரைத்துண்டு
மடிவார்
தமிழ்ப்பெண்கள் பரம்பரை
உனக்கு ஆமாப் போடுகிறது
திருமதி மணிரத்தினம்
இடிக்கிறதே எங்கோ..?
மும்பாயைப் பற்றி
எது வேண்டுமாகிலும் பேசிவிட்டுப் போ
எம் பாவைகளைப் பற்றி பேச
நீ யார்...?
('வணக்கம் மலேசியா' நிகழ்வில் இடம்பெற்ற கவிதை இது.)
நன்றி தமிழமுதம்.
http://www.tamilamutham.net/index.php?opti...d=257&Itemid=34
<b> .</b>
<b>
.......!</b>