Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிசுவைக் காப்பாற்றிய பூனை
#1
<span style='font-size:25pt;line-height:100%'><b>சிசுவைக் காப்பாற்றிய பூனை</b></span>
[17 - April - 2006] [Font Size - A - A - A]

ஜெர்மனியில் வீடொன்றின் வாசலில் நள்ளிரவில் கடும் குளிரில் கைவிடப்பட்டிருந்த சிசுவொன்றைப் பூனையொன்று காப்பாற்றியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் சனியன்று தெரிவித்தார்.
வீட்டில் உள்ள எவராவது தூக்கத்திலிருந்து எழும்பி வந்து கதவைத் திறக்கும் வரை பூனை பெரிதாக கத்தியுள்ளது. "அப்பூனை ஒரு கதாநாயகன்" என்று பொலிஸ் பேச்சாளர் உவே பேய்யர் தெரிவித்தார்.

பூனையின் பலத்த குரலினால் எழுந்து வெளியே வந்த வீட்டு உரிமையாளர் கடும் குளிரால் உயிருக்கு ஆபத்தேற்பட்டிருந்த நிலையிலிருந்து புதிதாக பிறந்த அந்த ஆண் குழந்தையைக் காப்பாற்றினார்.

வியாழனன்று அதிகாலை 5.00 மணிக்கு குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இரவு வெப்பநிலை 0 0 செல்ஸியஸிற்கு சரிவடைந்திருந்ததனால் குழந்தையின் உடல் வெப்பநிலை சிறிது குறைவடைந்திருந்தது. குழந்தையின் தாயைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ்பேச்சாளர் குறிப்பிட்டார்.

http://www.thinakkural.com/news/2006/4/17/...ews_page661.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: