Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய நேரடி உதவி, பங்களிப்புடன் பலாலி விமானத் தளம் விஸ்தரிப
#1
இலங்கை இராணுவத்தின் முழுத் தேவைகளையும் நிறைவுசெய்யத்தக்க வகையில் பலாலியில் உள்ள விமானத்தளம் விஸ்தரிக்கப்படவிருக்கின்றது. அதற்கான உதவி யையும் பங்களிப்பையும் நேரடியாக இந்தியா வழங்கு கின்றது. தேவை ஏற்படும் சமயங்களில் யாழ்.குடாநாட்டில் உள்ள படையினருக்கு அவசர, அவசிய இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் பலாலி விமானத் தளம் முழு அளவில் விஸ்தரிக்கப்படும்.
விரைந்து மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த நடவடிக்கை பூர்த்தியடையும் வரை இலங்கை அரசு விடுதலைப் புலி
களுடன் யுத்தம் ஒன்றை ஆரம்பிக்காது. அதுவரை சமா தான நாடகம் இழுத்தடிக்கப்படும் என விடயமறிந்த வட்
டாரங்கள் தகவல் வெளியிட்டன. உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெய ரில் பலாலியைச் சூழப் படைத் தரப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் தாயகப் பிரதேசம் இந்த விமான நிலைய விஸ்தரிப்பின் கீழ் நிரந்தரமாக ஆக்கிரமிக் கப்பட்டுவிடும் என்று அஞ்சப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து கொழும்பு அதிகாரப் போக்கு இந்தியப்
பக்கத்துக்கு அதிகம் வளைந்து கொடுக்கும் நிலைமை ஏற் பட்டிருப்பதாக அவதானிகள் சுட்டுகின்றனர். அந்தப் பின்னணியிலேயே பலாலி விமா னத்தள விஸ்தரிப்பிலும் நேரடியாக இந்தி யப் பங்களிப்பு இடம்பெறும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. பழுதடைந்திருக்கும் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையைத் திருத்தி அமைக்கும் திட்டம் முன்னைய சந்திரிகா அரசினால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அப் போது அந்தத் திட்டத்திற்கு உதவியளிப் பதற்குப் புதுடில்லி அரசு
நிபந்தனை விதித் ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்திய உதவியுடன் இந்த ஓடுபாதையை விஸ்தரிப்பதாயின் இலங்கை இந்திய விமா னங்களைத் தவிர வேறு
விமானங்கள் பலா லியில் தரையிறங்குவதற்கு இடமளிக்கப் படமாட்டாது என்ற உறுதியை இலங்கை அரசு
வழங்கவேண்டும் என அப்போது இந் தியா கோரியது என்பதும் அதற்கு இணங்க மறுத்த சந்திரிகா அரசு, தனது அரசின் நிதியிலேயே பலாலி விமா னத் தள ஓடுபாதைப்
புனரமைப்பை மேற் கொள்ளத் தீர்மானித்து, அந்த வேலைகளை ஆரம்பித்து, அது தற்போது நடைபெற்று வருகின்றது என்பதும் தெரிந்தவையே. இந்தநிலையிலேயே புதிதாகப் பதவி யேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு இந்தியப் பக்கம் கூடுதலாகச் சாய்ந்திருக் கின்றது.
நாட்டில் அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் திடீரென யுத்தம் ஒன்று வெடித்தால்
யாழ்.குடாநாட்டை அர சுப் படைகள் தொடர்ந்து தக்கவைத்திருப் பது கேள்விக்குரியது எனக் கருதப்படும் நிலையில் அத்தகைய இக்கட்டு ஏற்பட்டால் மேற்கொள்ளக்கூடிய அவசர நடவடிக்கை கள் குறித்து கொழும்பு அரசின் புதிய நிர்வாகி கள் புதுடில்லியுடன் ஆலோசனை கலந்தனர் என்றும் கூறப்படுகின்றது.
புதுடில்லியிலும் கொழும்பிலும் பல மட் டங்களில் நடைபெற்ற பல்வேறு சுற்றுப் பேச்சுகளின் அடிப்படையில் பலாலி விமா னத் தளத்தை உயர்தரத்தில் விஸ்தரிப்பதற்கு புதுடில்லி நேரடியாக இணங்கியது என்று கூறப்படுகின்றது.
தற்போதைய திட்டத்தின்படி பலாலி விமா னத் தளத்தை உயர்தரத்தில் விஸ்தரிப்பதற்கு இந்தியா 4 மில்லியன்
அமெரிக்க டொலர் களைச் (40 கோடி ரூபாவை) செலவு செய் யும். சிவில் பொறியியலாளர்கள் என்ற கோதா
வில் இந்திய விமானப்படையின் பொறியி யலாளர்களும் புனரமைப்பு வேலைகளில் நேரடியாக ஈடுபடுத்தப்படுவர்
எனத் தெரி கின்றது. இந்திய உதவியுடன் விஸ்தரிக்கப்படும் பலாலி விமானத்தளத்தை இந்திய, இலங்கை விமானங்களைத் தவிர வேற்று நாட்டு விமா னங்கள் பயன்படுத்தக் கூடாது என்று தனது முன்னைய நிபந்தனையை இந்தியா இப் போதும் விதித்தது
என்றும் அதனை இலங்கை யின் புதிய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டது என் றும் தெரியவருகிறது.
பலாலி விஸ்தரிப்பைத் துரிதமாக மேற் கொண்டு முடிக்கும் வரை யுத்தத்தை தொடங்க விடாமல் காலத்தை
இழுத்தடிக்கும் திட்டத் தில் இலங்கை அரசுத் தரப்பு இருப்பதை கொழும்பு அவதானிகள் உறுதிப்படுத்தினர்.
புலிகளின் தாக்குதலினால் யாழ். குடா நாடு புலிகள் வசம் வீழும் நிலைமை ஏற்பட் டால் இந்தியாவிடமிருந்து
அவசர உதவி களைப் பெற்றுக்கொள்வது குறித்தும் உடன் பாடு ஏதும் எட்டப்பட்டிருக்கக் கூடும் எனச்
சந்தேகிக்கப்பட்டது. அடுத்த வாரத்தில் இலங்கையின் புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது முதலா வது வெளிநாட்டு விஜயத்தைப் புதுடில் லிக்கு மேள்கொள்ளவிருக்கின்றார். அப்போது இந்த விடயம் குறித்து இறுதி இணக்க நிலை எட்டப்படக்கூடும்
என எதிர்பார்க்கப்படு கின்றது. ஒருதலைப்பட்சமாக தமிழ் மக்களின் தாயகபூமியை உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கிரமித்து அதில் ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலத்தை விமானத்தள விஸ் தரிப்பு என்ற பெயரில் கபளீகரம் செய்யும் அரசின் உத்தேச திட்டம் தமிழர் தரப்பில் பெரும் எதிர்ப்புணர்வையும் சீற்றத்தையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியா வசமுள்ள பெரிய இராணுவ விமானங்கள் தரையிறங்கக் கூடியதாக நீண்ட ஓடுபாதை, நவீன தொழில்நுட்ப வசதிகள், உயர் பாதுகாப்பு ஆகியவை கொண்டதாக பலாலி விமானத்தளம் விஸ்தரிக்கப்படும் போது அச்சுற்றாடலில் உள்ள தமிழர்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் சுவீகரிக் கப்பட்டுவிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்திய உதவியுடன் பலாலி விமானத் தளத் தரைப்பகுதி புனரமைக்கப்படுகின்றது என்று மோலோட்டமாக ஒரு தகவலை நேற்று முன்தினம் கொழும்பில் பாதுகாப்புப் படைத் தளபதிகளின் செய்தியாளர் மாநாட்டில் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் தயா சந்த கிரி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் பலாலி விமானத்தள ஓடுபாதை யைப் புனரமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது முழு
விமானத் தள முமே இந்தியாவின் நேரடிப் பங்களிப்போடு விஸ்தரிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக் கின்றது.
இதேவேளை பலாலி விமானத்தளம் இந்தியாவின் நேரடிப் பங்களிப்புடன் மீள விஸ்தரிப்புச் செய்யப்படுவது பற்றிய தகவல் நேற்றுமுன் தினம் படைத்தளபதிகள் கூட்டிய செய்தியா ளர் மாநாட்டில் சாடைமாடையாக வெளியி டப்பட்டதை அடுத்து கொழும்புக்கான இந்தி யத் தூதர் நிருபமா ராவ் நேற்று முற்பகல் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன.
பலாலி விமானத்தளம் இந்தியாவின் நேரடியான பங்களிப்புடன் புனரமைக்கப் படுவது பற்றிய செய்தியைப்
பகிரங்கப் படுத்தவேண்டாம் என்று இந்தச் சந்திப்பின் போது இந்தியத் தூதர் ஜனாதிபதியிடம் கேட் டுக்கொண்டார் என்றும் இதையடுத்து இது தொடர்பான செய்தி யைப் பகிரங்கப்படுத்தி பரபரப்பை ஏற் படுத்தவேண்டாம் என்று தென்னிலங்கை யின் பிரதான ஊடகங்களிடம் அரசின் தலை மையினால் உரிமையுடன் கோரப்பட்டது என்றும் அறியவந்தது.

நன்றி உதயன்
Reply
#2
இணையத்தில் பார்த்த இதனுடன் தொடர்புடைய செய்தி இணைப்பு ...

http://news.webindia123.com/news/showdetai...86694&cat=India
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)