Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
முகமாலையில் விடுதலைப் புலிகள் - படையினர் இன்று சந்திப்பு??
யாழில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தணிக்கும் நோக்குடன் விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. இளம்பரிதி அவர்களிற்கும், சிறீலங்கா படைகளின் யாழ். மாவட்ட தளபதி சுனில் தென்னக்கோனிற்கும் இடையே முகமாலை இராணுவ சூனியப் பிரதேசத்தில் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு போர் நிறுத்த கண்காணிப்புக்குழு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. இளம்பரிதி அவர்கள் சங்கதியிடம் கருத்துத் தெரிவிக்கையில்: இச்சந்திப்பு தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தொடர்பு கொண்டதையடுத்து தலைமைப் பீடத்தின் முடிவைப் பெற்றுக் கொண்டு இச்சந்திப்பிற்கு தாம் இணக்கம் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இச்சந்திப்புத் தொடர்பாக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நேரத்திற்கு மூன்று மணிநேரம் முன்பாக கொழும்பு ஊடகமொன்று யாழ். மாவட்ட சிறீலங்கா இராணுவத் தளபதி சுனில் தென்னக்கோனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இச்சந்திப்பு தொடர்பாக யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு தம்மிடம் எதனையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழில் வெளிவரும் நாளேடு ஒன்று விடுதலைப் புலிகள் இச்சந்திப்பில் கலந்து கொள்ள மறுப்புத் தெரிவித்துவிட்டதாக உண்மைக்குப் புறம்மான செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த நாளேடு தம்மிடம் தொடர்பு கொண்டபோது, சந்திப்புத் தொடர்பான போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கோரிக்கை தலைமைப் பீடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தலைமைப் பீடத்தின் முடிவு வந்த பின்பே தாம் முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தாக யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
<b>
?
- . - .</b>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. இளம்பரிதி கூறியுள்ளதாவது:
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.
இந்தத் தாக்குதல்களுக்கும் உங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று கண்காணிப்புக் குழுவினர் எங்களிடம் கேட்டனர். யாழ். குடா நாட்டில் எந்த ஒரு விடுதலைப் புலி உறுப்பினரும் இல்லை. சிறிலங்கா இராணுவத்தினர் மீது இத்தகைய தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. இந்தத் தாக்குதலை நாம் நடத்தவில்லை என்று திட்டவட்டமாக கண்காணிப்புக் குழுவுக்கு தெரிவித்துள்ளோம்.
யாழில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலுக்கு நாம் எந்த வகையிலும் காரணம் இல்லை என்று முற்றாக நாம் மறுத்திருக்கிறோம்.
அந்தப் பகுதியில் இராணுவ வன்முறைகள் அதிகரித்திருப்பதால் ஆத்திரமடைந்த மக்களே இத்தகையத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று கூட பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் மாணவர்களது மகிழ்ச்சியான கற்றலுக்குத் தடை விதிக்கும் வகையில்- மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை முற்றாகக் கெடுக்கும் வகையில் ஒரு இராணுவ அரண் அமைக்கப்பட்டது.
அதற்கு எதிராக மாணவர்களும் அந்தப் பகுதி மக்களும் போராட்டம் நடத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும் குண்டாந்தடிப் தாக்குதல்இ கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதோடு உயிர்க்கொலைகளை ஏற்படுத்துகிற வகையிலான துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியுள்ளனர்.
இத்தகைய நிகழ்வுகளினால் மக்கள் மேலும் மேலும் கிளர்ந்தெழ வேண்டிய சந்தர்ப்பமும் சூழலும்தான் ஏற்படும்.
எங்களுடைய மக்களைப் பாதிக்கின்றஇ மக்களைப் படுகொலை செய்கிற நிகழ்வுகளை மேற்கொள்ளாமல் இயல்பாகவே எம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கண்காணிப்புக் குழுவிடம் கேட்டுள்ளோம் என்றார் இளம்பரிதி.
நன்றி: புதினம்.
[size=14] ' '
Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
தூயவன் அண்ணா... ஏணண்ணா இப்படி... திருவிழா கொஞசநாள் நீடிக்கும் என்று எதிர்பார்த்தேன்.... ஒருநாளில் முடித்துவிட்டது... அதைவிட யாரோ அந்நியரின் திருவிழா என்பது வேடிக்கையாயிருக்கிறது.
8
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
பின்ன என்ன ஆயுதமற்ற அரசியல்பிரிவின் மேல் நடத்தப்பட்ட கொலைகளினால், அவர்கள்தானே குடாநாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள், அங்கு நடத்திய தாக்குதல் எல்லாம் பொறுமை இழந்த பொதுமக்களின் தாக்குதல்கள், பொறுமைக்கும் எல்லை உண்டுதானே.
.
.
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
ம்.
யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள், துப்பாக்கிகளையும் கைக்குண்டுகளையும் கிளைமோர் கண்ணிவெடிகளையும் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது, அதுவும் மிகவும் தேர்ந்த திறமையோடு கையாள்வது அவர்களின் பொறுமையின் எல்லையைக் காட்டுகிறது.
"பொங்கியெழும் எம் மக்கள் முன் பகைவன் பொடிப்பொடியாவது உறுதி"
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
புலிகள் வேற்றுலகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல, அதே சமுதாயத்தை சேர்ந்த எனது அண்ணாவும்,அக்காவும் ,உங்கள் தம்பியும்,தங்கையும்தான். அதே வீரமும் வேகமும் அதே சமுதாயத்துக்கும் இருக்கும்தானே, ஆயுதங்கள்தானே யாழ்குடாநாட்டில் இறைந்து கிடக்கிறது, பதுக்கி வைத்தவை எட்டப்பர் விட்டுவிட்டு ஓடியவை இப்படிஏராளம் இருக்கிறது, ஒருபகுதி மறைத்துவைத்தவர் உயிருடன் இல்லாததால் துருப்பிடித்துப்போகின்றன.
.
.