Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொலிசார் பொது இடத்தில் காதல் ஜோடிகளை தாக்கும் வீடியோ
#1
<b>இந்தியாவில் பொலிசார் பொது இடத்தில் காதல் ஜோடிகளை தாக்குவதாக காட்டும் வீடியோ ஒலிபரப்பப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டம்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41144000/jpg/_41144342_couples.jpg' border='0' alt='user posted image'>
இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் பொதுமக்களுக்கான பூங்கா ஒன்றில் பொலிசார் காதல் ஜோடிகளை தாக்குவதாக காட்டும் படங்கள் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதையடுத்து மீரட் நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

பொலிசார் இளம் பெண்களை குத்துவதாகவும் முடியைப் பிடித்து இழுப்பதாகவும் படங்கள் அமைந்திருந்ததையடுத்து பொலிஸ்காரர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுஇடங்களில் சிலர் அசிங்கமாக நடந்துகொள்வதை சமாளிக்கவே பொலிசார் முயன்றிருக்கிறார்கள் என்றாலும் இந்த சம்பவத்தில் நிச்சயம் அவர்கள் அளவுக்கதிகமாக நடந்துகொண்டுள்ளனர் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பாக ஆண்-பெண் சந்தித்துப் பழகுவது இந்தியாவில் வரவேற்கப்படுவதில்லை என்றாலும் பூங்கா, கடற்கரை மற்றும் பல பொது இடங்களில் அடிக்கடி ஜோடிகள் ஒருவரையொருவர் சந்திக்கவே செய்கிறார்கள்.

- பீபீசி தமிழ்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)