Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இராணுவ வன்முறைக்கு எதிராக போர்ப் பயிற்சி
#1
<b>இராணுவ வன்முறைக்கு எதிராக போர்ப் பயிற்சி- மாணவர்கள் எச்சரிக்கை! நாளை முதல் முழு அடைப்புக்கு அழைப்பு!!</b>
யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை துணைவேந்தர்இ நாடாளுமன்ற உறுப்பினர்இ பேராசிரியர்கள்இ மாணவர்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு யாழ்ப்பாண மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.


இராணுவத் தாக்குதலுக்குப் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் யாழ். குடாநாட்டில் மாணவர்கள் மீதும் மக்கள் மீதும் சிறிலங்கா இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களை இனியும் பொறுத்திருக்க நாம் தயாரில்லை. மக்களுக்கு முன்னோடியாக மாணவர்கள் கிளர்ந்தெழுந்து எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற ஆவேசத்துடன் அவர்கள் அனைவரும் போர்ப் பயிற்சி பெற வேண்டும் என்று மாணவர் அமைப்பு முடிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை முதல் குடாநாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும் யாழ். கல்விச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தகவல்: புதினம்
[size=14] ' '
Reply
#2
தமிழ்மக்களின் தற்பாதுகாப்பிற்காக புலிகளால் போர்ப் பயிற்சிகள் இலவசமாய் வளங்கப் படுவதாய் அறிந்தேன்... அங்கு பயிற்சி பெற்றவர்கள்தான் பொங்கிவரும் மக்கள் படையில் இணைந்து வருவதாய் சொல்கிறார்கள்...... எப்படியானாலும் தமிழ்மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் தருணம் வந்தாச்சு....
::
Reply
#3
ஆயுத ஏந்திப் போராடி தமது உரிமைகளைப் பெற முதற்கட்டமாக 500 மாணவர்கள் தற்பாதுகாப்பு பயிற்சி பெற முன்வருகை
யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் அடாவடித்தனங்கள் மற்று வன்முறைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி தமது உரிமைகளை வென்றெடுப்பது என யாழ் பல்கலைக் கழம மற்றும் மாவணவ சமூகம் முடிவு எடுத்துள்ளது.

இன்று காலை யாழ் பரமேஸ்வராச் சந்தியில் இடம்பெற்ற கண்காணிப்புக் குழு அலுவலகம் நோக்கி மனுக் கையளிக்கச் சென்ற மாணவ சமூகத்தினர் இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டதை அடுத்து பல்கலைகழகத்தில் மாணவ சமூகத்தினர் அவசர ஒன்றுகூடல் ஒன்றை நடத்தி இனிமேல் மாணவர்கள் ஆயுத பயிற்சி பெற்று இராணுவத்தினருக்கு எதிராக உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்படுத என தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஒடுக்கு முறைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தம்மைத் தயார்படுத்தவதற்கான தற்காப்பு போர் பயிற்சியினை பெறுவதற்கு பெருமளவான மாணவர்கள் முன்வந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளிடம் கோரி இராணுவ அடக்கு முறையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்பு போர்ப் பயிற்சியினை பெறுவதற்கு 500ற்கு மேற்பட்ட மாணவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இராணுவ வன்முறை சம்பவங்களுக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை நண்பகல் அளவில் நடைபெற்ற யாழ் ஒன்றியத்தின் இவசர சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதினம்
Reply
#4
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாகி திலீபனின் கனவுக்கு சிங்கள தேசமே வழி சமைத்து கொடுப்பதைத் தான் இப்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.
[size=14] ' '
Reply
#5
மக்கள் படையைபற்றி இன்னும் இராணுவம் சரியாய் புரிந்துகொள்ளவில்லைப் போல. பொறுத்திருந்து பார்ப்பம். :evil: :evil: :evil:
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#6
யாழில் தமிழ் மக்கள் எழுச்சி- சிங்கள தேசமும் சர்வதேசமும் செய்ய வேண்டியது என்ன?: கா.வே.பாலகுமாரன் விளக்கம்.

சர்வதேச சமூகமும் இந்த முறை விரைவான முடிவுகளை எடுக்க வேண்டும். நாங்கள் சமாதான முயற்சிகளுக்குத் தடையாக இருக்கப் போவதில்லை. இத்தகைய மாற்றங்களுக்குப் பின்னரும் கூட நாங்கள் உங்களோடு பேசிக்கொண்டு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

எங்களைப் பொறுத்தவரையில் மக்களுக்காகத்தான் வீதிக்கு இறங்கினோம்; ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தோம்; அதே மக்கள் சொன்னதற்காக அமைதி முயற்சிகளில் இறங்கி ஈடுபட்டோம்.

இப்போது அதே மக்கள் தாங்களாகவே வீதிக்கு இறங்கிப் போராட வருகிறபோது அதனுடைய விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

http://www.eelampage.com/?cn=22621
Reply
#7
Quote:எங்களைப் பொறுத்தவரையில் மக்களுக்காகத்தான் வீதிக்கு இறங்கினோம்; ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தோம்; அதே மக்கள் சொன்னதற்காக அமைதி முயற்சிகளில் இறங்கி ஈடுபட்டோம்.

இப்போது அதே மக்கள் தாங்களாகவே வீதிக்கு இறங்கிப் போராட வருகிறபோது அதனுடைய விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு உங்களுக்கு நன்றாகத் தெரியும்.


மக்களின் செய்தி இப்பிடி இருக்கு.... ஆனால் சிலது மக்கள் கஸ்ரப்படப் போகிறார்கள் எண்டும் எதோ இதுவரை மக்கள் கஸ்ரப்படாமல் இருந்ததுமாதிரி நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்....?????
::
Reply
#8
இங்குள்ள சிங்கள நண்பர் ஒருவருக்கு இப்பத்தைய யாழ்ப்பாண நிலைமைகளை அவர் கேட்ட போது எடுத்துச் சொல்ல ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது மிகவும் பொறுமையாக அவர் கேட்டது எனக்கு ஒரு திருப்தியை தந்தது இறுதியாக அவர் சொன்னது பாலஸ்தீன மக்களைப் போல உங்கடையாட்களும் வீதியில் இறங்கிவிட்டார்கள் இது மக்கள் போராட்டமாகிவிட்டது இனி அரசாங்கத்தால் ஒண்டுமே செய்யேலாதெண்டு ............. ஒரு சாதாரண சிங்கள குடிமகனுக்கு தெரியிற இந்த விளக்கம் ஏன் படித்த அரசியில் வாதிகளுக்கு தெரியவில்லை (ஒருவேளை படிக்காத அரசியல்வாதிகள்தான் இருக்கினமோ)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)