12-18-2005, 11:24 PM
<b>சென்னை வெள்ள நிவாரண மைய ஜனநெரிசலில் 42 பேர் பலி</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41133000/jpg/_41133528_ambulanceshot203.jpg' border='0' alt='user posted image'> <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41133000/jpg/_41133536_stampedeafpindex203.jpg' border='0' alt='user posted image'>
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று வெள்ள நிவாரண விநியோக மையம் ஒன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், 37 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள உயர் நிலைப்பள்ளி ஒன்றே தமிழக அரசால் அப்பகுதிக்கான வெள்ள நிவாரண மையமாக அறிவிக்கப்பட்டு, அங்கு கடந்த இரண்டு தினங்களாக வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த இரவு முழுவதும் சென்னையில் கடுமையான மழை பெய்தது, இன்று காலையிலும் மழை தொடர்ந்திருக்கிறது. அந்நிலையில் இன்று காலையில் அங்கு நிவாரணம் பெறுவதற்காக சுமார் 4500 பேர் காத்திருந்திருக்கிறார்கள். அப்போது மக்கள் முண்டியடித்துச் சென்றபோதே இந்த கோரம் நிகழ்ந்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமையே நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான இறுதி தினம் என்று பரவிய வதந்தி காரணமாகவே மக்கள் முண்டியடித்துச் சென்றதாக நேரில் கண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு பதினைந்தாயிரம் ரூபாயும் வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காயமடைந்தவர்களைச் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தபின், செய்தியாளர்களிடம் நெரிசல் சம்பவம் குறித்து விளக்கினார்.
தனது அரசிற்கு கெட்ட பெயர் வாங்கித்தரவென்றே சிலர், வதந்திகளை கிளப்பி இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு காரணமாயிருந்திருக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய நிவாரணக்குழுக்களை அமைக்காமல், அரசியல் ஆதாயத்திற்காக தான்தோன்றித்தனமாக முதல்வர் ஜெயலலிதா இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ள முயன்றதால்தான் இத்தகைய விபத்துக்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என ஜனநாயக முற்போக்கு கூட்டணித் தலைவர்களும் இன்று சென்னையில் கூடி குற்றம்சாட்டினர். ஜெயலலிதா பதவி விலகவேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிவாரணப்பொருட்கள் பெறுவதற்கான அடையாள சீட்டுக்களை வீடுவீடாக சென்று விநியோகிக்கலாமா என அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
- பீபீசி தமிழ்