Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு தமிழ்ப் பெண்ணின் சோகம்
#1
மலேசியா: ஒரு தமிழ்ப் பெண்ணின் சோகம்
டிசம்பர் 28, 2005

கோலாலம்பூர்:

<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/kaiammal-315.jpg' border='0' alt='user posted image'>
கண்ணீருடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் காளியம்மாள்

முஸ்லீமாக மாறிய கணவரின் உடலை எரிக்க அவரது இந்து மனைவிக்கு மலேசிய உயர் நீதிமன்றம் அனுமதி தர மறுத்துவிட்டது.

மலேசியாவில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய தமிழர் மூர்த்தி (வயது 36). இவரது மனைவி காளியம்மாள். கடந்த வருடம் மூர்த்தி இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். தனது பெயரை முகம்மது அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார். காளியம்மாள் தொடர்ந்து இந்துவாகவே இருந்து வந்தார்.

திடீரென மதம் வேறுபட்டாலும் இருவருமே மனம் ஒத்த தம்பதிகளாய் வசித்து வந்தனர். 1997ம் ஆண்டு இமயமலையில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலேசிய ராணுவப் படையில் இடம் பெற்றவர் மூர்த்தி.

ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 20ம் தேதி மூர்த்தி காலமானார். இதையடுத்து அவரது உடலை இந்து முறைப்படி எரிப்பதா அல்லது இஸ்லாமிய முறைப்படி புதைப்பதா என்ற பிரச்சனை எழுந்தது.

தனது கணவரின் உடலை எரிக்க அனுமதிக்க வேண்டும் என காளியம்மாள் கோரியதை அந் நாட்டு அதிகாரிகள் ஏற்கவில்லை. முஸ்லீமாக மாறிய மூர்த்தியின் உடலை புதைக்க வேண்டும் என்றனர்.

இந்தப் பிரச்சனையால் உடல் மலேசிய மருத்துவமனை பிணக் கிடங்கில் வைக்கப்பட்டது.

அவர் கடந்த வருடம் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டதால் இஸ்லாமிய முறைப்படி தான் அவரது உடல் புதைக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய தலைவர்களும், இஸ்லாமிய நீதிமன்றமும் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து காளியம்மாள் மலேசிய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷெரீப், இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் மலேசியாவில் இந்து, புத்த, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களும் இணைந்து வசிக்கின்றனர்.



தற்போது தங்களின் கணவரை இந்து முறைப்படி தகனம் செய்ய சம்மதித்தால், பிற மதத்தினர் போராட்டம் நடத்த வசதியாகிவிடும். அதனால் மூர்த்தியின் உடலை இஸ்லாமியத்துறையிடம் ஒப்படையுங்கள்.

முஸ்லீமாக மதம் மாறியவர் இஸ்லாமிய விதிப்படி புதைக்கப்படுவது தான் முறை என்று இஸ்லாமிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, அதை பரிசீலிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று காளியம்மாளிடம் தீர்ப்பளித்தார் நீதிபதி.

ஆனால், காளியம்மாள் பேசுகையில் மூர்த்தி இஸ்லாமியராக மாறியதற்கு எந்த சான்றிதழும் இல்லை. வெறும் வாய் வார்த்தை மூலமே அவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறினார். அவரது உடலை யார் வேண்டுமானாலும் எடுத்து செல்லட்டும், ஆனால், ஆன்மா என்னிடம் தான் இருக்கும் என்று கண்ணீர் மல்கக் கூறிவிட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார் காளியம்மாள்.

இதையடுத்து இஸ்லாமிய முறைப்படி மூர்த்தியின் உடல் புதைக்கப்பட்டது.

மலேசிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்த நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு மிகப் பெரும் பின்னடைவாகும் என காளியம்மாளின் வழக்கறிஞர் சிவநேசன் கூறியுள்ளார்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)