12-06-2005, 12:26 PM
மோதலில் அரபு இளைஞர் கண்ணில் காயம்: கேரள வாலிபரின் கண்ணை குத்தி குருடாக்க உத்தரவு; சவூதி நீதிமன்றம் கொடூர தண்டனை
திருவனந்தபுரம், டிச. 6-
சவூதி அரேபியாவில் கேரளாவைச் சேர்ந்த இளை ஞர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள். நவுசாத் என்ற வாலிபர் தமாம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்தார்.
இங்கு சவூதி அரேபியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்து பேட்டரி சார்ஜர் வாங்கிச் சென்றார். அதை அவர் வீட்டில் போய் போட்டுப் பார்த்தார். அது சரியாக இயங்கவில்லை. இதனால் பெட்ரோல் பங்க்குக்கு திரும்ப வந்து பேட்டரி சார்ஜரை கொடுத்து புகார் கூறினார்.
கொடுக்கும் போது சரி யாகத்தான் இருந்தது. பரி சோதித்து பார்த்த பின்புதானே வாங்கிச் சென்றீர்கள் என்று நவுசாத் அந்த இளைஞரிடம் கூறினார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டனர். இதில் அரபு இளைஞரின் கண்ணில் காயம்பட்டது. அவரை சிகிச் சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கண்ணில் ஆழமான காயம் ஏற்பட்டதால் அவரது ஒரு கண் பார்வை குருடானது.
சவூதி அரேபியா போலீசார் நவுசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 3 வருடமாக சிறையில் வாடிய நவுசாத் தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந் தார்.
ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி கண் ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற ரீதியில் கொடூர தீர்ப்பு வழங்கினார். அரபு இளைஞரின் கண்ணை குருடாக்கியதற்காக கேரள இளைஞரின் ஒரு கண்ணையும் குத்தி குருடாக்குமாறு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தீர்ப்பை கேட்ட நவுசாத் அதிர்ச்சி அடைந்தார்.
Maalaimalar

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>