Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எமது பயணம் தொடங்கி ஏழாவது நாள்.
#1
அந்த இருளைக் கிழித்தபடி எதிரியின் ரேசர் ரவைகள் இலக்கின்றி எட்டுத் திசையும் பறந்து கொண்டிருந்தன. அந்த வெளிச்சத்தில் நாலைந்து தலைகள் எனக்;கு முன்னே நீந்திக் கொண்டிருப்பது தெரிந்தது. எதிரியின் பல டோறாக்கள் சுற்றிச் சுழன்று எம்மைத் தேடிக்கொண்டே இருந்தன. ஆனால் அவர்களுக்கு கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டியபடி அவர்களின் படகுகளில் இருந்து விலகிச் செல்லத் தொடங்கினோம். நீண்ட நேரம் கடலைச் சல்லடை போட்டுத் தேடி அவர்களின் முயற்சி தோல்வி அடைய, தோல்வியுடன் அந்த டோறாக்கள் செல்லத் தொடங்கின.....

இப்பொழுது எனக்கு முன்பு நாலைந்து பேர் நீந்திக்கொண்டிருப்பது தெரிந்தது. நீச்சலில் வேகம் எடுத்தால் முன்னே செல்பவர்களைப் பிடிக்கலாம் ஆளால் ஏற்கனவே டோறாக்களின் கண்களிலிருந்து நீந்தி நீந்தி உடற்சோர்வும், களைப்பும் அடைந்திருந்தாலும் இனிவரப்போகும் கணப்பொழுதுகளையும், திக்குத் திசை தெரியாத இந்தக் கடற்பரப்பும் தனிமையும் மனதில் சோர்வை அகற்ற நீச்சலில் புதுவேகம் பிறந்தது.

தலையைச் சற்றுத் தூக்கி முன்னே செல்பவர்களை பார்த்தேன். நாலைந்து தலைகள் தெரிந்த இடத்தில் இப்போது இரண்டு தலைகள் மட்டுமே தெரிந்தன. பின்னால் திரும்பிப் பார்த்தேன், யாரையும் காணவில்லை. அவர்கள் எங்கே? அடிக்கடி மாறும் நீரோட்டங்களுக்கும், காற்றிற்கும் வேறெங்காவது சென்றிருப்பார்களோ? இல்லாவிட்டால் சுழிகள் ஏதாவது இழுத்து... இருக்காது... இருக்காது. அவர்களுக்கு ஒன்றுமே நடந்திருக்காது. மனதைத் திருப்திப்படுத்தியபடி, நீச்சலிலே என் முழுக்கவனத்தையும் செலுத்த முனைந்தேன். முன்னே சென்ற இருவரும் இப்போது ஒன்று சோர்ந்து விட்டார்கள். அவர்கள் என்னைக் கண்டிருக்க வேண்டும். எனது பக்கமாக திரும்பி நீந்தி வருவது தெரிந்தது.

"அதில வறது யார்?" வர்மனின் குரல் காற்றோடு கலந்து என் காதில் முட்டியது. "ஆ.. நான் இளநங்கை" "இளநங்கையோ ! வாங்கே, பின்னுக்கு யாரும் நீந்தி வருகினமோ..?" எனக்குப்பின்னுக்கு ஒருவரும் இல்லை. ஆனா முன்னாலை நாலைஞ்சு தலையள் தெரிஞ்சது. இப்ப நீங்கள் இரண்டு பேரும்தான் நிக்குறீங்கள். மற்றாக்கள்............" ஒண்டில் அவயைள் நீந்திப் போயிருக்கவேணும். இல்லையெண்டால் நீரோட்டத்தின்ர போக்கிற்கு போயிருக்க வேணும். "விடிஞஇசா நீந்தேலாது. இது அவன்ரை பிரதேசமாகத்தான் இருக்கவேணும் முதல் கரையைத்தேடி நீந்துவம்" நீண்ட நேரம் ஏதும் பேசசாமல் நீந்திக்கொண்டே இருந்தோம் தூரத்தில் சம இடைவெளியில் பொட்டுப் பொட்டாக வெளிச்சங்கள். பக்கத்தில் வந்த கலையமுதனிடம், "கலையமுதன் மின்கம்ப வெளிச்சங்கள் தெரியுது. நாங்கள் நாங்கள் கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறம். எப்படியும் அஞ்சாறு கடல் மைல்களுக்கை கரை வரும்" மனதில் ஒரு நம்பிக்கை, மூச்சுக் பேச்சின்றி வெளிச்சத்தை இலக்கு வைத்து நீந்தத் தொடங்கினோம். களைப்புச் சோர்வு ஏற்படும் போது எல்லாம் "இப்படியே உடலோட போயிடணும்" என்ற மனநிலை உருவாகும். ஆனால், போராட்டத்தில ஒரு போராளியை வளர்க்கப்படுற கஸ்ரத்தில அநியாயமாக சாகக்கூடாது என்ற வைராக்கியம் படர, மீண்டும் உற்சாகம் பொங்கும்.

"வெளிச்சப் பக்கம் இருந்து ஒதுங்கி அந்த இருட்டுப் பக்கமாக நீந்துங்கோ" என்று கூறிக்கொண்டு வர்மன் முன்னே செல்லத் தொடங்கினான். பலமணிநேரம் கடடோடும், காற்றோடும் போராடி கரையை அண்மித்தபோது, கால்கள் சோர்ந்து நடக்கத் திராணியற்று தள்ளாடின, களைப்பு மிகுதியால் தாகம் எடுத்தது. குளிரால் உடல் விறைத்தது. கண் எரிந்தது. மீண்டும் கடலை வெறுத்துப் பார்த்தோம் யாராவது நீந்தி வருகிறார்களோ என்று அப்படி ஒருத்தரையுமே காணவில்லை. தூரத்தில் வாகனங்களின் இரைச்சல். அவங்களாகத்தான் இருக்க வேண்டும். இவ்வளவு நேரமும் கஸ்ரப்பட்டு கடலோடு போராடி நீந்திக் கரை சேர்ந்ததற்கும் பயனில்லாமல் போவிடுமோ என்ற ஆதங்கம். இது யோசித்துக் கொண்டு நிக்கிற நேரமில்லை. முடிவெடுக்க வேணும். அந்த அடர்ந்த காட்டை ஊடறுத்துக்கொண்டு அந்த வாகனங்களின் "போக்கஸ்" வெளிச்சங்கள் தெரியத் தொடங்கின. இனி ஒரு நிமிசம் கூடத் தயங்கக் கூடாது. காட்டு மரங்களுக்குள் புகுந்து நடந்தோம். எங்கள் சோர்வுகள் எல்லாம் எங்கோ பறந்து போய்விட்டன. தட்டுத்தடுமாறி காட்டைப் பிரித்து நடக்கத் தொடங்கினோம். பெரிய புற்று ஒன்று தட்டுப்பட அதைக் காப்பாகப் பயன்படுத்திக் கொண்டு சருகுகளால் எம்மை மறைத்துக் கொண்டு, மூவரும் நிலத்தோடு நிலமாகிப் போனோம். எங்கள் வாய்களுக்குள் குப்பி பதுங்கிக்கொண்டது. எப்பவும் எந்த நேரத்திலையும் நாங்கள் எதிரியிட்டப் பிடிபடலாம். அதற்குள் எங்கள் வாய்கள் குப்பியைப் பதம் பார்த்துவிடும். வாகனங்கள் நின்று இராணுவங்கள் குதித்து, நாலாகக்கமும் ஓடி வரும் சத்தம் தெட்டத் தெளிவாகக் கோட்டது. எங்கள் உடல்களையும் " போக்கஸ்" வெளிச்சம் தொட்டுக்கொண்டிருந்தது. பூட்ஸ் கால்கள் மிகமிகக் கிட்டவாக ஓடி வந்துதொண்டிருத்தன. என் கால்களுக்கு மேலால் பூட்ஸ் கால் ஒன்று ஏறிக்கொண்டு போனது. எனது இதயம் நின்று, மீண்டும் இயங்கத் தொடங்கி இருந்தது.

"இஞ்சாலுப் பக்கத்தாலை ஒருத்தரும் வரேல்லைப் போல கிடக்குது" சிங்களத்தில் ஒருவன் பெரிதாகச் சத்தமிட்டான். |எல்லாம் ஏறு| மீண்டும் அதே சிங்களக்குரல் பூட்ஸ் கால்கள் வந்த வேகத்தில் திரும்பவும் வாகனங்களில் ஏறிப் பறந்து போயின. ஒரு சிறிய நிம்மதி பெருமூச்சி. ஈர உடுப்போடு ஒட்டிக் கொண்ட மண்ணையும் சருகுகளின் தூசையும் தட்டிக் கொண்டு எழும்பினோம். கடலை அண்டிய பிரதேசத்தில் இனி ஒரு நிமிசமும் நிக்கக் கூடாது. நிண்டால் ஆபத்தை விலைக்கு வேண்ட வேண்டி வரும் என மற்றவர்களுக்குக் கூறிக்கொண்டு, முன்பின் தெரியாத காட்டுப் பிரதேசத்தில் மெல்ல நடக்கத் தொடங்கினோம். கிழக்கு வானம் மெல்ல வெளுக்கத் தொடங்கியிருந்தது. நேற்று மதியம் குடித்த தண்ணீருக்குப் பிறகு வாய்க்குள் எதுவுமே செல்லவில்லை. நாவரண்டு, பசியும் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கத் தொடங்கியது. காட்டுத் தடிகள், முள்ளுகள் கீறிக் கீறி இரத்தமும் கசிந்து கொண்டிருந்தது. இன்றும் தண்ணீர் கிடைப்பதற்கரிய எந்தவித அறிகுறிகளையுமே காணவில்லை. உண்பதற்கு காட்டுப் பழங்கள் கூட கண்ணில் எத்துப்படவில்லை. ஆயினும் நடந்துகொண்டேயிருந்தோம். பகல்ம் சாய்ந்து இரவும் படர்ந்தது. களைப்பு, சோர்வு, அசதி மூன்றும் சேர்ந்து இனி நடக்க முடியாது என்ற நிலைக்குத்தள்ள அப்படியே ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டோம். மாறி மாறி மூவருமாக காவற் கடமையை சுறுசுறுப்பில் நாங்களும் உற்சாகமாக நடக்கத் தொடங்கி;னாம். ஆனால், எவ்வளவு துதரத்திற்கு எம்மால் நடக்க முடியும். எச்சிலைக் கூட்டி உமிழக்கூட நாவில் நீர் சுரக்க மறுத்தது. பசியால் வயிறு சத்தமிட்டுக் கொண்டிருந்தன. நீண்ட நேரம் நடந்திருப்போம். ஒளியிளந்த கண்களுக்கு ஒளியாய் அது தெரிந்தது. ||ஆ..... ஆ.... ஆ.... விளாங்காய்கள் தானே|| |ஓம் இள நங்கை. அது விளாங்காய்தான் ||. கால்களுக்கு எங்கிருந்தோ வேகம் கிடைத்தன. கிட்டவாகச் சென்று பார்த்தபோதுதான் அது அப்போதுதான் காய்க்கத் தொடங்கியிருக்கின்ற வெறும் பிஞ்சு னெ;பது தெரிந்தது. என்றாலும் எங்களுக்கு அந்த விளாங்யாய்கள் அமுதமாக இருத்தது. ஏற்கனவே வரண்ட தொண்டை அடைக்க அடைக்க உண்டோம். எங்கள் சட்டைப் பைகுள்ளுக்குள்ளும் நிரப்பிக்கொண்டு மீண்டும் நடக்கத் தொடங்கினோம். நெஞ்சு பொறுத்தது. தொண்டைக்குழிக்குள்ளால் பேச்சு வர மறுத்தது. கைச் சைகைகள் மூலம் நாம் பேசிக் கொண்டோம். எங்கள் நிலைமை புரிந்ததாலோ என்னவோ, மேற்கு வானம் இருளத் தொடங்கியது. சற்று நேரத்துக்குள் பெருத்த இடிமின்னலோடு மழை கொட்டத் தொடங்கியது. எங்கள் உள்ளங்களில் ஆயிரம் சிட்டுக்கள் சிறகடித்துப் பறந்தன. தண்ணீர்த் தாகம் தீர மரங்களில் இருந்து வடிந்த நீரை ஏந்தி ஏந்திக் குடித்தோம். நனைந்த நனைந்தே மீண்டும் நடக்கத் தொடங்கினோம். மீண்டும் இருள் சூழத்தொடங்கியிருந்தது. ஆனால் மழையோ விட்டபாடில்லை. எங்கள் கால்லளுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வுக்காக அமர்ந்தோம். நடக்கும் போது தெரியாத குளிர் இப்போது உடல்களை விறைக்க வைத்தது. பல்லோலு பல்லுக்கிட்டியது. எப்படியும் இதை அனுபவித்துத் தான் தீரவேண்டும்.

பள்ளி நாட்களின் ஞாபகம் மொல்ல எட்டிப்பார்த்தது. திசை தெரியாத காட்டிலே ஓர் நாள், கட்டுரை எழுதுவதற்காக ஆசிரியர் தலைப்புத் தந்தபோது எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது. இப்ப அதையே அனுபவிக்கிறம். இந்தத் துன்னங்களுக்கு மேலாலை துன்பங்தளை அனுபவித்த போதும், எவ்வளவு வைராக்கியத்தேடும் உறுதி;யோடும் இருக்கிறமெண்டால், தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் ஊட்டி வளர்க்கின்ற அண்ணன்தானே..... அண்ணா என்றதுமே உடலில் ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது. தூரத்தே யாணைகளின் பிளிறல் ஒலி, வனவிலங்குகளின் சத்தம், ஆந்தைகளின் அலறல் ஒலிகள் எல்லாம் சேர்ந்து பயமுறுத்தின. அவைகளுக்கு தங்கட இடத்தில வாழுறதுக்கு சுதந்திரம் இருக்குத் தானே. நாங்கள் சகித்துக் கொள்ள வேண்டும். மழை இப்போது முற்றாக விட்டிருந்தது. இயற்க்கை தன் வேலையில் கண்ணாக இருந்தது. வானம் வெழுத்தது. மனதில் தெம்பு இரந்தது. ஆனால் ககால்களுக்கு மட்டும் எதுவும் செய்யச் சக்தி இல்லை. ஒரு அடி கூட எடுத்து வைப்பது கடினமாக இருந்தது. எப்படியும் நடந்தே ஆகவேண்டும்.

"என்னாலை இனி ஏலாது" கலையமுதனால் முற்றாக நடக்கமுடியவில்லை. ||கலையமுதன் ! இன்னும் கொஞ்சத்துரத்துக்க பாதை பிடிச்சிடுவம். அங்கால எங்கட முகாம் எல்லாம் இருக்கும் பிறகு எங்களுக்கு ஒரு கஸ்ரமும் இராது|| மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்க முயன்று வெற்றியும் பொற்றோம். ஆனால் எங்கட துரதிஸ்ரம்... இவ்வளவு நாளும் நாம்நடந்ததற்குக் கூடப் பலன் இல்லாத முடிவாக இருந்தது. காட்டில் பாதைகள், திசைகள் புரியாததால் மீண்டும் நடக்க ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்தோம். மநதில் நம்பிக்கை முதற்தடவையாக இல்லாது போனது. ஆனாலும் சோராது நடக்கத் தொடங்கினோம். ஏனெனில் இந்தப் பிரதேசம் அபாயகரமான பிரதேசம். எதிரி எம்மைத்தேடி மீண்டும் வரக்கூடும். நடந்தோம் வழியில் இலந்தை மரம் எம்மை வழிமறித்தது. பழங்கள் சிவந்து சிலிர்த்துப் போயிருந்தன. புதிய உற்சாகம் பிறந்தது. பசிக்களைப்புத் தீர உண்டுகொண்டிருந்தோம். தொலைவில் எங்கேயோ காடுகள் முறிக்கப்படும் சத்தம். சிங்களப் பேச்சுக்குரல்கள். எங்களுக்குப் புரிந்துவிட்டது. "அவங்கள் வாறாங்கள்"

எங்களால் ஓட முடியாது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆதலால் பற்றையாய் படர்ந்திருந்த இலந்தை மரங்களுக்குக் கீழேயே நிலையெடுத்துக் கொண்டோம். வாய்களுக்குள் குப்பி புகுந்து கொண்டது. அவங்கள் மிகமிகக் கிட்டவாக மரத்துக்கு கீழே வந்து இலந்தைப் பழங்களைப் பிடுங்குவதிலேயே குறியாக இருந்தனர். பல மணி நேரம் அந்தப் பிரதேசத்தை சுற்றிச் சுற்றிக் கொண்டே நின்றனர். எப்பவும் அவங்கள் எங்களைக் காணலாம். உடலைக் கொள்ளி எறும்புகள் பதம் பார்க்கத் தொடங்கின. ஒன்றுமே செய்யமுடியவில்லை. கடிக்கக்கடிக்க மரக்கட்டை போல் படுத்திருந்தோம். மெல்ல மெல்ல அவங்கள் எங்கள் இடங்கள் இடங்களை விட்டு விலகுவதுபோல் தெரிந்தது. மெல்லத் தலையை எட்டிப் பார்த்தோம் அவங்கள் இல்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு வெளியே வந்து உடைகளைத் தட்டினோம். உடம்பெல்லாம் தடித்துப் போய் இருந்தது. இந்த இடத்தின் நிலமை புரிந்ததால் வேதனைகளை ஒதுக்கிவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினோம். தண்ணீர்த் தாகம் எடுத்தபோதெல்லாம் குட்டைகளின் நீரை அருந்திக் கொண்டோம். இப்படியே மீண்டும் ஒருநாள் மீண்டும் கழிந்து கொண்டது. இன்று வாய்க்குள் புக ஒன்றுமே இருக்கவில்லை. வயிற்றுக்குப் புரியுமா எங்கள் கஸ்ரம். அது சத்தம் போட்டுக் கொண்டே இருந்தது. கலையமுதனைப் பார்க்க பாவமாக இருந்தது. உண்மையிலேயே அவனுக்கு இயலாது. எங்களுக்காக அவன் நடந்துகொண்டிருந்தான். சற்றுத் தொலைவில் கிராமம் ஒன்று இருப்பதற்கான அறிகுறிகள் தெ;ன்னடத் தொடங்கின. வழியில் சின்னச் சின்னக் குடிசைகள் தென்னட்டன. வீதியில் இனி அவதானமாக நடக்க வேண்டும். வந்த ஓரிருவர் வோகமாக நடக்கத் தொடங்கினர். வந்தவர்கள் யார் என்று புரிய நாங்கள் அந்த இடத்தைவிட்டு வேகமாக விலகவேண்டி இருந்தது. நடந்தோம் இப்போது சின்னச் சின்ன மலைகள் எம்முன்னே வழிமறித்தன. மீண்டும் இருள் சூழத் தொடங்கியது. ஒருவரோடு ஒருவர் கதைப்பதற்குக்கூட சக்தி இல்லை.

இருள் மறைந்து ஒளி பிறந்தது. ||நடப்பம்|| வர்மன் சொன்னபோது ஓம் என்று தலையசைத்துக் கொண்டேன். ஆனால் கலையமுதனின் நிலை பரிதாபமாகவிருந்தது. என்னாலை இனி ஒரு காலடிகூட எடுத்து வைக்கேலாது, என்னை விட்டிட்டு நீங்கள் போங்கோ|| கலையமுதன் இண்டைக்கு எப்படியும் நாங்கள் போய்ச் சேர்ந்திடுவம். இண்டைக்கு மட்டும் நடப்பம்|| வர்மன் சொன்னபோது , "அனியாயமாக என்னாலை நீங்களும்; சாகாமல் நீங்கள் விட்டிட்டுப் போங்கோ. ||என்னெண்டு போறது, நாங்கள் மூண்டுபேரும்தான் வெளிக்கிட்டநாங்கள். மூண்டுபேரும்தான் போய்ச் சேரவேண்டும். நடப்பம் கலையமுதன் இண்டைக்கு மட்டும்தானே. ||உண்மையாத்தான் சொல்லுறன் என்ரை கண்ணெல்லாம் இருண்டுகொண்டு வருகுது. கால் சேர்ந்து போயிற்று என்னைக் காப்பாற்ற வேணும் எண்டு நினைச்சா நீங்க கெதியாய் போய் இடத்தக் கண்டுபிடிச்சு என்னைக் காப்பாற்ற முயற்சி எடுங்கோ நான் இதிலேயே இருப்பன். கடைசிவரை எதிரியிட்ட நான் பிடிபடமாட்டன். என்னட்டை குப்பி இருக்குது. போங்கோ... கெதியாப் போங்கோ....|| கலையமுதனின் நிலைமை எமக்குப் புரிந்ததுதான். என்றாலும் திக்கற்ற காட்டில் கதியற்று அவனை விட்டுச் செல்ல மனமில்லை. ஆனால் அவனைக் காப்பாற்றவேண்டும். கண்களில் நீர் பொங்கி வழிந்தது. விடைபெற்று நடந்தோம். இப்போது எங்கள் நடையில் பெரு உத்வேகம் இருந்தது. இன்னும் உண்பதற்கு உணவேதும் கிடைக்கவில்லை. தண்ணீர் மட்டும் தாராளமாகக் கிடைத்தது. இப்படியே ஒருநாள் மறைந்து புதிய நாள் பிரவாகித்தது. எமது பயணம் தொடங்கி ஏழாவது நாள். இனி எம்மாலும் முற்று முழுதாக இயலாத நிலை. ஆனாலும் கலையமுதளைக் காப்பாற்றவேண்டும். சோர்ந்தபோதும் நடந்தோம். சற்றுத் தூரம் நடந்திருப்போம். காட்டை ஊடறுத்து உருபாதை தெரிந்தது. அதனால் சைக்கில் சென்ற அடையாளம் தெரிந்தது. நிச்சயம் இது எங்கடை முகாமுக்குப் போகும் பாதையாக இருக்க வேண்டும். சொர்க்கத்தை கண்டது போல் ஒரு ஆனந்தம். என்றாலும் ஒரு கலக்கம்.

பாதையில் நடக்காது பாதைவழி காட்டுக்குள் இறங்கி நடந்தோம். ஒரு மணி நேரம் இறங்கி நடந்திருப்போம். எங்கேயோ பேச்சுக்குரல் கேட்டது. சில இளைஞர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஒருவரின் கையில் ஆயுதம் இருந்தது. தெய்வத்தை நேரே கண்டது போன்ற மகிழ்ச்சி. அவர்களும் எங்களைக் கண்டுவிட்டார்கள். ஆயுதம் வைத்திருந்தவன் ஆயுதத்தை தயார்படுத்தினான். வாய்க்குள் குப்பியை வைத்துக்கொண்டு கைகளை உயர்த்திக் காட்டினோம். அவர்களுக்கு நாம் யார் என்று புரிந்துவிட்டது. எம் நிலையையும் உணர்ந்து கொண்டார்கள். போராளிகளில் வந்த ஒருவன் குளுக்கோஸ் எடுத்துக் கொண்டு ஓடிவந்தான். எம்மை அன்பாய் ஆதரவாய் கூட்டிச் சென்றார்கள். அவர்களுக்கு கலையமுதனின் நிலையைப் பற்றிச் சொன்னோம். எம் களைக்பு, சோர்வு, இயலாமை எதையும் பொருட்படுத்தாது கலையமுதனைக் காப்பாற்றும் நோக்கோடு மற்றைய போராளிகளோடு சேர்ந்து நாமும் புறப்பட்டோம். அந்த இடம் கலையமுதன் நின்ற இடம். அதிலேயே அவன் படுத்திருந்தான். ||கலையமுதன்! கலையமுதன் உன்னைக் காப்பாற்ற வந்திட்டம்" எனக் கத்தியபடி ஓடனம். ஆனால் அவனில் அசைவு எதையுமே காணவில்லை. கிட்டவாகச் சென்று பார்த்தால் எமக்கு பலத்த ஏமாற்றம். அவன் வீரச்சாவு அடைந்துவிட்டான்.

கலையமுதன்.... வெளிநாட்டிலிருந்து எமது போராட்டத்தில் இணைந்த போராளி. இன்று அமது மண்ணின் மடியில் மரணத்தை வென்று விட்டான். அவனின் வீரத்திற்காக தலை சாய்ந்தோம். மீண்டும் புது வேகமுடன் குனிந்த தலையை நிமிர்த்திக் கொண்டோம். இப்போது அவனையும் அவனது இலட்சியங்களையும் சுமந்தபடி நடக்கத் தொடங்கினோம்.

நன்றி..
தாயகம்
Reply
#2
நெஞ்சை உருக்கும் உண்மைக் கதையைத் தந்தமைக்கு நன்றி. போராளிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானதென்று அறிவேன். ஆனால் இதனை வாசித்து முடித்தபின்னர் என் இரு கரங்களையும் அவர்களை எண்ணிக் குவித்தேன்.

Reply
#3
போர்க்கள வாழ்வு என்பது எவ்வளவு இடர்களின் மத்தியில் நிகழ்கிறது என்பதைப் போராளிகளின் அனுபவத்தோடு தந்த நிஜமோடும் கதைக்கு நன்றிகள்..! நிச்சயம் இப்படியான பதிவுகள் இங்கு அவசியம்..! இலகுவாக நகர்த்திச் செல்லக் கூடிய வாழ்க்கைக் களத்தில் கூட வாழ வழி தெரியாமல் திக்குமுக்காடும் மனிதர்கள் நிறைந்த இடத்தில்..போராளிகள்..அதுவும் எங்கள் சகோதரர்கள் சகோதரிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவற்றை அவர்கள் தாண்டி வரும், வென்று வரும் நிகழ்வுகளையும் இவர்களுக்கு காட்ட வேண்டும்...!

இவைதான் இங்கு அவசியமான கதைகள்..! காலத்தின் தேவை கருதி தந்த கதைக்கு மீண்டும் நன்றிகள்..! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)