Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்ப்பாணத்தில் பாரிய தேடுதலுக்குத் திட்டம்
#1
<b>யாழ்ப்பாணத்தில் பாரிய தேடுதலுக்குத் திட்டம்</b>
(எம்.எஸ். குவால்தீன்)


யாழ்ப்பாணத்தில் தாக்குதல்கள் மேற்கொள்பவர்களைக் கண்டுபிடிக்க யாழ்ப்பாண அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அதி பாதுகாப்பு வலயங்களுக்குள்ளும் அதன் புறப் பகுதிகளிலும் எதிர்வரும் சில தினங்களுக்குள் இத்திடீர் சோதனைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். அதி பாதுகாப்பு பிரதேசத்திற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மிக சாதுரியமாக உட்புகுந்திருப்பதாகவும் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் இரண்டு சாம் ஏவுகணைகள் உட்பட கனரக ஆயுதங்களை எடுத்து வந்திருப்பதாகவும் உளவுப் பிரிவு அறிக்கைகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால், இத்திடீர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லையெனவும் தங்கள் உறுப்பினர்கள் கடந்த 08 ஆம் திகதி முதல் யாழ்ப்பாண அரசியல் அலுவலகம் மூடப்பட்டு அரசியல் நடவடிக்கைகளிலிருந்து வெளியேறியிருப்பதாகவும் புலிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் வாரத்தில் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் இல்லையென்பதை யுத்த நிறுத்த கண்காணிப்பாளர் குழுவின் ஊடாக எழுத்து மூலம் பெற்றுக்கொண்டு தேடுதலை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வீரகேசரி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)