Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவர்களின் ஆசைகள்
#1
<span style='font-size:20pt;line-height:100%'><img src='http://www.kumudam.com/kumudam/301105/pg17-t.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் சினிமாவில் மீண்டும் ஓர் அதிசயம் நடந்திருக்கிறது. பார்க்காமலே காதல், பறந்து பறந்து போடும் சண்டைகள், வெளிநாட்டில் டூயட் போன்ற சமாச்சாரங்கள் எதுவும் இல்லாமலே அழகான ஒரு நல்ல சினிமாவை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

மல்லி, டெரரிஸ்ட் என்று ஏற்கெனவே இரண்டு தமிழ்ப் படங்களை இயக்கிய சந்தோஷ் சிவன் இப்போது நவரசா என்கிற படத்தையும் எடுத்திருக்கிறார். படம் முடிஞ்சு பத்து மாசத்துக்கு மேல ஆயிடுச்சு. ஃபிரான்ஸ் உள்பட பல நாட்டுத் திரைப்பட விழாக்களிலே நவரசா மிகச் சிறந்த படம் என்கிற பாராட்டையும் வாங்கியாச்சு. இருந்தாலும், தமிழ்நாட்டில் இப்ப படம் ரிலீசாகிறதைப் பாக்குறப்பதான் மனசுக்கு நிறைவா, சந்தோஷமா இருக்கு_ சந்தோஷிக்கிறார் சந்தோஷ் சிவன்.

நவரசாவின் கதை என்ன? _ சந்தோஷிடம் கேட்டோம். இந்த முறை நான் எடுத்துக் கொண்டது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை. ஒரு குடும்பத்தில் திடீரென ஒருவன் பெண்தன்மை கொண்டவனாக உணருகிறான். வீட்டில் அவனை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. வெளியிலும் ஆதரவு இல்லை. இந்த நிலையில் அவன் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்தான் நவரசா.

ஆணாகப் பிறப்பதும், பெண்ணாகப் பிறப்பதும் நம் கையில் இல்லை. இயற்கை செய்யும் ரசவாதம் அது. அந்த ரசவாதத்தில் நடந்துவிட்ட விபத்துகளை பரிவோடு அணுகி, புரிந்து கொள்ள வேண்டுமே ஒழிய, கேலி பேசுவதோ வெறுத்து ஒதுக்குவதோ கூடாது. இந்தப் படத்தின் மூலம் அரவாணிகளின் மனநிலையை, உள்ளதை உள்ளபடி யதார்த்தமாகக் காட்டியிருக்கிறேன். படத்தை ஒரே ஒரு முறை நீங்கள் பார்த்தால் கூட அது உங்களுக்குள் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும்!_உறுதியாகச் சொல்கிறார் சந்தோஷ் சிவன்.

கூவாகத்தில் நடக்கும் அரவாணிகள் திருவிழாவில் பத்து நாள், சென்னையில் பன்னிரண்டு நாள் என்று இருபத்தியிரண்டு நாட்களில் மொத்தப் படத்தையும் எடுத்துவிட்டாராம் சந்தோஷ் சிவன். விழுப்புரத்தில் நடக்கும் அரவாணிகள் அழகிப் போட்டியை அப்படியே லைவாக எடுக்க நினைத்தோம். எனவே, சினிமா சூட்டிங் நடக்கிறது என்று யாரிடமும் சொல்லவில்லை. பாபி டார்லிங் என்கிற நாங்கள் அனுப்பிய நடிகர் ஒருவரும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டார். எதிர்பாராத விதமாக அவருக்கு முதல் பரிசு கிடைத்ததில் எங்களுக்கே நம்ப முடியாத ஆச்சரியம்.

மல்லியில் நடித்த சுவேதா இந்தப் படத்திலும் நாயகி. அவர் படத்தில் நடிக்கவில்லை. வாழ்கின்றார். மிகச் சிறந்த நடிகையாக வருவார்.

கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக நான் சென்னையில்தான் இருக்கிறேன். தமிழ்நாடும், தமிழ் மக்களும் எனக்கு நெருக்கமாக இருப்பதால் மீண்டும் மீண்டும் தமிழில் படம் எடுக்கிறேன். தமிழ் சினிமா உலகில் புதிது புதிதாக யோசிக்கும் நடிகர்களும், இயக்குநர்களும் நிறைய இருக்கிறார்கள். அதிகமாக, செலவு செய்யாமல், நல்ல படங்களை எடுக்கும்போது நாம் நினைக்கிற விஷயங்களை சமரசம் செய்து கொள்ளாமல் சொல்ல முடிகிறது. இந்த திருப்தி ஒவ்வொரு கலைஞருக்கும் மிகவும் முக்கியம் தெளிவாகப் பேசுகிறார் சந்தோஷ் சிவன்.

இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்க உதவியதோடு, படத்தின் வசனத்தையும் எழுதியிருக்கிறார் ராஜா சந்திரசேகர். பாரதிராஜாவின் தயாரிப்பான இவர், சந்தோஷ் சிவனின் மல்லி, டெரரிஸ்ட் படத்துக்கு வசனம் எழுதியவர்.

சு. சமுத்திரம் எழுதிய வாடாமல்லி எனக்குள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நாவல். நவரசாவுக்காகப் பல அரவாணிகளுடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களின் மனதில் கிடக்கும் ஆசைகளை, ஏக்கங்களை, வெறுப்புகளை அப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. நாம் யோசிப்பதை கேரக்டர்கள் பேசவேண்டும் என்று நினைப்பதை விட, கேரக்டர்கள் பேசுவதை நாம் சொல்ல வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த எண்ணம் வெகுவாக நிறைவேறியிருக்கிறது. பல கமர்ஷியல் படங்களுக்கு நடுவே இதுபோன்ற படங்கள் வருவது மிக மிக முக்கியம் என்றார் ராஜா சந்திரசேகர்.

_ ஏ.ஆர். குமார்</span>
(குமுதம்)
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)