Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னார் பகுதியில் எண்ணை அகழ அரசு முஸ்தீபு!
#1
தமிழர் தாயகத்தின் இதயமாகவும், கேந்திர நிலையமாகவும், பெருமளவு இயற்கைக் கனியவளங்கள் புதைந்து கிடக்கும் இடமாகவும் கருதப்படும் மன்னார் வளைகுடாவில் உள்ள பெற்றோலிய வளங்களை அகழ்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு முனைப்புடன் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றது.
இந்தத் திட்டம் நடவடிக்கை தமிழர் தரப்பில் பெரும் சீற்றத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து தமிழர் தாயகத்தின் மூலவளத்தைச் சுரண்டி, சூறையாடி, கொள்ளையிடும் சதித் திட்டத்தை சிங்கள அரசு செயற்படுத்துவதாகத் தமிழர் தரப்புக் கருதுகின்றது.

இலங்கை அரசின் இந்தச் செயற்பாடு குறித்து விடுதலைப் புலிகளின் தலைமையும் கோபமுற்றிருப்பதாகத் தெரிகின்றது.
மன்னார் வளைகுடாவில் நிலத்துக்கடி யில் இருக்கும் மதிக்க முடியாத பெறுமதி கொண்ட கனியவளங்களை அகழ்வதற்கான பொறுப்புகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் வழங்குவதற்கான கேள்வி மனுக்களை அரசு வெகுவிரையில் உத்தியோகபூர்வமா கக் கோரவிருக்கிறது.
இவ்வாறான கேள்வி மனுக்கோரலில் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற் காக அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் தயாராகியிருக்கின்றன எனவும், இதன் பொருட்டு அரச உயர்மட்டத்தை அந்த நிறு வனங்கள் நாடியிருக்கின்றன எனவும் மிக நம்பகரமாகத் தெரியவருகிறது.
முன்னதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தான் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சில வாரங்களே இருக்கையில் இந்த விட யத்தை இலக்குவைத்து, தனியாக பெற்றோ லியத்துறை அமைச்சு என்ற ஒன்றை உருவாக்கினார். இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு, இந்த அகழ்வு வேலை களை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.
ஆழ்கடல் எண்ணெய் அகழ்வில் உல கில் முன்னணியில் இருக்கும் நாடு நோர்வே என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வடமேற்குக் கடலோரப் பரப்பில் எண்ணெய் அகழ்வு வேலைத் திட் டத்தில் இலங்கை இந்தியா நோர்வே கூட் டுச் செயற்பாடும் இடம்பெறும் என்றும்
இதற்கான பூர்வாங்கப் பேச்சுகள் முடி வடைந்து விட்டன என்றும்
ஒரு தகவல் தெரிவித்தது.
நோர்வேயின் புதிய பிரதமர், அண்மை யில் புதுடில்லிக்குச் சென்றிருந்த சமயத்தில் இதுகுறித்து புதுடில்லியில் ஆராயப்பட்டதா கவும் கூறப்பட்டது.
தமிழர் தாயகத்தை ஒட்டிய பிரதேசத்தில் தமிழர் தரப்பின் இணக்கமின்றி இத்தகைய பணிகளைத் தொடங்குவது சிக்கல்கள் நிறைந் தது என்பதை சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் ஏற்கனவே உணர்ந்திருப்பதாகக் கூறப்ப டு கின்றது.
எனினும், சேது சமுத்திரக் கால்வாய் அகலமாக்கும் திட்டத்துடன் இணைந்து இப் பணியும் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு ஓரளவு பாதுகாப்பு உண்டு என சில வட்டாரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.
இதற்கிடையில்
இந்தப் பணியைக் கையாளும் இலங் கைத் தரப்பின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரியாக பெருந்தொகை மாதாந்த வேதனத்துடன் முன்னாள் கூட்டுப் படை களின் தளபதியும், இராணுவத் தளபதியு மான லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பல கல்ல நியமிக்கப்பட்டிருக்கின்றார். இந்த வேலையுடன் அதன் பாதுகாப்பு விவகாரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டதா லேயே இத்தகைய ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார் என விடய மறிந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
இந்த விவாகரம் தொடர்பில் நேற்று "உத யனு'க்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலை வர் ஜாலிய மெதகம, மன்னார் வளைகுடாவில் இந்த அகழ்வுகளை மேற்கொள்வதற் கான கேள்விமனுக்கள் கோரப்படவுள்ளன. ஆனால் அதற்கான கால எல்லை நிர்ண யிக்கப்படவில்லையென்றும்கூறினார்.
இது விடயத்தில் விடுதலைப் புலிகளிட மிருந்து எதிர்ப்பு வராதா என்று கேட்டபோது அதற்குப் பதலளித்த அவர், அவர்களுடன் இதுவிடயத்தை பேசுவது அரசின் பொறுப்பாக இருக்குமென்றும் கூட்டிக்காட்டினார்.
இவ்விடயத்தில் நோர்வேத் தரப்பு வெறும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதோடு ஒதுங்கிவிடுமா அல்லது முழு அளவில் தன்னையும் ஒரு பங்குதாரராக இணைத்துக் கொள்ளுமா என்பது இதுவரை தெரியவர வில்லை.
www.uthayan.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)